𝗗𝗘𝗥𝗘𝗦𝗘𝗥𝗩𝗘𝗗 𝗧𝗶𝗰𝗸𝗲𝘁 (டிரிசர்வுடு பயணச்சீட்டு) என்றால் என்ன

மணக்கால் அய்யம்பேட்டை | 10:47 AM | Best Blogger Tips

 DE RESERVATION என்றால் என்ன 🤔 | எதற்காக இது உள்ளது ?? | Reserved  பெட்டிகளில் இந்த வசதி 😳😳 On sleeper

𝗗𝗘𝗥𝗘𝗦𝗘𝗥𝗩𝗘𝗗 𝗧𝗶𝗰𝗸𝗲𝘁 (டிரிசர்வுடு பயணச்சீட்டு) என்றால் என்ன என்று நமது கடந்த பதிவில் பலரும் கேட்டிருந்தனர்.

விரைவு அல்லது அதிவிரைவு ரயில் அதன் இலக்கை நெருங்க நெருங்க முன்பதிவு பயணிகள் இறங்கி கொண்டே இருப்பர்கள், அதே போல் வண்டி தொடங்கும் போது அடுத்தடுத்து ஊர்களில் பயணிகள் ஏறும் வரை இருக்கைகள் காலியாக இருக்கும் .இந்த காலியாக இருக்கும் இருக்கைகளை பயணிகள் பயன்படுத்த ரயில்வே கொண்டு வந்த திட்டமே DERESERVED Ticket (டிரிசர்வுடு பயணச்சீட்டு).

𝗗𝗘𝗥𝗘𝗦𝗘𝗥𝗩𝗘𝗗 Coach ( டிரிசர்வடு பெட்டி) விரைவு , அதிவிரைவு ரயில்களில் குறிப்பிட்ட சில ரயில்களில் குறிப்பிட்ட சில தூரத்திற்கு மட்டும் சில குறிப்பிட்ட பெட்டிகளில் (ரயில்வே முன்னரே அறிவித்த பெட்டிகள் மட்டும்) டி-ரீசர்வுடு பயணச்சீட்டு பெற்று அல்லது சீசன் டிக்கெட் மூலம் பயணம் செய்யலாம்.

எடுத்துக் காட்டாக: 20681 தாம்பரம் - செங்கோட்டை சிலம்பு அதிவிரைவு ரயிலில் 720 சாதாரண படுக்கை வசதி இருக்கைகள் தற்போது உள்ளது. இதில் S7, S8 பெட்டிகளில் 144 இருக்கைகள் உள்ளது இந்த ரயிலில் சென்னை முதல் ராஜபாளையம் வரை இடைப்பட்ட ஊர்களில் S7,S8 பெட்டிகளில் 100 பயணிகள் ஏறங்கி விட்டார்கள் என்றால் முன்பதிவு இருக்கைகள் ராஜபாளையத்தில் ரயில் புறப்படும் போது 100 இருக்கைகள் காலியாக இருக்கும். ரயில்வே நிர்வாகம் ராஜபாளையம் - செங்கோட்டை வரை உள்ள ரயில் நிலையங்கள் சிலம்பு ரயிலில் S7,S8 பெட்டிகளில் DERESERVED Ticket (டிரிசர்வுடு பயணச்சீட்டு) பெற்று பயணம் செய்யலாம் என்று கூறியுள்ளது, சங்கரன்கோவிலில் ஒருவர் தென்காசி செல்ல ரயில் நிலைய பயணச்சீட்டு அலுவலகத்தில் சங்கரன்கோவில் ரயில் நிலையம் வருவதற்கு ஒரு மணிநேரத்திற்கு முன்பே சென்று DERESERVED Ticket (டிரிசர்வுடு பயணச்சீட்டு) பெற்று S7,S8 பெட்டியில் பயணம் செய்யலாம்.

அதே போல் மறுமார்கத்தில் 20682 செங்கோட்டை - தாம்பரம் சிலம்பு ரயிலில் தென்காசியில் ஒருவர் ராஜபாளையம் வரை DERESERVED Ticket (டிரிசர்வுடு பயணச்சீட்டு) பெற்று S7,S8 பெட்டியில் பயணம் செய்யலாம்.ராஜபாளையத்துக்கு மேல் இந்த DERESERVED Ticket (டிரிசர்வுடு பயணச்சீட்டு) பெற முடியாது.

இந்த டி-ரீசர்வுடு டிக்கெட் பெற ரயில் புறப்படுவதற்கு முன்பு அல்லது குறிப்பிட்ட ரயில் நிலையத்திற்கு ரயில் வர ஒரு மணிநேரத்திற்கு முன்பே இந்த டி-ரிசர்வுடு பயணச்சீட்டினை பெற வேண்டும்.

இரயில்வே இந்த வசதியினை குறிப்பிட்ட ரயில்களில் , குறிப்பிட்ட பெட்டிகளில் , குறிப்பிட்ட ரயில் நிலையங்களுக்கு இடையே மட்டுமே வழங்கியுள்ளது.எல்லா ரயில்களுக்கும் இந்த வசதி பொருந்தாது.

இந்த DERESERVED Ticket (டிரிசர்வுடு பயணச்சீட்டு) UTS செயலியில் பெற முடியாது.ரயில் நிலைய பயணச்சீட்டு அலுவலகத்தில் மட்டுமே பெற முடியும்.

DERESERVED Ticket (டிரிசர்வுடு பயணச்சீட்டின்) கட்டணம் Unreserved Ticket (முன்பதிவில்லா பயணச்சீட்டு) கட்டணத்தை விட 25% கட்டணம் அதிகம் இருக்கும்.

காலவரை பயணச்சீட்டு (Season ticket) வைத்துள்ளவர்கள் இந்த வசதியினை பயன்படுத்த முடியும்.

No photo description available.

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🌷 🌷🌷 🌷   🌷 🌷🌷 🌷