சப்த விடங்கர் 04 : திருகாரோயில்
திருவாரூருக்கு தெற்கே சுமார் 15 கல் தொலைவில் உள்ளது அந்த திருகாரோயில் ஆலயம், அதுதான் சப்த விடங்கர் ஆலயத்தின் நான்காம் ஆலயம்
இந்த தலத்தின் சிவபெருமான் கண்ணாயிரம் நாதர் என அழைக்கபடுகின்றார், அன்னையின் பெயர் கைலாச நாயகி
காரை மரங்களுடன் அகில் மரங்கள் நிறைந்திருந்த இடம் காரை அகில் என அழைக்கபட்டு காராயில், காரோயில் என மாறி, திருகாரோயில் என்றாயிற்று
இதனை திருகாரவாசல் என்றும் அழைப்பார்கள், இது தேவாரம் பாடபெற்ற முக்கிய தலம்
இரண்டம திருமுறையில் வரும் தேவாரப்பாடல் இங்குதான் பாடபட்டது
"நீரானே நீள்சடை மேலொர் நிரை கொன்றைத்
தாரானே தாமரை மேலயன் தான்தொழும்
சீரானே சீர்திக ழுந்திருக் காறாயில்
ஊரானே யென்பவர் ஊனமி லாதாரே"
என திருஞான சம்பந்தர் பாடியது இந்த தலத்தினை பற்றித்தான் , காரோயில் என்பதுதான் "காரை" என பல இடங்களில் குறிப்பிடபடுகின்றது
இந்த தலத்தில் பிரம்மன் தன் தவறுக்காய் பலவருடம் தவமிருந்தார், அவருக்கு சிவன் ஆயிரம் கண்களுடன் காட்சியளித்த தலம் இது அதன்பின் பிரம்மன் சாபம் நீங்கினார்
இப்படி ஆயிரம் கண்களுடன் சிவன் வந்ததாலே அவருக்கு கண்ணாயிரம் நாதர் என பெயர் வந்தது
இந்த தலத்தில்தான் பதஞ்சலி முனிவர் ஏழு சிவநடனங்களையும் கண்டார் , சிதம்பரம் கோவிலில் சிவ தாண்டவங்களை காண ஏங்கி நின்றவருக்கு இந்த தலத்துக்கு வரசொல்லிதான் சிவன் ஏழு நடனங்களையும் காட்டினார்
அதனைத்தான் தன் யோக சூத்திரத்தில் முனிவர் வடித்து தந்தார்
இன்னும் கபால முனிவருக்கு சிவன் காட்சி தந்து தேவர்களின் துயர் போக்கினார் என பெரும் சிறப்பினை கொண்டது இந்த ஆலயம்
இந்த ஆலயத்தின் தலம் அகில் மரம், இந்த ஆலயத்தின் சிறப்பு கண் சம்பந்தமான சிக்கல்களை தீர்ப்பது, அதனாலே கண்ணாயிரம் என அழைக்கபடுகின்றார் சிவன்
இந்த தலத்தின் சிவனுக்கு சாற்றபட்ட தைலத்தை பாதிக்கபட்ட கண்ணில் தடவினால் கண் நோய் நீங்கும், பலன் பெற்றோர் ஏராளம் உண்டு
சிதம்பர செட்டியார் என்பவர் இயற்றிய "திருக்காரோயிற் புராணம்" எனும் நூல் இந்த தலத்தின் பெருமைகள புராண சிறப்பை மிக தெளிவாக சொல்கின்றது
இங்குதான் சப்தவிடங்கரின் நான்காம் லிங்கம் ஸ்தாபிக்கபட்டிருக்கின்றது, இந்த நான்காம் தலம் நான்காம் சக்கரத்தோடு தொடர்புடையது , அது அனாதகம்
மணி பூரகத்திற்கு மேல் எட்டு விரற்கடை மேல் உள்ள தலம் அனாகதம்
"பாரப்பா பூரகத்தின் மேலேகேளு
பாடுகிறோ மெட்டங்குலந்தா னனாகததின்வீடு
தேர்ந்தயிதழ் பன்னிரெண்டாய் சுற்றி நிக்கும்
ஏரப்பா தேயுவது யிருப்பிடமாய் நிற்க்கும்
பிருப்பிடத்தில் சிகாரமென்ற எழுத்தாமே
எழுத்தான பூதமதின் பீஜங் கேளு
இயம்புவேன் யமதுவும் மிடமேயாகும்
செத்தான அவ்வெழுத்தில் ருத்ரன் காகினிதானே"
என அதனைபற்றி பாடுகின்றார் அகத்தியர்
"அறிவுக்கு மேலேறி எட்டங்குலத்துக்
கப்பால் நாகதத்தின் வீட்டை கேளு
