இந்துமதம் சொல்வதெல்லாம் உண்மை......

மணக்கால் அய்யம்பேட்டை | 2:51 PM | Best Blogger Tips

 

 மலர்போல மலர்கின்ற மனம் வேண்டும் தாயே..." - ஶ்ரீ அன்னை நினைவுதின சிறப்புப்  பகிர்வு!| Remembrance of Sri Annai - Vikatan

இந்துமதம் சொல்வதெல்லாம் உண்மை என்பதும், அது சொல்லும் முன் ஜென்ம, கர்மா என்பதெல்லாம் முழுக்க நிஜம் என்றும் உலக்க்கு நிருபிக்கவே சில பிறப்புகள் வருகின்றன

 

உரிய நேரத்தில் உரிய தொடர்புகள் கிடைக்கும்பொழுத் அவை அந்த உண்மையினை பட்டவர்த்தனமாக சொல்கிறன, எந்த பகுத்தறிவாளனும் பெரும் விஞ்ஞானியும் கூட அதனை மறுக்கமுடியாதபடி அவை விஸ்வரூப சாட்சியாய் நிற்கின்றன

 AuroMere Meditation Center, Pallikaranai, Chennai: ஸ்ரீ அன்னையின்  அற்புதங்கள் - 7

காலம் காலமாக நடப்பது இந்த பிரபஞ்சத்தின் விளையாட்டு பகவானின் அருளாட்சி இது , அது இந்துமதத்துக்கு சோதனை வரும்பொழுதெல்லாம் அடிக்கடி நடக்கும் திருவிளையாட்டு

 

அப்படி பண்டைய காலங்களிலும் சங்கரர் காலத்திலும் நாயன்மார் காலத்திலும் நிரம்ப நடந்திருந்தாலும் கண்கண்ட சாட்சியாக நடந்தவை வெகு சில

 AuroMere Meditation Center, Pallikaranai, Chennai:, 60% OFF

அவற்றில் ஒன்றுதான் அந்த ஸ்ரீ அன்னை எனும் மாபெரும் சாட்சியின் வாழ்வு, பெரும் அதிசயமும் பெரும் திருப்பமும் நினைத்தாலே மனம் சிலிர்க்கும் அற்புதங்களும் நிரம்பியது அவரின் வாழ்வு

 

அது 1870ம் ஆண்டு காலங்கள், மொகலாயருடன் பெரும் போர் நடத்தி இந்துக்கள் களைத்திருந்த காலத்தில் இத்தேசத்தை கைபற்றிய பிரிட்டிசார், இந்தியாவின் அடிமை நிலைக்கு இந்துமதமே காரணம் என பழித்தும் இழித்தும் கொண்டிருந்த காலங்கள்

 

இந்துமதம் காட்டுதனமானது பிற்போக்கானது அதனால்தான் பிரிட்டிசார் பிடித்து விட்டனர், அங்கு கிறிஸ்தவமாக்க வேண்டியது நம் கடமை சேவை, இந்தியாவுக்கு நாம் செய்யும் உதவி இந்துமதம் ஒழிப்பு என்றெல்லாம் அங்கு பேச்சும் சிந்தனையும் வந்த நேரம்

 

இந்தியாவும் இந்துக்களும் இழிவுபடுத்தபட்டிருந்த நேரம், உண்மையினை உறங்க செய்து பொய்யினை தேரில் ஏற்றி வலம் வந்த கொடும் காலம்

 7 facts about Hindus around the world | Pew Research Center

அந்த 1878ல் அதாவது இந்தியாவில் தாதாபாய் நவ்ரோஜி இந்தியர் பிரிட்டிசாரல் சுரண்டபடும் கொடுமையினை சுட்டிகாட்டிய காலங்களில் பிரான்ஸின் பாரிசில் ஒரு யூத குடும்பத்தில் அக்குழந்தை பிறந்தது, அவளின் இயற்பெயர் மிரா அல்பாசா

 

மிராவுக்கு மாபெரும் ஆன்மீக தொடர்பும் முன் ஜென்ம புண்ணியமும் இருந்ததை முதலில் யாரும் அறியவில்லை

 Hindus in India set to build temple at razed mosque site - The San Diego  Union-Tribune

