சருமத்திற்கு ஏற்ற குளியல் சோப் எது?

மணக்கால் அய்யம்பேட்டை | 12:19 AM | Best Blogger Tips
சருமத்திற்கு ஏற்ற குளியல் சோப் எது? 

சோப் என்பது அழகை அதிகரிக்க உதவும் சாதனமாக இன்றைக்கு 
விளம்பரப்படுத்தப்படுகிறது. சந்தையில் தினந்தோறும் புதிது புதிதாய் 
சோப்புகள் குவிகின்றன. இதில் எந்த சோப் நல்ல சோப் என தேர்வு செய்வதில் குழம்பித்தான் போகின்றனர் அனைவரும். சிலர் ‘பேபி சோப் உபயோகித்தால் சருமம் மிருதுவாகும்’ என்கிறார்கள் சிலர். இன்னும் சிலரோ வாசனையான சோப்பே சிறந்தது என்கிறார்கள். உண்மையில் எதுதான் நல்ல சோப் என்று ஆலோசனை கூறுகின்றனர் அழகியல் நிபுணர்கள்.

பண்டைய காலங்களில் சோப் என்பது பயன்படுத்தப்படவில்லை. இயற்கையான பொருட்களை பயன்படுத்தியே தேய்த்து குளித்து வந்தனர். பின்னர் சிகைக்காய் அறிமுகமானது. மெல்ல சோப் என்ற பொருள் அழுக்கும் நீக்கும் சாதனமாக அறிமுகப்படுத்தப்பட்டது. சந்தையில் இன்றைக்கு 
எண்ணிலடங்காத பிராண்டு சோப்புகள் வந்து விட்டன. அவற்றில் வாசனையான சோப் என்று பார்த்து வாங்குவதை விட நமது சருமத்திற்கு ஏற்ற சோப் எது என்பதை பார்த்து வாங்கவேண்டும்.

சருமத்தின் தன்மை
பிறந்த குழந்தைகளுக்கு சருமத் துவாரங்கள் இருக்காது. அவர்களுக்கு பேபி சோப்தான் பெஸ்ட். வளர்ந்தவர்களுக்கு சருமத் துவாரங்கள் இருக்கும். அவர்கள் பேபி சோப் உபயோகிப்பது உகந்ததல்ல. சருமம் ரொம்பவே வறண்டிருந்தால், மாயிச்சரைசர் உள்ள சோப் நல்லது. 40 வயதுக்கு மேலானவர்கள் மாயிச்சரைசர் உள்ள சோப் உபயோகிக்கலாம். குழந்தைகளுக்கு அதை உபயோகித்தால் சருமத்தில் வட்ட வட்டமாக மச்சம் மாதிரி வரும். சருமத்தின் தன்மை தெரியாமல் மூலிகை கலந்த 
சோப்புகளையும் உபயோகிக்க வேண்டாம். அத்தகைய சோப்புகள் ஆன்டிசெப்டிக்காக செயல்பட்டாலும், சருமத்தை கருப்பாக்கி விடலாம்.

