◄•───✧அ•───✧ உ•───✧ ம் ✧───•►
🙏 இன்றைய கோபுர
தரிசனம் 🙏
சென்னை மாவட்டம் தமிழ்நாடு குன்றத்தூர் அருள்மிகு கந்தழீஸ்வரர் ஆலயம்.
கோபுர தரிசனம் - கோடி புண்ணியம்
கோபுர தரிசனம் - பாவ விமோசனம்
மூலவர்:
கந்தழீஸ்வரர்
அம்மன்/தாயார்:
நகைமுகைவல்லி
பழமை:
500-1000 வருடங்களுக்கு முன்
ஊர்:
குன்றத்தூர்
மாவட்டம்:
சென்னை
மாநிலம்:
தமிழ்நாடு
திருவிழா:
சிவராத்திரி, பிரதோஷம்.
தல சிறப்பு:
சதுரவடிவ ஆவுடையாரில் பிரமாண்டமாக லிங்கதிருமேனியராக அருள்பாலிப்பது சிறப்பு.இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது.
திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு கந்தழீஸ்வரர் திருக்கோயில்குன்றத்தூர், சென்னை.
பொது தகவல்:
கி.பி. 1241-ஆம் ஆண்டு, திரிபுவனச் சக்கரவர்த்தி ஸ்ரீராஜராஜனின் ஆட்சியில், இந்த ஆலயத்துக்குச் செய்த திருப்பணி விவரங்கள் கல்வெட்டில் உள்ளன. பல்லவ மன்னனும் ஸ்ரீகிருஷ்ண தேவராயரும் கூட இந்தக் கோயிலுக்கு திருப்பணிகள் செய்துள்ளனர். பிரகாரத்தில் நர்த்தன விநாயகர், தட்சிணாமூர்த்தி, துர்கை, ரிஷபாரூடர் போன்றோர் உள்ளனர். பிரகாரத்தின் சுவற்றில் தனது காலை லிங்கத்தின் மீது தூக்கி வைத்து தனது கண்ணை பிடுங்கும் கோலத்தில் கண்ணப்ப நாயனார் ஓவியம் உள்ளது.
பிரார்த்தனை:
இங்குள்ள அம்மனை வழிபட்டால் தங்களது வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
நேர்த்திக்கடன்:
இங்குள்ள சுவாமிக்கும், அம்மனுக்கும் அபிஷேகம் செய்து, புது வஸ்திரம் அணிவித்து நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.
தலபெருமை:
இக்கோயில் அருகே சேக்கிழாருக்கென தனிக்கோயில் உள்ளது. சென்னை பல்லாவரத்தில் இருந்து பம்மல், அனகாபுத்தூர் வழியாகச் சென்றால், குன்றத்தூர் எனும் அழகிய ஊரை அடையலாம். சிறிய மலை மீது கோயில் கொண்டிருக்கிறார் முருகப் பெருமான். மலையடிவாரத்துக்கு அருகிலேயே கந்தனின் மாமனான திருமால், ஊரகப்பெருமாள் என்ற திருநாமத்துடன் கோயில் கொண்டுள்ளார். அதையடுத்து சிவபெருமானின் கந்தழீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது.
தல வரலாறு:
பெரிய புராணம் எனும் மகத்தான நூலை அருளிய சேக்கிழார் வைகை நதிக்கரைத் தெய்வங்களை வணங்கிவிட்டு, காவிரிக்கரையில் உள்ள கடவுளர்களை தரிசித்துவிட்டு, பாலாற்றங்கரையில் அருளும் இறைமூர்த்தங்களையும் பிரார்த்தித்துவிட்டு, குசஸ்தலை நதி பாயும் ஊரை நெருங்கினார். வழியில், அற்புதமான சிவாலயத்தைக் கண்டார். அது சோழ மன்னனால் கட்டப்பட்ட கோயில். வாழையும் தென்னையும் அதிகம் பயிராகும் பூமி அது. மலையும், குளிரும் கைகோர்த்த மண்டலம் அது. மலையின் அடிவாரத்தில் உள்ள இறைவனைத் தரிசித்து, அங்கேயே சில காலம் தங்கி தவம் செய்வது என்று முடிவு செய்தார் அந்தச் சிவனடியார். பிரமாண்டமான சிவலிங்கமூர்த்தத்தின் சாந்நித்தியத்தில் தன்னை இழந்தார். தனது சிந்தனைகள் முழுவதையும் சிவபாதத்துள் குவித்து சமர்ப்பித்தார். தன்னையே சிவனாரிடம் ஒப்படைத்தார். இதைத்தான் சரணாகதி என்கின்றனர்.
ஒரு நாள் அந்த அடியாருக்கு அற்புத தரிசனம் அளித்தார் சிவபெருமான். அந்தக் கணமே தனது மொத்த கர்வமும் தொலைந்ததை உணர்ந்த அடியவர், மெய்சிலிர்த்துப் போனார். என் கர்வத்தையும் செருக்கையும் அழித்த கந்தழீஸ்வரா என்று நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்கினார். பரவசத்தில் திளைத்தார். கந்துதல் என்றால் பற்றுதல் என்று அர்த்தம். புகழையும் பெயரையும் பற்றிக்கொண்டிருந்த தனது பற்றுகளை நீக்கியதால், சிவனாருக்கு கந்தழீஸ்வரர் எனத் திருநாமம் சூட்டி மகிழ்ந்தார்.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:
சதுரவடிவ ஆவுடையாரில் பிரமாண்டமாக லிங்கதிருமேனியராக அருள்பாலிப்பது சிறப்பு.
அமைவிடம்:
சென்னை பல்லாவரத்தில் இருந்து சுமார் 8 கி.மீ. தொலைவில் உள்ளது குன்றத்தூர். பாரிமுனை, தாம்பரம், கோயம்பேடு ஆகிய பேருந்து நிலையங்களில் இருந்து அடிக்கடி பஸ் வசதி உண்டு. குன்றத்தூர் பேருந்து நிலையத்திலிருந்து 1 கி.மீ. தொலைவில் உள்ளது கந்தழீஸ்வரர் கோயில்.
அருகிலுள்ள ரயில் நிலையம்:
பல்லாவரம்
அருகிலுள்ள விமான நிலையம்:
சென்னை
தங்கும் வசதி:
சென்னை
வாழ்க வளமுடன்...
வாழ்க வையகம்...
நன்றி இணையம் 🙏 திருச்சிற்றம்பலம் 🌷 whatspps