அப்பென்டிக்ஸ் என்ற பத்து
சென்ட்டி மீட்டர் நீளமுள்ள ஒரு பக்கம் மூடிய சுண்டுவிரல் போன்ற குழாய்; மனிதனின் பெருங்குடல் சிறுகுடலுடன் சங்கமிக்குமிடத்தில்
தொங்கிக்கொண்டிருக்கிறது. இதன் வேலை என்ன என்று தெரியததால் டார்வின் முதற்கொண்டு இன்னும் பலர் இதை பரிணாமத்தில் பயனற்றுப்போய் சுருங்கி
நின்றுவிட்ட எச்சம் என்று கூறி வந்தனர்.
டியூக் பல்கலைக்கழக பரிணாம
உயிரியல் வல்லுநர்கள் இதன் சிறப்புப் பயனை அண்மையில் தெரிவித்தனர்; இதில் குடிகொண்டிருக்கும் பேக்டிரியாக்கள் வங்கியில் போட்டு வைக்கும்
பணம் போலவாம்.
பெருங்குடலில்
வாழும் நன்மை செய்யும் பேக்டிரியாக்கள் பேதி, கழிசல் நோயின்போது
நீங்கிவிடுகின்றன. ஒரு மண்டலம் ஆண்டிபயாட்டிக் மருந்து சாப்பிட்ட பிறகும் இதேநிலை
ஏற்படுகிறது. அதன் பிறகு குடலுக்குத் தேவையான நன்மை பேக்டிரியாக்களை சப்ளை செய்வது
அப்பென்டிக்ஸ் எனப்படும் குடல் வால் தானாம்.
குடல்
வால் பரிணாமத்தில் தனித்தனியாக, ஆஸ்த்திரேலிய மார்சுப்பியேல்
உயிரனங்களில் ஒரு முறையும், பிரைமேட் எனப்படும் வாலில்லா
குரங்குகளில் இன்னொரு முறை தனியாகவும் தோன்றியிருக்கின்றது. இதன் உண்மையான வேலை
செல்லுலோஸ் மிகுந்த இலை தழைகளைச் செரிக்கச் செய்வதே. மனிதனுக்கு இது அவசியமில்லை
என்பதால் சுருங்கிவிட்டது என்று சொன்னார்கள், ஆனால் அது பேக்டிரியாக்களை
சேமித்து வைக்கும் வைப்பு நிலையம் என்பது இப்போது தெரிந்திருக்கிறது.
அப்பென்டிக்ஸின் தொந்தரவு தாளாமல் தவிக்கும்போது,
மருத்துவர்கள்
அதை உடனே நீக்கிவிடுகிறார்கள். வங்கிப்பணம் அத்துடன் தீர்ந்து
போகும்-பேக்டிரியாவைத்தான் சொல்கிறேன்!
- முனைவர். க. மணி, பயிரியல்துறை. பி எஸ் ஜி கலை
அறிவியல் கல்லூரி. கோயம்புத்தூர்
"Via -நலம், நலம் அறிய ஆவல்.
அப்பென்டிக்ஸ் என்ற பத்து
சென்ட்டி மீட்டர் நீளமுள்ள ஒரு பக்கம் மூடிய சுண்டுவிரல் போன்ற குழாய்; மனிதனின் பெருங்குடல் சிறுகுடலுடன் சங்கமிக்குமிடத்தில்
தொங்கிக்கொண்டிருக்கிறது. இதன் வேலை என்ன என்று தெரியததால் டார்வின் முதற்கொண்டு இன்னும் பலர் இதை பரிணாமத்தில் பயனற்றுப்போய் சுருங்கி
நின்றுவிட்ட எச்சம் என்று கூறி வந்தனர்.
டியூக் பல்கலைக்கழக பரிணாம
உயிரியல் வல்லுநர்கள் இதன் சிறப்புப் பயனை அண்மையில் தெரிவித்தனர்; இதில் குடிகொண்டிருக்கும் பேக்டிரியாக்கள் வங்கியில் போட்டு வைக்கும்
பணம் போலவாம்.
பெருங்குடலில் வாழும் நன்மை செய்யும் பேக்டிரியாக்கள் பேதி, கழிசல் நோயின்போது நீங்கிவிடுகின்றன. ஒரு மண்டலம் ஆண்டிபயாட்டிக் மருந்து சாப்பிட்ட பிறகும் இதேநிலை ஏற்படுகிறது. அதன் பிறகு குடலுக்குத் தேவையான நன்மை பேக்டிரியாக்களை சப்ளை செய்வது அப்பென்டிக்ஸ் எனப்படும் குடல் வால் தானாம்.
குடல் வால் பரிணாமத்தில் தனித்தனியாக, ஆஸ்த்திரேலிய மார்சுப்பியேல் உயிரனங்களில் ஒரு முறையும், பிரைமேட் எனப்படும் வாலில்லா குரங்குகளில் இன்னொரு முறை தனியாகவும் தோன்றியிருக்கின்றது. இதன் உண்மையான வேலை செல்லுலோஸ் மிகுந்த இலை தழைகளைச் செரிக்கச் செய்வதே. மனிதனுக்கு இது அவசியமில்லை என்பதால் சுருங்கிவிட்டது என்று சொன்னார்கள், ஆனால் அது பேக்டிரியாக்களை சேமித்து வைக்கும் வைப்பு நிலையம் என்பது இப்போது தெரிந்திருக்கிறது. அப்பென்டிக்ஸின் தொந்தரவு தாளாமல் தவிக்கும்போது, மருத்துவர்கள் அதை உடனே நீக்கிவிடுகிறார்கள். வங்கிப்பணம் அத்துடன் தீர்ந்து போகும்-பேக்டிரியாவைத்தான் சொல்கிறேன்!
- முனைவர். க. மணி, பயிரியல்துறை. பி எஸ் ஜி கலை அறிவியல் கல்லூரி. கோயம்புத்தூர்
"Via -நலம், நலம் அறிய ஆவல்.