இன்று உலக தாய்மொழி நாள்
ஹிட்லர் சொன்னது
ஒரு இனத்தை அழிக்க வேண்டுமா.. அவன் தாய் மொழியை அழித்துவிடு
தாய் மொழிக்காக போராடி முதல் முதல் உயிர் தியாகம் செய்தது தமிழ்நாடு தான் உலகத்திலேயே
ஆனால் தமிழருக்கு அந்த பெருமை சேரக்கூடாது என்று நினைத்த காங்கிரஸ்
ஐநா சபையில்.. பங்களாதேஷ்தான்.. தாய் மொழிக்காக முதலில் உயிர் தியாகம் செய்த நாடு என்று அங்கீகாரம் பெற உதவியது
சரி அதை விடுங்கள் கண்ணதாசன் கடைசி பக்கம் என்ற நூலில் ஒரு விஷயத்தை சொல்லி இருப்பார்
ஒருவனுக்கு பல மொழி தெரியும்
அவன் சிறு வயதிலேயே அவன் தாய் தந்தை இறந்து விட்டதால்
அவனுக்கு எது தாய்மொழி என்று தெரியாமல்.. தவியாய் தவித்து புலம்பினாள் அவன் நண்பனிடம்
சற்று நேரம் யோசித்த அவன் நண்பன்
இன்று இரவு நான் உன்னோடு தூங்குகிறேன்
காலையில் உன் தாய்மொழி எது என்று கண்டுபிடித்து சொல்லிவிடுகிறேன் என்று சொல்கிறான்
அதன்படியே.. அந்த தாய் மொழி தெரியாத.. அந்த மனிதன் அயர்ந்து தூங்குகிறான்
அப்போது அவன் நண்பன்.. அங்கே இருந்த ஒரு குடம் பச்சை தண்ணீரை எடுத்து.. அவன் மேல் ஊற்றுகிறான்
ஐயர்ந்து.துங்கிக் கொண்டிருந்த அந்த மனிதன்.. எந்த கண்டாரோலி மகன்டா என் மீது தண்ணியை ஊத்தியது என்று சொன்னானாம்
உடனே அங்கு நின்று இருந்த
நண்பன்
இப்போது எந்த மொழியில் என்னை நீ திட்டினாய் என்று கேட்டானாம்
தமிழில் என்று அவன் சொன்னானாம்
அப்படியானால் உன் தாய்மொழி தமிழ் தான்
தூங்கும் போதும்.. திடீரென்று ஒரு நிகழ்வு நடக்கும் போதும் உன் வாயில் எது வருகிறதோ அதுதான் தாய்மொழி என்று .. சொன்னானாம்