இயற்கை உணவு இன்றியமையாத செல்வம்

மணக்கால் அய்யம்பேட்டை | 6:03 PM | Best Blogger Tips

தேங்காய் என்பது முக்கண் முதல்வன் எனக் கருதப்படும் சிவனாகவே கருதப்படுகிறது.எல்லா பூஜைகளிலும் இது முதன்மைப் பிரசாதமாக வழங்கப்படுகிறது.இந்த தேங்காயை தெங்கம்பழம் எனவே பழந்தமிழர் அழைக்கிறார்கள்.''இதையே பழமொழி நானூறில் நாய் பெற்ற தெங்கம் பழம்'' என்ற பழமொழியோடு அழைக்கிறார்கள்.

இந்தத் தேங்காய் வளர்ந்து பலன் கொடுக்க ஐந்தாண்டுகள் ஆகிறது.அது போல குழந்தையும் பள்ளிக்கு அனுப்ப ஐந்தாண்டுகள் ஆகிறது.தென்னையையும் பிள்ளை என்று அழைக்கிறார்கள்.பிள்ளையும் தென்னையும் ஒன்று என்பதற்காகவே தென்னம் பிள்ளை என்றழைக்கிறார்கள்!

தேங்காயையும்,வாழைப் பழமும்தான் நாம் கடவுளுக்கு பிரசாதமாய்ப் படைக்கிறார்கள்.இந்தத் தேங்காயும் மிகவும் உயர்வான இடத்தில் காய்க்கிறது.தரைக்குக் கீழ் விளையும் உணவுப் பொருட்கள் அகந்த மூலம் எனப்படும். தரைக்கு மேல் விளையும் உணவுப் பொருட்கள் கந்த மூலம் எனப்படும்.

தரைக்குக் கீழ் விளையும் பொருட்கள் பன்றிக்கானது.பன்றியே அகங்கார வடிவே.அதையே லிங்கோற்பவர் வடிவத்தில் உள்ள சிவனின் ஒளியுருவத்தின் கீழ் அடியைத் தொட்டதினால் சிவனே அவரது அகங்காரம் நீக்கி பன்றியுருவான விஷ்ணுவைத் தூக்கி எடுக்கிறார்.

தரைக்குக் கீழ் விளையும் பொருட்கள் அகங்காரத்தை உண்டாக்கும் என்பதால் அகந்த மூலம் என்றும்,தரைக்கு மேல் விளையும் பொருட்களில் உயரமான தென்னையில் விளையும் தேங்காய்,மற்றும் வாழையின் பழம் இரண்டும் கந்த மூலத்தில் சிறந்தது.

திரு மூ.ஆ.அப்பன் அவரது 30 தாவது வயதில் கர்ம வியாதியான குஷ்டத்தில் அவதிப்பட்டு தன் அண்ணனான திரு மு.ராமகிருஷ்ணனிடம் சென்று உதவி கேட்க அவர் இயற்கை உணவினை உண்டால் குணம் பெறலாம் என்று கூறினார்.முன்பெல்லாம் பெரு வியாதியஸ்தர் உள்ளே வரக் கூடாது என்று உணவு விடுதிகளிலும் பொது இடங்களிலும் எழுதி வைத்திருப்பார்கள்(பெரு வியாதி என்பது குஷ்டம்,ஷயரோகம்,புற்று நோய்,பெண்வியாதி(V.D.R.L)).அவ்வளவு கொடுமையானது இவ்வியாதி.

திரு மு.ஆ.அப்பன் அவர்கள் எல்லா இயற்கை உணவையும் பரீட்சித்து பார்த்துவிட்டார்.ஆனாலும் வியாதியின் வேகம் குறைந்தது,ஆனால் அதிகம் குறையவில்லை.கைகளில் நகம் காணாமல் போய்விட்டது.விரலும் காணாமல் போக ஆரம்பித்தது.பின் அவர் சிந்தித்தார்.இறைவனுக்கு படைப்பது எது தேங்காயும்,வாழைப் பழமும்,அதையே நாமும் உண்டாலென்று எண்ணி அதையே உண்ண ஆரம்பித்தார்.தற்போது அவர் குணமானது போல் பல பெரு வியாதியஸ்தர்களை பலரை குணமாக்கி வருகிறார்.பல குஷ்ட ரோகிகளையும்,எய்ட்ஸ் நோயாளிகளையும்,ஷயரோகம்(T.,புற்று நோய்(CANCER),பெண்ணால் வரும் வியாதியான மேகக் கிரந்தி(V.D.R.L),செம்மேகக் கிரந்தி(A.I.D.S) நோயாளர்களையும் சாப்பிடும் உணவாலேயே குணப்படுத்தி வருகிறார்.

திரு.மூ.ஆ.அப்பன் அவர்கள் கூறியுள்ள கருத்துக்களை இந்த இயற்கை உணவே இன்றியமையாத செல்வம் பகுதியில் சற்று பார்ப்போம்.இவ்வரிய நோய் நீக்கும் உணவுக் கலையையும், நோய் வருமுன் காக்கும் நோயணுகா விதியைத் தெரிந்து கற்க ஓர் அரிய வாய்ப்பு இதோ கீழே காத்திருக்கிறது.வரும் ஜனவரி மாதம் 21-01-2011,22-01-2011,23-01-2011 ஆகிய தேதிகளில் இயற்கை நல வாழ்வு முகாம் குலசேகரபட்டணத்தில் நடக்க இருக்கிறது.பங்கு பெறுங்கள் பயனடையுங்கள்.


மேலும் ஒரு முக்கிய விடயம்.காயகல்பத்திற்கு ஒரு போதுண்பதினால் மீதி இரு வேளைகளிலும் தேங்காயும் பழமும் உண்டால் அதன் மகிமைதான் என்ன.

இதோ எனது நீரோட்ட குருநாதரான திரு பால் வாசனின் பிரதம சீடரான திரு ஆசீர் ஜோசப் அவர்கள் நீரோட்டம் பற்றிய சில விடயங்களை உணர்த்தினார்.அதில் ஒன்று தேங்காயை வைத்து நீரோட்டம் பார்ப்பது.கையில் தேங்காயை வைத்துக் கொண்டு நீரோட்டம் ஓடும் இடத்தில் கால் வைக்க
தேங்காய் எழுந்து நிற்கிறது.கீழுள்ள படங்களைப் பாருங்கள்.

கையில் படுத்திருக்கும் தேங்காய்

நீரோட்டமுள்ள இடத்தை கால் பெரு விரலால் தொட்டவுடன் எழுந்து நிற்கும் அதிசயத்தைப் பாருங்கள்.

மேலும் நீரோட்டமுள்ள இடத்தில் தேங்காயை படுக்கை வசமாக வைத்து அதன் மேல் தரையில் கால் படாமல் ஏறி உட்கார தேங்காய் நம்மையும் சேர்த்து சுற்றுகிறது.தேங்காயின் மகத்துவம்தான் என்னென்று சொல்வது.அவ்வளவு உயிரோட்டம் உள்ள தேங்காயை உண்டால் நம் உயிரின் ஓட்டம் எவ்வளவு முன்னேறும் யோசியுங்கள்.

கற்றிடுவோம் சாகாத கல்வி!!!


Via  Nature is God - இயற்கையே கடவுள்