சின்னக் குழந்தைகள் மட்டுமல்ல பெரியவர்களும் கூட வாயை வயிற்றைக் கட்டுப்படுத்துவது மிகக் குறைவுதான். ஆசைப்பட்டதெல்லாம் சாப்பிட்டு விட வேண்டியது. பிறகு அவதிப்பட வேண்டியது.
வயதுக்கேற்ற தன்மையில் உணவு, உணவின் அளவு, உணவில் சேர்த்துக்கொள்ளும் பொருள் இவற்றில் கவனம் செலுத்தினால் வயிற்று உபாதைகளைக் கட்டுப்படுத்த முடியும் ஆனால் இதில் கவனம் பிசகுகிறபோது என்ன செய்யறது...?
ஒன்னும் கவலைப்படாதீங்க இதுக்காகவே இருக்கு அங்காயப் பொடி, அதென்ன அங்காயப்பொடி?
சுக்கு ஒரு துண்டு, மிளகு இருபது, சீரகம் கால் கரண்டி, வெந்தயம் கால் கரண்டி, வேப்பம்பூ அரைக் கரண்டி எடுத்துக்கணும்.
முதலில் இவைகளை மிதமாக வறுத்துப்பொடி செய்யணும். அத்துடன் நல்லெண்ணெயில் பொறித்த கருவேப்பிலைப் பொடி கால் பிடி எடுத்து மேலே சொன்னவற்றுடன் கலந்து பகல் உணவில் சாதத்துடன் உப்பு சேர்த்து பிசைந்து சாப்பிடலாம் அல்லது மோருடன் கலந்து பருகலாம்.
இப்படியே மூன்று அல்லது நான்கு நாட்கள் தொடர்ந்து செய்யணும். வாந்தி, குமட்டல், உணவு செரிக்காமை போன்ற வயிற்று உபாதைகள் எல்லாமே கட்டுப்படும்.
பொதுவாக இதனை எல்லோரும் சாப்பிடலாம். பிரசவித்த தாய்மார்கள் பகல் உணவில் ஐந்து துளி நெய்யுடன் அங்காயப் பொடியை சோற்றில் கலந்து சாப்பிட்டால் வயிற்றில் ஏற்படும் கிருமித் தொற்றுகள் கட்டுபடும்.
அடிக்கடி பயணம் செய்யறவங்க, வெளியிடங்களில் சாப்பிடவேண்டிய கட்டாயம் இருக்கறவங்க அங்காயப் பொடியை சாப்பாட்டில் சேர்த்துகிட்டா நல்லது. வாயுத்தொல்லை, வயிற்று உப்புசம் இவைகளைக் கட்டுப்படுத்தும்.
இதுல வேப்பம்பூ இருக்கறதாலே 25 முதல் 40 வயது ஆண்கள் பயன்படுத்தக் கூடாது. வாரம் ஒரு நாள் இரண்டு நாள் எடுத்துக்கலாம். பிறகு விந்தணு குறைபாடு உள்ள ஆண்கள் இதனை சேர்த்துக் கொள்ளக் கூடாது.
நன்றி FB-நலம், நலம் அறிய ஆவல்