முறிவுக்கு முக்கோனமாகி நிற்கு
முதிர்வளயம் பனிரண்டு இதழுமாகும்
பிறிவுக்கு காகா கா காங ச சா
பேரான ச ச ஞாடா டாவாகுமே
இறிவுக்கு இதழில் நிறகு மட்சரந்தான்
ஏற்றுமாச்ஞ் சுழுத்தியதுக் கிருப்புமாகும்" என்பது போகர் சொல்லும் பாடல்
அநாகதம் என்றால் உருவமற்ற அல்லது உருவகிக்க இயலாத ஒலி என்பதாகும்
அதாவது காற்று தத்துவம் இந்த சக்கரத்தின் அம்சமாகும், இதன் அமைவிடம் நுரையீரல் பக்கம் அமைந்திருப்பது அதனை சரியாக சொல்கின்றது
மூலாதாரம் நில தத்துவம், அடுத்த இரு சக்கரங்கள் நீர் தத்துவம் எனும் வகையில் நான்காம் சக்கரமான அனாதகம் காற்று தத்துவம்
இந்த சக்கரம் சரியாக துலங்கினால் பிரபஞ்சத்தின் அதிர்வுகளை அலைகளை சரியாக ஈர்க்கலாம், வேதங்கள் ஒலிவடிவானவை, உலகம் ஒரு சப்தத்தில் இயங்குகின்றது என்பதால் பல உலக இயக்கங்களை பிரபஞ்ச ரகசியங்களை இந்த சக்கரத்தால் உணரமுடியும்
இந்த சக்கரம் இருதயம் மற்றும் நுரையீரலுக்கு அருகில் அமைந்திருக்கும் சக்தி மையம், சுழுமுனை நாடி இங்கிருந்துதான் உருவாகும்
இந்த சக்கரம் சரியாக இல்லாவிட்டால் உடல் ரீதியாக இருதய கோளாறு, நுரையீரல் கோளாறு போன்றவை ஏற்படும், இதனால் மேல் முதுகு வலிகள் உள்ளிட்ட பல சிக்கல்களை பிணியினை ஏற்படுத்தும், இன்னும் ரத்த ஓட்டத்தில் சிக்கல் வரும், அப்படி வரும்போது சிந்தை குழப்பம் சோர்பு என பலவகையான முடக்கங்களை கொடுக்கும்
கண்களும் இந்த சக்கரமும் சூட்சுமத்தால் தொடர்புபட்டவை, இது சிக்கலானால் கண்பார்வையும் மங்கும்
இப்படியான ச்ககரம் சரியாக செயல்படாவிட்டால் பிறர்நலம், அன்பு , கருணை, இரக்கம் இன்னும் பல குணங்கள் இராது
மாறாக வஞ்சகம், கோபம், ஆத்திர்ம,பேராசை, சுயநலம், பழிவாங்கும், குணம் , கவலை, ஆத்திரம் குழப்பம் ஆகியன எழுந்து ஆட்சி செய்யும்
அதாவது கவலையும், பொறாமையும், வஞ்சகமும் அவர்களை அந்த நிலையில் ஆழ்த்தும்
இந்த சக்கரம் துலங்கினால் அது எல்லையர்ற வகையில் அதன் சக்தியினை வெளிபடுத்தும், அது பிரபஞ்சம் போல் எல்லையே இல்லாத அளவு நல்ல சக்தியினை வீசும்
ஆம் இந்த சக்கர்ம துலங்கினால் அன்பு, கருணை, தெய்வீகம் என எல்லாமும் எல்லை கடந்து பரவும், நிபந்தனை அற்ற அன்பும் கருணையும் யாரையும் வசபடுத்தும் பெரும் கருணையும் சாத்வீகமும் தெய்வீகமும் அங்கே குடியேறும்
எல்லையற்ற மகிச்சி, நித்திய சந்தோஷம் அவர்களிடத்தில் பெருகி கொண்டே இருக்கும், முடிவில்லாமல் வந்து கொண்டே இருக்கும்
அப்படியான மகா சக்தியினை இந்த சக்கரம் வழங்கும்
பெரும் கவலை பெரும் சோகம், தீரா வேதனை என்றால் இந்த ச்க்கரம் சரியாக துலங்கவில்லை என பொருள்
எப்போதும் மகிழ்ச்சி, எல்லையற்ற அன்பு, முழு தெய்வீக திருநிலை என்றால் இந்த சக்கரம் சரியாக துலங்கி ஒளிவிசுகின்றது என பொருள்
பொதுவாக மனமகிழ்ச்சி, மனகவலை, மனவேதனை, மன நிறைவு என மனம் பற்றி சொல்வதெல்லாம் இந்த சக்கரத்தின் தன்மையன்றி வேறல்ல.
