சிரிக்க மட்டும் .......

மணக்கால் அய்யம்பேட்டை | 1:31 PM | | Best Blogger Tips

( நகைச்சுவைகளை நகைச்சுவையாக மட்டும் பாருங்கள் )
கணவன் : "3நாளா தொடர்ந்து பீன்ஸ் பொரியல் பண்ணுறீயே, இனி ஒரு மாசம் நான் பீன்ஸ் சாப்பிட மாட்டேன்!!!!"
மனைவி : "இதையே, தினம் பீர் குடிக்கும்போதும் நினைக்கலாமே..????"
கணவன் : "நாளைக்கும் பீன்ஸ் பொரியல் பண்ணும்மா" 
மனைவி :      
சர்தார் 1 : எதுக்கு மேனேஜர் உன்னை திட்டினார்?
சர்தார் 2 : மேனேஜரோட நாயைக் காணோம்னு பேப்பர்ல அட்வர்டைஸ்மென்ட் கொடுக்க சொன்னார்.. நான் ' மேனேஜர் நாயைக் காணோம்'னு அட்வர்டைஸ்மென்ட் கொடுத்துட்டேன்..
சர்தார் 1 : ?????
நோயாளி; "கசப்பான மருந்து கூட உங்க கையால கொடுக்கிறப்போ
ஸ்வீட்டா இருக்கு...."SISTER
நர்ஸ் : "கர்மம்.."கர்மம். நான் உண்மையிலேயே 'ஸ்வீட்'..தான் குடுத்தேன்,இன்னிக்கு எனக்கு 'பர்த்டே'...."
நோயாளி; ????
டாக்டர் : எங்க ஹாஸ்பிடல் விளம்பரத்துக்கு ஒரு பன்ச் டயலாக் சொல்லுங்க
விளம்பரதரர்: கூட்டிட்டு வாங்க!! தூக்கிட்டு போங்க!!
டாக்டர் : ?????
பையன்: அப்பா ராமு என்னை அடிச்சுட்டார் பா ...
அப்பா: வாத்தியார் கிட்ட புகார் கொடுக்க வேண்டியதுதானே?
பையன்: வாத்தியார் பெயர் தான் ராமு.
அப்பா:?????
பேசண்டின் கணவர் : டாக்டர் என் மனைவி ஓவரா டி.வி. பாக்குறா''
டாக்டர் : எந்த அளவுக்கு பாக்குறாங்க?
பேசண்டின் கணவர் : ''கரண்ட் கட்டானாலும், டார்ச் அடிச்சி பாக்குற அளவுக்கு!!!
டாக்டர் : ??????
ஆசிரியர் : கஞ்சன் என்ற தலைப்பில் கட்டுரை எழுது
மாணவன் :சார், பேப்பர், இங்க் எல்லாம் வேஸ்ட் ஆகிடும். நான் சொல்றேன் கேட்டுக்கோங்க
ஆசிரியர் : ???????
நண்பன் 1: படிக்கும் போது தூக்கம் வந்தா என்ன செய்யனும்?
நண்பன் 2: நமக்குப் படிப்பு தான் வரல.. தூக்கமாவது வருதேனு தூங்கிடனும்
நண்பன் 1: ?????


நன்றி
Karthikeyan L