குழந்தைகளின், பிறவி குறைபாடுகளை கண்டறிந்து தீர்க்கும் முறையை விளக்கும்

மணக்கால் அய்யம்பேட்டை | 12:28 AM | Best Blogger Tips
குழந்தைகளின், பிறவி குறைபாடுகளை கண்டறிந்து தீர்க்கும் முறையை விளக்கும், மருத்துவர் இந்திராணி:
 
பிறந்த குழந்தைகளுக்கு, தொற்று நோய் ஏற்படாமல் இருக்க, சொட்டு மருந்து, அம்மை தடுப்பூசி போன்ற, முன் தடுப்பு முறைகளில் மட்டுமே, பெற்றோர் கவனம் செலுத்துவர். ஆனால், எந்த விதமான பிறவி குறைபாடு இருக்கிறது என்று கண்டுபிடித்து, அவற்றை நீக்கும் விழிப்புணர்வு இல்லை.குழந்தைகளுக்கு, பிறவி குறைபாடுகள் இருப்பது; பிறக்கும் போது தெரிவதில்லை; வளர வளரத் தான், தெரிய வரும். 

வளர்ந்த பின், அப்பிரச்னையை தீர்ப்பதற்கு சிரமமாக இருக்கும். அதனால், பிறந்த உடனே, "நியூ பார்ன் ஸ்கிரீனிங் டெஸ்ட்' எனும், மருத்துவ பரிசோதனை செய்வது நல்லது. இதற்கு, பல சமூக சேவை அமைப்புகளும் உதவுகின்றன. அமெரிக்காவில், பிறந்த குழந்தைக்கு, நியூ பார்ன் ஸ்கிரீனிங் டெஸ்ட் செய்ய வேண்டும் என்பது கட்டாயம். 

இம்மருத்துவ பரிசோதனை மூலம், பிறந்த குழந்தையின் பிறவி குறைபாடுகள் மற்றும் நோய் தாக்கம் பற்றி, எளிதில் கண்டறிந்து, தீர்க்க முடியும்.பிறந்த, 48 மணி நேரத்திலிருந்து, ஏழு நாட்களுக்குள், இந்த மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும். 

குழந்தையின் குதிகால் கட்டை விரலில் இருந்து, ஒரு சொட்டு ரத்தம் எடுத்து பரிசோதித்து, "நெகட்டிவ்' என, முடிவுகள் வந்தால், எந்தவித பிரச்னையும் இல்லை. "பாசிட்டிவ்' என வந்தால், மீண்டும் இதைப் போல், ஐந்து கட்டமாக சோதனை நடைபெறும். இதில் குறைபாடுகள் கண்டறிந்து, ஆரம்ப காலத்திலேயே, மருந்து மாத்திரைகள் மூலம் குணப்படுத்தலாம்.
 
பரிசோதனையில், 700 குழந்தைகளில், ஒரு குழந்தை என்ற விகிதத்தில், பிறவி குறைபாடுகள் வருகின்றன. ரத்த மாதிரியில், பாசிட்டிவ் முடிவுகள் வந்த குழந்தைகளின் குறைபாடுகளான, பெண் குழந்தைகள் பின்னாளில் ஆணாக மாறும் ஆபத்து, "ஹைப்போ தைராய்டிசம்' எனும் மூளை வளர்ச்சி குறைபாடு, "கேலக்டோபீனியா' எனும் தாய்ப்பால் ஒவ்வாமை போன்ற குறைகளை, முன்னரே கண்டறிந்து தடுக்கலாம்.
-நலம், நலம் அறிய ஆவல். என்றும் உங்கள் Shamvel.
இணைந்திருங்கள் எங்களுடன்...
பகிர்ந்துக் கொள்ளுங்கள் நண்பர்களுடன்...
http://www.facebook.com/mrksamivel?ref=tn_tnmn
http://www.facebook.com/pages/Leprosy-and-Disability-People/535050236511161
http://www.facebook.com/pages/நலம்-நலம்-அறிய-ஆவல்-என்றும்-உங்கள்-Shamvel/475332812532648
இந்த பக்கத்தை குறித்து உங்களுடைய கருத்துக்கள், விமர்சனங்கள், ஆலோசனைகள் வரவேற்க்க படுகிறது.
Tmt.மருத்துவர் இந்திராணி:

பிறந்த குழந்தைகளுக்கு, தொற்று நோய் ஏற்படாமல் இருக்க, சொட்டு மருந்து, அம்மை தடுப்பூசி போன்ற, முன் தடுப்பு முறைகளில் மட்டுமே, பெற்றோர் கவனம் செலுத்துவர். ஆனால், எந்த விதமான பிறவி குறைபாடு இருக்கிறது என்று கண்டுபிடித்து, அவற்றை நீக்கும் விழிப்புணர்வு இல்லை.குழந்தைகளுக்கு, பிறவி குறைபாடுகள் இருப்பது; பிறக்கும் போது தெரிவதில்லை; வளர வளரத் தான், தெரிய வரும்.

வளர்ந்த பின், அப்பிரச்னையை தீர்ப்பதற்கு சிரமமாக இருக்கும். அதனால், பிறந்த உடனே, "நியூ பார்ன் ஸ்கிரீனிங் டெஸ்ட்' எனும், மருத்துவ பரிசோதனை செய்வது நல்லது. இதற்கு, பல சமூக சேவை அமைப்புகளும் உதவுகின்றன. அமெரிக்காவில், பிறந்த குழந்தைக்கு, நியூ பார்ன் ஸ்கிரீனிங் டெஸ்ட் செய்ய வேண்டும் என்பது கட்டாயம்.

இம்மருத்துவ பரிசோதனை மூலம், பிறந்த குழந்தையின் பிறவி குறைபாடுகள் மற்றும் நோய் தாக்கம் பற்றி, எளிதில் கண்டறிந்து, தீர்க்க முடியும்.பிறந்த, 48 மணி நேரத்திலிருந்து, ஏழு நாட்களுக்குள், இந்த மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும்.

குழந்தையின் குதிகால் கட்டை விரலில் இருந்து, ஒரு சொட்டு ரத்தம் எடுத்து பரிசோதித்து, "நெகட்டிவ்' என, முடிவுகள் வந்தால், எந்தவித பிரச்னையும் இல்லை. "பாசிட்டிவ்' என வந்தால், மீண்டும் இதைப் போல், ஐந்து கட்டமாக சோதனை நடைபெறும். இதில் குறைபாடுகள் கண்டறிந்து, ஆரம்ப காலத்திலேயே, மருந்து மாத்திரைகள் மூலம் குணப்படுத்தலாம்.

பரிசோதனையில், 700 குழந்தைகளில், ஒரு குழந்தை என்ற விகிதத்தில், பிறவி குறைபாடுகள் வருகின்றன. ரத்த மாதிரியில், பாசிட்டிவ் முடிவுகள் வந்த குழந்தைகளின் குறைபாடுகளான, பெண் குழந்தைகள் பின்னாளில் ஆணாக மாறும் ஆபத்து, "ஹைப்போ தைராய்டிசம்' எனும் மூளை வளர்ச்சி குறைபாடு, "கேலக்டோபீனியா' எனும் தாய்ப்பால் ஒவ்வாமை போன்ற குறைகளை, முன்னரே கண்டறிந்து தடுக்கலாம்.

Via -நலம், நலம் அறிய ஆவல்.