இந்த சக்கரம்தான் மனம், இந்த சக்கரம்தான் உடல் ஆரோக்கியம்
இப்படியான சக்கரத்தை துலக்கி தரும்பொருட்டு , அனாதக சக்கரத்திற்கான பலன்களை ஈர்த்து தரும்பொருட்டுத்தான் அங்கே சப்த விடங்க லிங்கம் அமைக்கபட்டு அது பெரும் சக்தியினை ஈர்த்து நிற்கின்றது
அங்கே சென்று வழிபடும் போது அது உடலின் சக்கரத்தை, அனாதக சக்கரத்தை தூண்டிவிடுகின்றது, அந்த சக்கரம் சரியாகும்போது எல்லாம் சரியாகி மகிழ்வும் தெய்வீக உணர்வும் அன்பும் கருணையும் நல்ல சிந்தனைகளும் பெருகி மனம் நிறைவினை அடைகின்றது
இந்த அனாதக சக்கரத்தின் சிறப்பை சொல்லவும் இந்த தலத்தின் சிறப்பை சொல்லவுமே அதன் தலத்தில் பல குறியீடும் புராண செய்திகளும் வைத்தார்கள்
அதன் தல விருட்சம் அகில், இந்த அகில் என்பது புகைந்தால் மணப்பது, புகை என்பது மூச்சுகாற்றினால் உணரபடுவது
நறுமணத்தை எல்லோரும் பெருமூச்சுடன் நீண்ட மூச்சுடன் இழுத்து பிடித்து நுகர்வது உண்டு, அந்த நீண்ட மூச்சுதான் யோகத்தின் தத்துவம்
அந்த மூச்சுபயிற்சி தத்துவத்தை அடையாளமாக சொல்லத்தான் அகில் மரத்தை அங்கே தல விருட்சமாக வைத்தார்கள்
இந்த தலம் மூச்சு தலம், காற்று நிலையில் இயங்கும் அனாதக சக்கரத்துக்கான தலம் என்பதை தல விருட்த்திலே சொல்லி வைத்தார்கள்
இன்னும் கபால முனி கதை , பதஞ்சலி கதை என சொல்லி அவர்கள் வாழ்வில் இந்த ஆலயம் செய்த அற்புதத்தை சொல்லி அதன் சிறப்பை உணர்த்தினார்கள்
முதலில் கபால முனிவர் கதையினை காணலாம், இந்த முனிவர் அன்பேஉருவானவனர், சிவனுக்காக தவமிருப்பவர், அடியாராக வாழ்ந்து வந்தவர்
ஆனால் உணவு உண்ணமாட்டார், காற்றில் இருந்தே ச்கதிபெற்று வாழ்ந்து கொண்டிருந்தவர். அவரின் தவம் அதிகரிக்க அதிகரிக்க அவரின் தேஜஸ் அதிகரித்தது, அவர் மனதின் அன்பும் கருணையும் எல்லையற்று பெருகி ஓடிற்று
அவரின் அன்பும் கருணையும் விரிந்து விரிந்து அந்த அலைகள் வானலோக தேவர்களின் நடவடிக்கையிலே குறுக்கிடும்படி பெரும் பெரும் சக்தியாய் மாறின
அதாவது சூரியன் போல் ஜொலிக்க தொடங்கினார், அவரால் வருண பகவானின் கடமைகளை செய்யமுடிந்தது, காற்று அவருக்கு கட்டுபட்டது இப்படி தேவர்களின் கடமைகளை அவரால் மாற்றமுடிந்தது
அவரின் அளவிடமுடியாத சக்திமுன் தாங்கள் தள்ளாடுவதை கண்ட தேவர்கள் சிவனிடம் சரணடைந்தார்கள் சிவன் அவருக்கு தரிசனமாகி அவரின் ஞானகண்ணினை திறந்துவைத்து அவருக்கு பல விஷயங்களை உணரவைத்து தன்னோடு சேர்த்து கொண்டார்
