மனிதன் இறந்த பிறகு உடலில் நடக்கும் 5 வித்தியாசமான மாற்றங்கள்!

மணக்கால் அய்யம்பேட்டை | 2:49 AM | Best Blogger Tips
மனித உடலில் உள்ள உயிர் பிரிந்த உடன் நமது இயற்கை, தன்னுடன் நமது உடலையும் சேர்த்து நடத்துவது கிடையாது. இயற்கையான முறையில் மனித உடல்கள் அழிந்து போகும் காலங்கள் போய் தற்போது நாம் பயன்படுத்தும் நவீன சடங்குகளால் இத்தகைய இயற்கை முறையில் அழிவதை நாம் நேரில் காண முடியாமல் போகின்றது.

மண்ணில் புதைத்து அல்லது எரித்து உடலை நாம் தகனம் செய்யும் முறை பெரிய அளவில் ஏற்றுக் கொள்ள முடியாவிட்டாலும், இயற்கையாக அழுகி மண்ணோடு மண்ணாக தானே அழிவதை விட, மேல் கூறிய முறை நல்லது தான்.
முன்பு மனிதன் இறந்த உடலை தூரத்தில் சென்று வைத்து விட்டு, அது தானே அழுகி மறைந்து போகும்படி விட்டு வருவார்கள். அது மட்டுமல்லாமல் 2003 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்புகளின் படி பண்டைய காலத்தில் மனிதர்கள் இறந்தவர்களை புதைத்ததற்கு ஆதாரங்கள் கிடைத்துள்ளன.
இது வடக்கு ஸ்பெயின் நாட்டில் 350,000 ஆண்டிற்கு முன் நடந்த சம்பவத்தில் விளக்கப்பட்டுள்ளது.
இங்கு உடல் மக்கிப் போகும் போது என்ன மாற்றங்கள் ஏற்படுகின்றன? உடல் இறந்த பின் என்ன ஆகும் என்று 5 வித்தியாசமான விஷயங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
திசுக்கள் வெடித்து திறக்கும் இறந்த சில நிமிடங்களில் மனித உடல் அழுகத் துவங்கி விடுகின்றது. இதயத் துடிப்பு நின்றவுடன் உடல் குளிர்ந்த நிலைக்கு செல்கின்றது. இதை ஆல்கோர் மோர்டிஸ் என்று கூறுவார்கள்.
உடம்பின் வெப்பநிலை 1.5 டிகிரி பாரன்ஹீட் ஆகி ஒரு மணி நேரத்திற்கு பின் அறையின் வெப்பநிலைக்கு வருகின்றது. இந்த நேரத்தில் இரத்தத்தில் உள்ள கார்பன் டை ஆக்சைடு அமிலத்தன்மையை அதிகப்படுத்துகின்றது.
இதனால் திசுக்கள் வெடித்து, அதன் என்சைம்ஸ்களை வெளியிட்டு அவற்றை தன்னை தானே விழுங்கச் செய்கின்றது.

வெளிர் மற்றும் ஊதா நிறத்திற்கு மாறுவது
புவி ஈர்ப்பானது தனது முதல் காலை, மனிதன் இறந்த உடன் பதிக்கின்றது. அதாவது இறந்தவுடன் முழு உடம்பும் வெளிர் நிறத்திற்கு மாறி விடுகின்றது. அப்போது இரத்த அணுக்கள் கனமாக தோன்றுவதால், அவை தரையின் பக்கமாக ஈர்க்கப்படுகின்றன.
ஆகையால் இரத்த ஓட்டம் நின்றிருக்கும் இந்த சமயத்தில், உடம்பின் பின்பகுதியில் ஊதா நிறத்தில் புள்ளிகளும் படைகளும் ஏற்படுகின்றன. இதை லிவர் மார்டிஸ் என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள்.
அது மட்டுமல்லாமல் உடம்பில் எப்போது உயிர் போயிற்று என்றும் இதை கொண்டு தான் மருத்துவர்கள் கூறுவார்கள்.
de
உடலை இறுகச் செய்யும் கால்சியம்
இறந்த உடல் இறுக்கமாகவும், அசைப்பதற்கு கடினமாகவும் இருக்கும். இதை ஆங்கிலத்தில் ரீகர் மார்டிஸ் என்று கூறுவார்கள். இறந்து மூன்று அல்லது நான்கு மணி நேரத்திற்கு பின் இந்த செயல் ஆரம்பிக்கின்றது.
இதை தொடர்ந்து 12 மணி நேரத்தில் அதன் உச்சத்தையும் 48 மணி நேரத்தில் செயல் இழந்தும் போகின்றது. இது ஏன் நடக்கின்றது? தசைகளை சுற்றி உள்ள மென்படலங்களில் பம்ப் இருக்கின்றது.
இறந்த பின்னர் அது செயலிழந்த கால்சியத்தை அதிக அளவில் பாயச் செய்து, உடம்பில் உள்ள தசைகள் எல்லாம் இறுகிய நிலையில் வைக்கிறது. இது தான் ரீகர் மார்டிஸ்.
தன்னைத் தானே செரித்துக் கொள்ளுதல்
உடம்பு அழுகுவது பல படிகளை கொண்ட அழியும் முறையாகும். ரீகர் மோர்டிஸ் நிலை மெதுவாகவும் படிப்படியாகவும் நடப்பதால் அது முடியும் போது உடம்பு அடங்கி விடுகிறது.
அதாவது அது தன்னைத் தானே அழித்துக் கொள்ள தயாராகி விடுகிறது. அதற்கு கணையம் தனக்குள் உள்ள என்சைம்களை வெளியேற்றி உடல் தன்னையே அழித்துக் கொள்ள உதவுகிறது.
இதர நுண்கிருமிகள் இதனுடன் சேர்ந்து இந்த காரியத்தை விரைவுபடுத்துகின்றன. இதனால் வயிற்றின் கீழ் உள்ள உடம்பு பச்சை நிறத்திற்கு மாறி விடுகின்றது.
மெழுகால் மூடப்படுவது
உடல் அழுகிய நிலையில் உடம்பின் எலும்பு மட்டும் மீதமாகின்றது. ஆனால் சில உடல்கள் இந்த நிலைக்கு பதிலாக மெழுகால் மூடப்படுகின்றன.
உடல் குளிர்ந்த மண் அல்லது குளிர்ந்த நீரை தொடர்பு கொண்டால் அடிப்போசியர் என்ற ஒரு மெழுகு பேன்ற கொழுப்பு மிக்க பொருள் உருவாகின்றது. இது பாக்டீரியாக்களால் உருவாக்கப்படுகின்றது.
இந்த படலம் உள்ளிருக்கும் உறுப்புகளுக்கு பாதுகாப்பாக இருக்கின்றது. இறுதியாக புதைக்கப்பட்டாலும், எரிக்கப்பட்டு கரைக்கப்பட்டாலும், நாம் இறுதி சடங்கிற்கு பின் மண்ணையே சென்று சேர்கின்றோம். சிலர் மெழுகாக மாறக்கூடும்

நன்றி இணையம்