அப்போது எனக்கு திருமணம் ஆகாத காலகட்டம். பத்து வருடங்களுக்கு முன்பு.
நான் எனது கடையில் வியாபாரத்தை கவனித்து கொண்டிருக்கும்போது
வானுலகிலிருந்து இறங்கி வந்த தேவதை போல ஒரு பெண் எனது கடையை கடந்து
சென்றாள். அவளை போல அழகு அதற்க்கு முன் நான் பார்த்ததே இல்லை. அவளை
யாருடனும் ஒப்பிட்டு சொல்லவே முடியாத அளவு அழகோ அழகு. என் மனதை கொள்ளை
அடித்த அழகி அவள். யாரென்று விசாரிக்கையில் அவள் எங்கள் கடையிலிருந்து
சிறிது தூரத்தில் உள்ள அரசு வங்கியில் வேலை பார்ப்பதாக நண்பர் ஒருவர்
சொன்னார்.
தினமும் எங்கள் கடையை காலையும், மாலையும் கடந்து
செல்வாள் அந்த தேவதை. அவள் என்னை பார்த்ததில்லை, ஆனால் நான் தினமும் அவள்
வரும் நேரம் எப்போடா வரும் என்று காத்திருந்து அவளை பார்த்து விட்டு தான்
மற்ற வேலைகளை கவனிப்பேன். அந்த அளவுக்கு அவள் அழகு என்னை மெய் மறக்க செய்து
விட்டது.
இவள் விழி என் மேல்
பட்டாலே போதும் என்று நினைத்த காலம் அது. அவள் தோழியுடன் பேசிக்கொண்டு
புன்னகை செய்வதை பார்க்கும்போது அவளுடன் ஒரு வார்த்தை பேச மாட்டோமா என்று
ஏங்கினேன். இப்படியே 4,5 மாதங்கள் சென்று விட்டது.
இப்படி
இருக்கையில் எங்கள் கடைக்கு பக்கத்தில் உள்ள பழக்கடைக்கு பழங்கள் வாங்க
அந்த தேவதை வந்தாள். வாங்கி கொண்டிருந்தாள். நான் வேண்டுமென்றே அந்த
கடைக்கு சென்றேன். அவளிடம் எப்படியாவது பேசி விட வேண்டுமென்று என்று
நினைத்து நின்று கொண்டிருந்தேன். அப்போது ஒரு ஒரு வயது முதிர்ந்த,
நோய்வாய்பட்ட கிழவி ஒருவள் அந்த தேவதையிடம் "அம்மா பிச்சை போடுங்கம்மா"
என்று கையேந்தி கேட்டாள். உடனே இந்த தேவதை கடுமையாக, அருவருப்பாக முகம்
சுளித்து 'சீ ச்சீ...கெழவி அங்கிட்டு போ, காசெல்லாம் இல்ல' .. என்று
கூறியதும் இல்லாமல் தள்ளி விலகி நின்று கொண்டாள். முகத்தையும் கொடூரமாக
வைத்து கொண்டாள்...
அப்போது எனக்கு பொட்டில் அடித்தார் போல் ஞானம்
பிறந்தது. புத்தி தெளிந்தது. வெளி அழகை பார்த்து ஏமாறக்கூடாது. அகஅழகு
தான் முக்கியம். புறஅழகு நம்மை மயக்கும் மாய வலை என்பதே என் அறிவுக்கு
அப்போது உதித்தது. அந்த சம்பவத்திற்கு பிறகு அந்த பெண்ணை பார்ப்பேன், அவள்
அழகு என் கண்ணுக்கு தெரியவில்லை. பிச்சைக்காரியிடம் கேவலமாக நடந்து கொண்ட
கொடூர முகம் தான் நினைவுக்கு வந்தது. அதன் பிறகு அவளை பார்ப்பதை நிறுத்தி
கொண்டேன். அவளை பிடிக்கவே இல்லை.
அவள் அழகியாக தெரியவில்லை, அரக்கியாக தான் தெரிந்தாள் என் கண்ணுக்கு.....