கபால முனிவருக்கு இப்படி இங்கே முக்தி கிடைத்தது
கபாலமுனிவரின் வாழ்வு அவருக்கு இங்கே அனாதக சக்கரம் பெருமளவில் சக்தி பெற்று நின்றதை சொல்கின்றது, அவர் காற்றிலே சக்திபெற்று வாழ்ந்தார் உணவை தவிர்த்து காற்றிலே சக்திபெற்றார் என்பது அதனை தெளிவாக சொல்கின்றது
இது ஒன்றும் புதிததல்ல,இந்து மரபில் எத்தனையோ ஞானியர் நாள் கணக்கில் மாதகணக்கில் உணவின்றி நீரின்றி கடும் தவம் இயற்றியதையும் இப்போதும் அப்படி சிலர் உண்டு என்பதையும் கவனிக்கலாம்
இதெல்லாம் அனதாக சக்கிரத்தின் துலக்கம், அந்த துலக்கம் சரியாக இருந்தால் காற்றில் இருந்தே சக்திபெற்று வாழலாம், ரிஷிகள் அதைத்தான் செய்தார்கள்
கபாலமுனிவரின் கதை இரண்டாவது என்ன சொல்கின்றது என்றால் அது எல்லையற்ற அன்பினை பிரபஞ்சத்தையே வளைக்குள் அளவு சக்தி வெளிபடுத்தும் என்பதை சொல்கின்றது
தேவலோகம் வரை ஈர்க்கும் பெரும் ஆற்றலை அவருக்கு அந்த அனாதக சக்கர துலக்கம் கொடுத்தது என்பதை காணமுடிகின்றது
மூன்றாவது அவரின் ஞானக்கண் திறக்கபட்டு அங்கே சிவன் தரிசனமாகி அவருக்கு முக்தி கொடுத்ததை அறியமுடிகின்றது
ஆக அனாதக சக்கரம் துலங்கினால் காற்றின் சக்தியில் உடலை இயக்கலாம், அகக்கண் திறக்கபடும், எல்லையற்ற ஆற்றல் பெருகும் என்பதை சொல்லி கபாலமுனிவர் வாழ்வு உதாரணமாக நிற்கின்றது
அடுத்து பதஞ்சலி முனிவர் வாழ்வினை காணலாம், அவர்தான் இன்றைய யோக சாஸ்த்திரத்தை இன்றைய யோக ஆசனம் உள்ளிட்ட அனைத்தையும் தொகுத்து கொடுத்தவர்
அவருக்கு குண்டலினி சக்தியின் இயல்புகளை, அச்சக்கரம் துலங்கும் வகைகளை அப்போது ஏற்படும் மூச்சு மாற்றங்களை அந்த அசைவுகளை நடனங்களாக, இயக்கங்களாக அவருக்கு சொல்லி கொடுத்தார்
இந்த தலத்தில்தான் சொல்லி கொடுத்தார்
அந்த பதஞ்சலி முனிவரை இங்கே, இந்த கோவிலுக்கு வரவழைத்து சிவபெருமான் தன் நடனங்களை காட்டினார், ஏழுவகை நடனங்களையும் காட்டினார் அதனால் பதஞ்சலி யோகநூலை எழுதினார்
அது எப்படி நடந்ததென்றால் , அந்த பதஞ்சலி முனிவரின் அகக்கண், ஞானக்கண் இங்கேதான் திறக்கபட்டது
இந்த ஆலயத்து சிவனை கண்ணாயிரநாதர் என்பது கண்களுக்கு ஆரோக்கியம் தருபவர் என்பதால் மட்டுமல்ல அவர்தான் ஞானகண்ணையும் திறப்பார்
ஏன் இந்த ஆலயத்தில் அதை பதஞ்ச்லி முனிவருக்கு செய்தார் என்றால், இங்கேதான் அவரின் அனாதக சக்கரம் திறக்கபட்டது, அதை திறக்க துணை நின்றது சப்த விடங்கர் லிங்கம்