மிரா வளர வளர அவரை சுற்றியிருந்த முன் ஜென்ம வினைகளும் வளர்ந்தன, ஒரு கட்டத்தில் அந்த முன் ஜென்ம நல்வினைகள் அவளுக்குள் ஊடுருவ தொடங்கின

 

பிரான்ஸின் பாரீஸ் நகரில் வசித்த அவளுக்குள் அடிக்கடி ஆன்மீக தரிசனங்கள் நடந்தன, கரிய உருவம் புல்லாங்குழல் இசைத்தபடி அவள் முன் நிற்பதும், பெரும் காடும் பசுக்கள் நடுவில் நின்று அவ்வுருவம் அருள் புரிவதும் வழமையாயின

 

அவளுக்கு அப்பொழுதெல்லாம் ஏதும் புரியவில்லை, இதெல்லாம் 7 வயதிலே தொடங்கிற்று

 Hinduism - Wikipedia

பின் ஜடாமுடியும் கையில் கமண்டலமும் தீர்க்க பார்வையும் திருநீறும் கொண்டவர்களெல்லாம் கனவிலும் தரிசனங்களிலும் வர தொடங்கினார்கள்

 

அவள் வாழ்வில் ஆச்சரியங்கள் வர தொடங்கின

 

தூக்கம் போல தியானம் அவளுக்கு எளிதாக வந்தது, அதனில் தரிசனங்களும் வந்தன, பள்ளிபடிப்பிலே இதெல்லாம் வாடிக்கையாயிற்று, அவள் தனித்திருக்க தொடங்கினாள்

 

ஒரு கட்டத்தில் நடப்பது போன்ற அன்றாட நடவடிக்கைகளில் கூட அது பாதிப்பை கொடுத்தது , ஒருமுறை சாலையினை கடக்க அவள் நடக்கும்பொழுது இந்த தியானம் வந்துவிட அப்படியே அவள் நின்றுவிட்டாள், எதிரே வந்த வாகனம் அவளை தூக்கி அடிக்கும் முன் ஒரு மாயகரம் வந்து அவளை கரையில் இழுத்து போட்டது

 

அந்நிலைதான் அவள் தன்னோடு ஒருபெரும் சக்தி இருப்பதை உணர்ந்த தருணம், அதே நேரம் குடும்பத்தாருக்கு கவலை வந்த நேரம் அதுவே

 

மருத்துவர்கள் அவள் இயல்பாக இருக்கின்றாள் என ஒதுங்கிவிட கிறிஸ்தவ பாதிரிகளாலும் அவளை சரிசெய்ய முடியவில்லை, யூத மதத்தின் சிறந்த ஞானியர் என சொல்லபட்டோர் அவளை கண்டு புன்னகைத்து ஒதுங்கிவிட்டனர்

 

அதன் பின் மிரா அவள் போக்கில் விடபட்டாள் தியானமும் ஆன்மீக தேடலும் அவளுக்கு வாழ்வாயின

 religion – உயிர்மெய்

அவளின் எந்த கேள்விக்கும் ஐரோப்பாவில் பதில் இல்லை, யாரும் அவளின் சந்தேகங்களை தீர்க்கவில்லை ஒருவகையில் அவள் குரு எனும் கூட்டை தேடி பறக்கும் பறவையானாள் ஆனால் அப்படி யாரும் ஐரோப்பாவில் அவளுக்கு இல்லை

 

எதையும் சிந்திக்காதே, சொன்னதை மட்டும் கேள், கீழ்படி அதுதான் கடவுளின் கட்டளை என சொல்லும் ஐரோப்பிய தர்மத்தில் அவளின் ஆன்மீக தாகம் தீர வழியில்லை

 

அவளின் மிகபெரிய கேள்வி அந்த யூத அடையாளத்தை பார்க்கும் பொழுது வந்தது, அடிக்கடி வந்தது. இன்று இஸ்ரேலிய கொடியில் தாவீதின் நட்சத்திரம் என யூத இனம் வைத்திருக்கும் சின்னம் ஒரு யூத பெண்ணாக அவளுக்கு பரிட்சயமானது

 Vethathiri Maharishi Quotes,எங்கே நிம்மதி ? - வழிகாட்டும் வேதாத்திரி  மகரிஷியின் அருளுரை - engey nimmathi - vethathiri maharishi about peace -  Samayam Tamil