ஃபேஸ் வாஷ்
சோப்புகளில் ஆரம்ப பி.ஹெச் பேலன்ஸ் அளவே 7.5 அல்லது 8 ஆக இருக்கிறது. எந்தக் காரணத்தைக் கொண்டும் வாசனை அதிகமுள்ள சோப்புகளை தேர்ந்தெடுக்க வேண்டாம்.சோப்புக்கு பதில் ஃபேஸ் வாஷ் நல்லது. நமது முகத்தின் பி.ஹெச் பேலன்ஸ் 5.5. ஃபேஸ் வாஷின் பி.ஹெச் பேலன்ஸ் 6. இரண்டும் கிட்டத்தட்ட இணைந்து போவதால் சருமத்துக்கு நல்லது...
-நலம், நலம் அறிய ஆவல். என்றும் உங்கள் Shamvel.
இணைந்திருங்கள் எங்களுடன்...
பகிர்ந்துக் கொள்ளுங்கள் நண்பர்களுடன்...
http://www.facebook.com/mrksamivel?ref=tn_tnmn
http://www.facebook.com/pages/Leprosy-and-Disability-People/535050236511161
http://www.facebook.com/pages/நலம்-நலம்-அறிய-ஆவல்-என்றும்-உங்கள்-Shamvel/475332812532648
இந்த பக்கத்தை குறித்து உங்களுடைய கருத்துக்கள், விமர்சனங்கள், ஆலோசனைகள் வரவேற்க்க படுகிறது.
சோப் என்பது அழகை அதிகரிக்க உதவும் சாதனமாக இன்றைக்கு
விளம்பரப்படுத்தப்படுகிறது. சந்தையில் தினந்தோறும் புதிது புதிதாய்
சோப்புகள் குவிகின்றன. இதில் எந்த சோப் நல்ல சோப் என தேர்வு செய்வதில் குழம்பித்தான் போகின்றனர் அனைவரும். சிலர் ‘பேபி சோப் உபயோகித்தால் சருமம் மிருதுவாகும்’ என்கிறார்கள் சிலர். இன்னும் சிலரோ வாசனையான சோப்பே சிறந்தது என்கிறார்கள். உண்மையில் எதுதான் நல்ல சோப் என்று ஆலோசனை கூறுகின்றனர் அழகியல் நிபுணர்கள்.

பண்டைய காலங்களில் சோப் என்பது பயன்படுத்தப்படவில்லை. இயற்கையான பொருட்களை பயன்படுத்தியே தேய்த்து குளித்து வந்தனர். பின்னர் சிகைக்காய் அறிமுகமானது. மெல்ல சோப் என்ற பொருள் அழுக்கும் நீக்கும் சாதனமாக அறிமுகப்படுத்தப்பட்டது. சந்தையில் இன்றைக்கு
எண்ணிலடங்காத பிராண்டு சோப்புகள் வந்து விட்டன. அவற்றில் வாசனையான சோப் என்று பார்த்து வாங்குவதை விட நமது சருமத்திற்கு ஏற்ற சோப் எது என்பதை பார்த்து வாங்கவேண்டும்.

சருமத்தின் தன்மை

பிறந்த குழந்தைகளுக்கு சருமத் துவாரங்கள் இருக்காது. அவர்களுக்கு பேபி சோப்தான் பெஸ்ட். வளர்ந்தவர்களுக்கு சருமத் துவாரங்கள் இருக்கும். அவர்கள் பேபி சோப் உபயோகிப்பது உகந்ததல்ல. சருமம் ரொம்பவே வறண்டிருந்தால், மாயிச்சரைசர் உள்ள சோப் நல்லது. 40 வயதுக்கு மேலானவர்கள் மாயிச்சரைசர் உள்ள சோப் உபயோகிக்கலாம். குழந்தைகளுக்கு அதை உபயோகித்தால் சருமத்தில் வட்ட வட்டமாக மச்சம் மாதிரி வரும். சருமத்தின் தன்மை தெரியாமல் மூலிகை கலந்த
சோப்புகளையும் உபயோகிக்க வேண்டாம். அத்தகைய சோப்புகள் ஆன்டிசெப்டிக்காக செயல்பட்டாலும், சருமத்தை கருப்பாக்கி விடலாம்.

ஃபேஸ் வாஷ்

சோப்புகளில் ஆரம்ப பி.ஹெச் பேலன்ஸ் அளவே 7.5 அல்லது 8 ஆக இருக்கிறது. எந்தக் காரணத்தைக் கொண்டும் வாசனை அதிகமுள்ள சோப்புகளை தேர்ந்தெடுக்க வேண்டாம்.சோப்புக்கு பதில் ஃபேஸ் வாஷ் நல்லது. நமது முகத்தின் பி.ஹெச் பேலன்ஸ் 5.5. ஃபேஸ் வாஷின் பி.ஹெச் பேலன்ஸ் 6. இரண்டும் கிட்டத்தட்ட இணைந்து போவதால் சருமத்துக்கு நல்லது...
 
 Via-நலம், நலம் அறிய ஆவல்.