அதன் சக்தி அப்படியானது, தேவலோகத்தில் இருந்து வந்த அந்த விடங்க லிங்கம், பிரபஞ்ச பலன்களை சக்திகளை அப்படி ஈர்த்து தரும்
அதுதான் கபால முனி, பதஞ்சலி முனி என யார் யாருக்கோ அனாதக சக்கரத்தை திறக்கவைத்து தெய்வீக மனிதர்களாக மாற்றியது
சிபி சக்கரவர்த்தி புறாவுக்கு சதை கொடுத்தான், மனுநீதி சோழன் பசுவின் கண்ணீருக்கு கரைந்து அழுதான் என்பதெல்லாம் வெறும் கற்பனையோ கதையோ மிகைபடுத்தபட்ட வகையோ அல்ல
ராஜராஜ சோழன் போன்றோர் அளப்பரிய அன்பினை மக்கள் மேலும் சிவன் மேலும் கொண்டிருந்ததெல்லாம் இந்த வகையில்தான்
அந்த சக்கரம் அப்படி நிபந்தனையற்ற எல்லையற்ற பெரும் அன்பினை குவித்துகொடுக்கும்
இந்த திருகாரோயில் தலம் சோழ மன்னர்களால் வழங்கபட்டது, அவர்களுக்கு அந்த அனாதக சக்கரம் துலங்கி தெய்வீக நிலைக்கு உயர்ந்தார்கள்
அந்த நிலையில்தான் அன்பின் கருணையில், எல்லையற்ற நிபந்தனையற்ற்ற பேரன்பில் தெய்வீக நிலையில் அப்படியான காரியங்களை செய்தார்கள்
இந்த தெய்வீக நிலைக்கு , இந்த மாபெரும் உன்னத நிலைக்கு மானிடனை உயர்த்துவதுதான் அனாதக சக்கரம்
அதை தரும் தலம் திருகாரோயில் தலம், அந்த கண்ணாயிர நாதர் தன்னை அண்டிவருவோர்க்கெல்லாம் அந்த அனாதக சக்கரத்தை துலங்க வைத்து, எல்லையில்லா ஆனந்தமும் அன்பும் தந்து இதயத்தை மகிழ்ச்சியில் நிறைத்து வைப்பார்
இந்த தலம் அப்படியானது
பாலைநிலத்தில் பலஅடி பள்ளம் தோண்டி வரும் நீரை எடுக்க படாதபாடு படுவதை விட கங்கைக கரையில் நீரை அள்ளிவருதல் எளிது
அப்படி எங்கோ தனித்து தவம் தியானம் என மூழ்கி பாடுபடுவதை விட இந்த தலத்தில் வணங்கினால் எளிதில் எல்லாம் கைகூடும்
பதஞ்சலி முனிவரை சிவன் இங்கு அழைத்தார், கபால முனியினை அழைத்தார் என்பது அவர்களுக்கானது மட்டுமல்ல, ஒவ்வொருவருக்குமானது
அவ்வகையில் அங்கு சென்றால் அந்த அனாதக சக்கரம் துலங்கும், வாழ்வே மாறும், ஞானக்கண் திறக்கும்
இங்கு சிவன் குக்குட நடனம் ஆடுகின்றார்
குக்குடம் என்றால் சேவல் என பொருள் உண்டு, அத்தோடு குக்குட சர்ப்பம் என்றொரு பொருளும் உண்டு, பாம்பு கோழி என்றொரு பதத்தை யோக சாஸ்திரம் சொல்கின்றது
குண்டலினி சக்தியினை பாம்பாக சொல்வது மரபு , அந்த சக்தி சேவலின் விழிப்பில் முன்னேறி செல்வது ஒருவனை முன்னேற்றும் என்பது இங்கே சொல்லபடும் தத்துவம்