அன்று இஸ்ரேல் இல்லை, இக்கொடி இல்லை என்றாலும் ஒவ்வொரு யூதனும் பாதுகாக்கும் சின்னமது, அந்த சின்னம் அவளுக்கு மட்டும் ஒருயோகத்தின் ரகசியத்தை சொல்வதாகவே தோன்றிற்று, யாராலும் அதனை விளக்க முடியவில்லை

 

அச்சின்னம் எப்படி யூதருக்கு வந்தது என்பதை சொல்ல யூத ஞானியராலும் முடியவில்லை

 

அவள் "காஸ்மிக்" என்றொரு ஆன்மீக மையத்தில் சேர்ந்தாள், அக்கால ஐரோப்பாவில் சர்ச் என போப் தரப்பும், பிரிவினை கிறிஸ்தவ தரப்பும் கிறிஸ்துவத்தில் மூழ்கி இருந்தாலும் சுதந்திர ஆன்மீகத்தை தேடிய கூட்டமும் உண்டு

 BK Gowri: 2014

அவர்கள் கிறிஸ்துவத்தில் நிறைவில்லாதவர்கள், அவர்கள் ஆன்மீக தேடல் வேறு, அதனை தங்கள் அறிவுக்கு எட்டியவரை "காஸ்மிக்" என்றொரு அமைப்பில் விவாதித்தார்கள்

 

அங்குதான் ரிச்சர்ட் என்பவனை சந்தித்தாள் மிரா, அப்பொழுது அவளுக்கு 17 வயது இருக்கலாம், ஒரே ஆன்மீக தேடல் எனும் ஒற்றுமையில் இருவரும் மணம் புரிந்தும் கொண்டார்கள்

 

அந்த ரிச்சர்டிடம் ஏகபட்ட ஆன்மீக கேள்விகளை எழுப்பினாள் மிரா, அவனும் முடிந்தவரை சொல்லிவிட்டு இந்தியாவில் உனக்கு விடை கிடக்கலாம் என ஆலோசனை சொன்னான்

 

காரணம் அவனுக்கும் இந்தியாவின் பாண்டிச்சேரிக்கும் தொடர்பு இருந்தது, வியாபார சம்பந்தமாக பிரெஞ்ச் காலணியான இந்திய பாண்டிச்சேரிக்கு அவன் அடிக்கடி வருவான்

 

அவளுக்கு இந்தியா பற்றிய கனவினை அவனே விதைத்தான் அத்தோடு அவன் கர்மா முடிந்தது, ஆம் அதன்பின்

இருவருக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர்

 

மிராவின் அதி தீவிர ஆன்மீக தேடல் அவனுக்கு கொஞ்சம் எரிச்சலானது, மிராவோ இன்னும் தீவிரமாக தேடலை தொடர அது இருவர் உறவின் பிரிவில் முடிந்தது

 

உறவுகளை உதறாமல் ஏது ஞானம்? பந்தங்களை பற்றறுக்காமல் ஏது தவம்?

 

அவள் தனிமரமானாள் அந்த தேடல் அவளை இந்திய பாண்டிச்சேரிக்கு இழுத்தது, அப்பொழுது கணவன் மனைவியாக இல்லாவிட்டாலும் அந்த காஸ்மிக் அமைப்பின் உறுப்பினர்களாக ரிச்சர்டுக்கும் அவளுக்கும் சில புரிந்துணர்வு இருக்கத்தான் செய்தது

 

அப்படி அவளையும் அழைத்து கொண்டு பாண்டிச்சேரிக்கு கிளம்பினான் அந்த ரிச்சர்ட், அங்குதான் அவள் தன் கர்மத்தின் பலனை அறிந்தாள், பிறப்பின் நோக்கத்தை உணர்ந்தாள்

 

1914ம் ஆண்டு மார்ச் 29ம் தேதி அவள் அரவிந்தரை பாண்டிச்சேரியில் கண்டாள், அந்த நொடியில் அவள் ஆத்மா அவரிடம் சரணடைந்தது

 