-Krishna Aranthangi
நன்றி தமிழால் இணைவோம்
அப்போது எனக்கு திருமணம் ஆகாத காலகட்டம். பத்து வருடங்களுக்கு முன்பு.
நான் எனது கடையில் வியாபாரத்தை கவனித்து கொண்டிருக்கும்போது
வானுலகிலிருந்து இறங்கி வந்த தேவதை போல ஒரு பெண் எனது கடையை கடந்து
சென்றாள். அவளை போல அழகு அதற்க்கு முன் நான் பார்த்ததே இல்லை. அவளை
யாருடனும் ஒப்பிட்டு சொல்லவே முடியாத அளவு அழகோ அழகு. என் மனதை கொள்ளை
அடித்த அழகி அவள். யாரென்று விசாரிக்கையில் அவள் எங்கள் கடையிலிருந்து
சிறிது தூரத்தில் உள்ள அரசு வங்கியில் வேலை பார்ப்பதாக நண்பர் ஒருவர்
சொன்னார்.
தினமும் எங்கள் கடையை காலையும், மாலையும் கடந்து செல்வாள் அந்த தேவதை. அவள் என்னை பார்த்ததில்லை, ஆனால் நான் தினமும் அவள் வரும் நேரம் எப்போடா வரும் என்று காத்திருந்து அவளை பார்த்து விட்டு தான் மற்ற வேலைகளை கவனிப்பேன். அந்த அளவுக்கு அவள் அழகு என்னை மெய் மறக்க செய்து விட்டது.
இவள் விழி என் மேல் பட்டாலே போதும் என்று நினைத்த காலம் அது. அவள் தோழியுடன் பேசிக்கொண்டு புன்னகை செய்வதை பார்க்கும்போது அவளுடன் ஒரு வார்த்தை பேச மாட்டோமா என்று ஏங்கினேன். இப்படியே 4,5 மாதங்கள் சென்று விட்டது.
இப்படி இருக்கையில் எங்கள் கடைக்கு பக்கத்தில் உள்ள பழக்கடைக்கு பழங்கள் வாங்க அந்த தேவதை வந்தாள். வாங்கி கொண்டிருந்தாள். நான் வேண்டுமென்றே அந்த கடைக்கு சென்றேன். அவளிடம் எப்படியாவது பேசி விட வேண்டுமென்று என்று நினைத்து நின்று கொண்டிருந்தேன். அப்போது ஒரு ஒரு வயது முதிர்ந்த, நோய்வாய்பட்ட கிழவி ஒருவள் அந்த தேவதையிடம் "அம்மா பிச்சை போடுங்கம்மா" என்று கையேந்தி கேட்டாள். உடனே இந்த தேவதை கடுமையாக, அருவருப்பாக முகம் சுளித்து 'சீ ச்சீ...கெழவி அங்கிட்டு போ, காசெல்லாம் இல்ல' .. என்று கூறியதும் இல்லாமல் தள்ளி விலகி நின்று கொண்டாள். முகத்தையும் கொடூரமாக வைத்து கொண்டாள்...
அப்போது எனக்கு பொட்டில் அடித்தார் போல் ஞானம் பிறந்தது. புத்தி தெளிந்தது. வெளி அழகை பார்த்து ஏமாறக்கூடாது. அகஅழகு தான் முக்கியம். புறஅழகு நம்மை மயக்கும் மாய வலை என்பதே என் அறிவுக்கு அப்போது உதித்தது. அந்த சம்பவத்திற்கு பிறகு அந்த பெண்ணை பார்ப்பேன், அவள் அழகு என் கண்ணுக்கு தெரியவில்லை. பிச்சைக்காரியிடம் கேவலமாக நடந்து கொண்ட கொடூர முகம் தான் நினைவுக்கு வந்தது. அதன் பிறகு அவளை பார்ப்பதை நிறுத்தி கொண்டேன். அவளை பிடிக்கவே இல்லை.