கர்ப்பிணிகளே, கிரீன் டீ அதிகம் குடிக்காதீங்க: கருவிற்கு ஆபத்து...!!!

மணக்கால் அய்யம்பேட்டை | 1:56 PM | Best Blogger Tips

பால் டீ யை விரும்பி குடிப்பவர்களை விட கிரீன் டீ யை விரும்புபவர்கள் அதிகமாகிவிட்டனர். ஏனென்றால் கிரீன் டீ குடிப்பதன் மூலம் உடல் எடை குறைவதோடு, நோய் நொடி அண்டாமல் இருக்கச் செய்கிறது.

அத்தகைய கிரீன் டீ யை கர்பிணிகள் தாராளமாக குடிக்கலாம் என்று பலர் கூறுகின்றனர். ஆனால் தற்போதைய ஆய்வில் கர்ப்பிணிகள் கிரீன் டீ அதிகம் குடித்தால் வயிற்றில் உள்ள கருவிற்கு பாதிப்பு ஏற்படும் என்று தெரிய வந்துள்ளது.

கிரீன் டீயில் ஆன்டி ஆக்சிடன்ட் அதிகம் உள்ளது.

இந்த ஆன்டி ஆக்சிடன்ட்டில் அதிக வேதியியல் பொருட்கள் இருப்பதால், உடலில் செல் அழிவைத் தடுக்கிறது. மேலும் இது இதய நோய், ரத்த அழுத்தம் மற்றும் புற்றுநோய் போன்றவற்றைத் தடுக்கிறது. இது உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வதுடன், எலும்புகளை வலுபடுத்துகிறது.

கிரீன் டீ குடிப்பதால் உடலில் உள்ள போலிக் ஆசிட் அளவு பாதிக்கப்படுகிறது. ஆனால் கர்பிணிகளுக்கு போலிக் ஆசிட் மிகவும் முக்கியமானது. கருவில் உள்ள குழந்தையின் நரம்புக் குழல் கிரீன் டீ குடிப்பதால் பாதிக்கப்படுகிறது. அந்த நரம்புக் குழல் பாதிப்படைவதற்கு காரணம் போலிக் ஆசிட் குறைபாடேயாகும்.

கர்ப்பகாலத்தில் கிரீன் டீ குடிப்பதை குறைத்துக் கொண்டால் கருவிற்கு மிகவும் நல்லது.

ஆகவே கர்ப்ப காலத்தில் கிரீன் டீ குடிப்பதை தவிர்க்கலாமே!
  
நன்றி இயற்கை உணவும் இனிய வாழ்வும்