முதல் பார்வையிலே அவளுக்குள் அவள் ஆன்மாவுக்குள் ஊடுருவினார் அரவிந்தர், அவளுக்குள்ளும் கால காலமாக தான் எதிர்பார்த்த குரு அவர்தான் என ஆன்மா சொல்லிற்று

 

அந்நொடி அவர் தாள் பணிந்து சீடரனாள்

 

அரவிந்தருக்கும் அவள் சாதாரண பெண் இல்லை என்பது புரிந்து "என் அன்னையே, பராசக்தியின் வடிவே இங்கிருந்து உன் கடமையினை செய்" என அனுமதித்தார்

 

அரவிந்தரே "அன்னை" என அழைத்ததால் அவள் "ஸ்ரீ அன்னை" என பெயர் பெற்றாள், மதர் என்றும் ஸ்ரீ அன்னை எனவும் அழைக்கப தொடங்கினார்

 

அரவந்தர் அவருக்கு ஞானத்தை போதித்தார், யூதரின் தாவீது நட்சத்திரம் இந்துமரபில் முருகபெருமானின் யோக வடிவம் என்பதை சொல்லி யோக ரகசியங்களை சொன்னார்

 

தன் வாழ்நாள் தேட்லை நொடியில் முடித்து வைத்தவர் தன் குரு என அவரை மகா குருவாக பணிந்து தன் சேவையினை தொடங்கினார் அன்னை

 

மிரா அல்பசா எனும் அந்த யூதபெண், ஸ்ரீ அன்னை என இந்து சன்னியாசியானது இப்படித்தான்

 

அது முதலாம் உலகப்போரின் தொடக்க காலம், இதனால் அரவிந்தர் இந்தியாவில் இருப்பது நல்லதல்ல என ஜப்பானுக்கு சென்றார் அங்கும் தொடர்ந்தார் அன்னை

 

அதன்பின் சமாதான காலம் திரும்பி அரவிந்தரும் தாயகம் திரும்பியபின் பாண்டிச்சேரியில் தன் சேவையினை தொடங்கினார்

 

ஏற்கனவே கூர்மையான அறிவும் தேடலும் கொண்ட அந்த அன்னை அரவிந்தருடன் சேர்ந்து ஞானஜோதியாக மாறினார், இந்துமத ஞானமெல்லாம் அவளுக்குள் வந்தது ,வேதமும் யோகமும் இன்னும் பலவும் அவளுக்குள் அலை அலையாக புகுந்தது

 

இளமையில் தன் முன் வந்ததெல்லாம் கிருஷ்ணன் என்பதை அறிந்து கீதையும் இன்னும் பலவும் படித்து பெரும் ஞானம் கொண்டார்

 

அவரின் ஆற்றலும் அறிவும் பெருகிற்று

 

அவர் இந்தியாவுக்கு வந்த காலங்களில் சுவாமி விவேகானந்தர் இல்லை எனினும் கல்கத்தாவில் இருந்த அவர் ஆசிரமத்துடன் தொடர்பு ஏற்படுத்தி தன் அறிவை விசாலமாக்கினார்

 

ஒருவகையில் 1911ல் காலமான நிவேதிதா அம்மையாருக்கு பின் ஐரோப்பாவில் இருந்து வந்து இந்துமதம்தழுவி பெரும் இந்துவாக வாழ்ந்த பெண்ணாக அவர்தான் அறியபட்டார்

 

1949ல் அரவிந்தர் மரணித்தார், சுமார் 35 ஆண்டுகள் அரவிந்தரோடு ஆன்மீக பயணம் செய்தவர் எனும் வகையில் அரவிந்தரின் சிந்தனையெல்லாம் நினைவாக்க உறுதிபூண்டார்

 

அரவிந்தர் வாழ்ந்த காலத்தில் அவர் முழு யோகி என்றாலும் அவர் முன்னாள் சுதந்திரபோராட்ட வீரர் அதுவும் ஆயுதம் தாங்கிய போராளி எனும் வகையில் பிரிட்டிசார் அவரை சந்தேகபட்டியலிலே வைத்திருந்தனர், ரகசிய கண்காணிப்பு அவர்மேல் இருந்தது

 

இதனால் அவரின் கனவான யோக மையம், யோக கலை பரப்புதல் இந்துமத பெருமையினை உலகறிய செய்தல் போன்றவற்றில் தடை இருந்தது

