ஆயுள் அறிய ஆறு வழிகளில் ஒரு டெஸ்ட்
கேள்விகளுக்குப் போகும் முன் ஆண்கள் - 86, பெண்கள் - 89 என்று தங்கள் வயதைக் கணக்காகக் கொள்ளவும். பதில்களுக்கு ஏற்ற மாதிரி எண்ணிக்கையைக் கூட்டவும் குறைக்கவும் செய்துகொள்ளுங்கள். (இவற்றின் விடைகள் தோராயமானவையே. மிகத் துல்லியமானவை அல்ல.)
நம் நாடு
1. அதிகமான பிரச்னைகள் ஏற்படும்போதும் அதிகக் கோபப்படாமல், உணர்ச்சிவசப்படாமல் உங்களால் இருக்க முடிகிறதா?
‘ஆம்’ என்றால் 5 வருடங்களைக் கூட்டிக் கொள்ளுங்கள். ‘இல்லை’ என்றால் 5 வருடங்களைக் குறைத்துக்கொள்ளுங்கள்.
2. உங்கள் குடும்ப உறுப்பினர்கள் யாராவது 95 வருடங்கள் வரை வாழ்ந்ததுண்டா?
‘ஆம்’ என்றால் 10 வருடங்களைக் கூட்டிக் கொள்ளுங்கள். ‘இல்லை’ என்றால் எதையும் கூட்டவோ, குறைக்கவோ செய்யாதீர்கள்.
3. ஒரு நாளைக்குக் குறைந்தபட்சம் அரை மணி நேரமாவது உடற்பயிற்சி செய்கிறீர்களா?
‘ஆம்’ என்றால் 5 வருடங்களைக் கூட்டிக் கொள்ளுங்கள். ‘இல்லை’ என்றால் 5 வருடங்களைக் குறைத்துக்கொள்ளுங்கள்.
4. உங்கள் மூளை அதிகம் யோசிக்கும் வகையிலான பயிற்சிகளை மேற்கொள்கிறீர்களா? சுடோகு, குறுக்கெழுத்துப் பயிற்சி போன்ற விஷயங்களைக் குறிப்பிட்ட கால இடைவெளியில் தொடர்ந்து செய்கிறீர்களா?
‘ஆம்’ என்றால் 5 வருடங்களைக் கூட்டிக் கொள்ளுங்கள். ‘இல்லை’ என்றால் கூட்டவோ, குறைக்கவோ வேண்டாம்.
5. நீங்கள் உண்ணும் உணவு உங்களை உற்சாகமாகச் செயல்படவிடாமல், அதிக எடை, சோம்பல் போன்ற பிரச்னைகளைத் தருகிறதா?
‘ஆம்’ என்றால் 5 வருடங்களைக் குறைத்துக் கொள்ளுங்கள். ‘இல்லை’ என்றால் எதையும் கூட்டவோ, குறைக்கவோ வேண்டாம்.
6. குடி அல்லது புகைப் பழக்கம் இருக்கிறதா?
‘ஆம்’ என்றால், யோசிக்காமல் குறைந்தது 15 வருடங்களைக் குறைத்துக்கொள்ளுங்கள். ‘இல்லை’ என்றால் எதையும் குறைக்கத் தேவையில்லை.
என்ன இறுதிக் கணக்கை எடுத்துவிட்டீர்களா?
ஆண்கள் - 68
பெண்கள் - 73
இந்த விடை வந்தால் ஒரு மனிதனின் சராசரி ஆயுள்காலத்தை முழுவதுமாக நீங்கள் வாழ்ந்து விடுவீர்கள் என்று அர்த்தம்.
🙏🌹 நன்றி இணையம் 🌹🙏
🌷 🌷🌷 🌷 🌷 🌷🌷 🌷