 

இந்தியாவினை விட்டு பிரிட்டிஷ் அதிகாரம் அகன்ற நாட்களில் அரவிந்தரும் இல்லை

 

ஆனால் அன்னை அவர் பணியினை முன்னெடுத்தார், ஆரோவில் எனும் அந்த ஆன்மீக மையம் அப்படி பாண்டிச்சேரியில் உருவாகி ஐரோப்பாவுக்கும் சென்றது

 

"ஆரோவில்" என்பதற்கு "அதிகாலை வானத்து கிராமம்" என பொருள்வரும் அதாவது விடிவெள்ளி ஆசிரமம் எனும் வகை பொருள்

 

அந்த "ஆரோவில்" இந்தியாவின் ஆன்மீக முகமாக அறியபடுவதும், பலநாட்டு மக்கள் வந்து பயனடைவதும் ஏராளமானோர் பயன்பெற்று இந்துமத பெருமை அடைவதும் தொடர்கின்றது

 

1973ம் ஆண்டுவரை வாழ்ந்த அன்னை தெய்வீகம் நிரம்பியராக அறியபட்டார், இந்தியாவின் ஆன்மீக சித்தர்களின் வரிசையில் அவரும் சேர்ந்து கொண்டார், பக்தர்கள் பெருகினார்கள்

 

அவரின் போதனையும் எழுத்தும் புகழ்பெற்றன, தீராத நோய்கள் அன்னையால் தீர்ந்தன, எண்ணற்ற அதிசயங்களை அவர் செய்தார், செய்து கொண்டே இருந்தார்

 

அன்றைய உச்சபீடமான இந்திராமுதல் , தலாய்லாமா உள்ளிட்ட ஆன்மீகவாதிகள் பலர் அவரை தேடி வந்து வணங்கி சென்றனர்

 

அவர் பாண்டிச்சேரியில் காலமாகி அவரின் ஜீவசமாதியும் அங்கே நின்று அருளாசி வழங்குகின்றது

 

ராமகிருஷ்ண பரமஹம்சர், அரவிந்தரின் பொன்மொழிகள் போல அன்னையின் பொன்மொழிகளும் போதனையும் சாகாவரம் பெற்றவை

 

யூத மதத்தின் அங்கமான கிறிஸ்தவமதமும் அதன் பாதிரிகளும் இந்தியாவினை கிறிஸ்தவநாடாக்க கங்கணம் கட்டி இந்துமதம் மேல் தீரா பழியும் களங்கமும் சுமத்திய காலத்தில் இந்துமதம் அந்த யூத பெண்ணை அழைத்து தன் காவல் அரணாக நிறுத்தி கொண்டது

 

இந்துமதம் இன்றும் என்றும் நிலைபெற்றிருக்கும் காரணம் மிக எளிது

 

அது யுகங்களை கடந்து, எத்தனையோ கோடி ஆன்மாக்களை ஒவ்வொரு பிறவியிலும் தொட்ட மதம், அந்த கர்மாவின் தொடர்ச்சி ஒவ்வொரு பிறப்பிலும் உண்டு

 

அவர்கள் எந்த நாட்டில் , எந்த மொழியில், எந்த இனத்தில், எந்த மதத்தில் பிறந்திருந்தாலும் உரிய காலத்தில் அது தன் தொடர்பை சரியாக காட்டி தன்னோடு இணைத்து கொள்ளும்

 

இந்துமத சக்தி அப்படியானது, யார் தனக்கு தேவையோ அவர்களை சரியாக முன் ஜென்ம கர்மாவின் தொடர்ச்சியாக அழகாக ஈர்த்து கொள்ளும்

 

அந்த வழியில் அருட்சகோதரி நிவேதிதை வழியில் பாண்டிச்சேரியில் இந்து சாட்சியாக சுத்தமான இந்துவாக இந்து சன்னியாசியாக நின்றவர் அந்த அன்னை

 

இன்று அவருக்கு பிறந்தநாள், அன்னை இந்த மண்ணுக்கும் இந்துமதத்துக்கும் செய்த சேவைக்காய் அவருக்கு நன்றிகளை தெரிவிப்போம்

 

அவரின் கோடான கோடி பக்தர்கள், அரவிந்தர் சொன்னபடி அவர் அன்னை சக்தியின் அருள்பெற்றவர் என நம்புவதாலும் எண்ணற்ற அற்புதங்களை அன்னை அன்றும் இன்றும் செய்துவருவதாலும் இத்திருநாடு வாழ்வாங்கு வாழ எல்லா ஆசிகளையும் அவர் தர வேண்டுவோம்

 

ஒரு காலத்தில் மீராவாக ஆண்டாளாக வாழ்ந்த அந்த ஆத்மா நம் கண் முன் அன்னையாக வாழ்ந்து சென்றது என்பதுதான் ஆழ கவனித்தால் தெரியும் உண்மை

 

வாழும் பொழுதும் வாழ்ந்து முடித்த பின்பும் தன் தெய்வீக தன்மையால் எண்ணற்ற அற்புதங்களை செய்து ஏகபட்ட மக்களை காத்து வழிநடத்தி அவர்களின் இஷ்ட தெய்வமாக வீற்றிருக்கின்றார் அன்னை.

 

ஆதிமதங்களில் ஒன்றான யூதமதத்திலிருந்து உண்மையினை தேடி தாய்மதம் வந்து எல்லோருக்கும் தாயாக நின்று மதமும் தேசமும் காத்த மகராசிக்கு, இந்தியாவின் அடையாளமும் பாரம்பரியம்மான இந்துமதத்தின் பெருமையாகவும் நின்ற அந்த அன்னைக்கு பெரும் நன்றிகள் மற்றும் தெய்வீக அஞ்சலிகள்

 

இந்த புனிதமான இந்துமதத்தையும் இந்த அருமையான தேசத்தையும் அவர் அரூபியாய் காத்து நிற்க பிரார்த்தனைகள்

 

அவரின் பொன்மொழிகள் ஏராளம் என்றாலும் சில அழகான இந்து தத்துவ மொழிகளை இங்கு நினைவு கூறலாம்

 

மனிதனின் அதிருப்திக்கு, சோகத்திற்கு, தோல்விகளுக்கு அவனுடைய தான் என்ற எண்ணமே, அகந்தையே மிக முக்கிய காரணம் ஆகிறது.

 

பக்திஎன்பது தனக்காக இறைவனிடம் வேண்டிக் கொள்வது அல்ல. இறைவனுக்காகத் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொள்வதே உண்மையான பக்தி

 

நீ எப்படி இருந்தாய் என்பதை நினைத்துக் கவலைப்பட்டுக் கொண்டிருக்காதே! எப்படி இருக்க விரும்புகிறாய் என்பதை மட்டும் நினை. நீ நிச்சயம் முன்னேறுவாய்

 

நம் அவநம்பிக்கையே நம் குறைபாடுகளின் தோற்றுவாயாக இருக்கிறது. உயர்விற்குத் தேவை பூரண நம்பிக்கையே!

 

ஒருவன் எவ்வளவு நேரம் தியானம் செய்கிறான் என்பது ஆன்மிக முன்னேற்றத்தைக் காட்டாது. மாறாக தியானம் செய்ய எந்த முயற்சியுமே தேவையில்லை என்னும் நிலையை எட்டுவதே உண்மையான ஆன்மிக முன்னேற்றமாகும்.

 

இறைவனிடம், ‘நமக்கு அது வேண்டும், இது வேண்டும்என்று வேண்டுவதை விட, நமக்குத் தேவையானது எதுவோ, அதை, அவனே தருமாறு ஒப்படைப்பது சிறந்தது"

 

ஆம், இந்துமதத்தில் எவ்வளவு ஆழமாக கலந்திருந்தால் அவர் இப்படியெல்லாம் ஞானத்தோடு எழுதியிருக்க முடியும்? ஞானம் என்பதை இந்துமதம் கொடுக்குளவு வேறு யார் கொடுக்கமுடியும்? எங்கே அப்படி ஒரு முழு ஞானம் இருக்கின்றது?

 

அதனால்தான் பாரிசில் இருந்து அதனை தேடி வந்திருக்கின்றார் அன்னை, அப்படி வந்தவர் தெய்வமாகவும் ஆகிவிட்டார்

 

From Brahma Rishiyar