சேவல் எல்லோரையும் விழிக்க வைப்பது, அப்படி எல்லோரையும் மயக்கத்தில் இருந்து விடுவிக்கும் ஞான சக்தியினை அந்த சக்கர நிலை கொடுக்கும் என்பதுதான் இந்த குக்குட நடன தத்துவம்
இந்த நடனம் என்பது சேவல், பாம்பு போன்ற குணங்களை சாயலை கொண்டிருப்பது. சேவல் என்பது விழிப்பானது, எதையும்கண்டு பின்வாங்காதது, முன்னேறி செல்வது போராடி செல்வது
பாம்பு விவேகமனது, மிக மிக விழிப்பானது, மின்னல் வேகத்தில் முடிவுகளை எடுத்து தன்னை காத்து கொள்ளும் சக்தி படைத்தது
அப்படியான விழிப்பு நிலையினை மிக மிக இந்த நிலை தரும், இந்த சக்கரம் துலங்கினால் ஒருவன் முழு விழிப்பு நிலைக்கு செல்வான், எதற்கும் எப்போதும் தயாராக இருப்பான், வைராக்கியமும் விவேகமும் கொண்டிருப்பான், சரியான நேரம் சரியானதை செய்வான் என்பதை சொல்லும் ஒரு அடையாளம்
அதுதான் இந்த சக்கர விழிப்பு நிலை கொடுக்கும், அந்த துலங்கிய சக்கரம் கொடுக்கும் உயர்ந்த விழிப்பு நிலை, ஒளிகொடுத்து நிற்கும் தயார் நிலைதான் குக்குட நடனம்
யோகத்தில் சிறந்தவன் விவேகி, அவன் எங்கும் அறியாமையில் மூழ்குவதில்லை, எங்கும் மாயையில் சிக்குவதில்லை, அவன் எங்கும் அகபடுவதுமில்லை
அவன் முழு விழிப்பில் மாய மயக்கத்தில் லவுகீக குழப்பங்களில் பாச பந்தத்தில் சிக்கமாட்டான், எது சரியோ? எது அன்பானதோ எது கருணையானதோ எது நிபந்தனையற்ற அன்போ எது தெய்வீகமோ அதில் விழிப்பாய் இருப்பான்
இந்த சக்கரம் அந்த ஆற்றலை பெற்றுதரும், முழு விழிப்புணர்வை பெற்றுதரும். இந்த சப்தவிடங்கர் தலம் அந்த அருளை தரும்
"ஒம் ந..ம..சி..வா..ய" என்பதன் முதல் மூன்று எழுத்துக்கள் முந்தைய சக்கரங்களுக்கானது, ம என்பது மணிப்பூரகத்துக்கானது
"சி" என்பதன் அதிர்வு இந்த அனாதகத்துக்கானது
இந்த தலத்துக்கு சென்று வழிபட்டால் கண் கோளாறு உள்ளவர்களுக்கு பார்வை கிட்டும், அப்படியே இருதயம் நுரையீரல் பாதிப்பு இருந்தால் சரியாகும்
பாதிக்கபட்டவர்கள் சென்று வழிபட்டால் பூரன நலம் நிச்சயம் கிடைக்கும்
உடலில் வர்ம புள்ளிகள் இருப்பதுபோல் இந்த சக்கரம் எனும் சக்தி மையங்களும் மகா சக்தி வாய்ந்தவை , அப்படி இந்த அனாதக சக்கரம் துலங்கினாலே இதயம் பக்கமுள்ள நோய்கள் தீரும்
மூச்சு கோளாறு உள்ளவர்களுக்கு இங்கு சரியாகும்
யோகத்தில் இருப்போர் இங்கு வணங்கினால் அகக்கண் எனும் ஞானக்கண் திறக்கபடும், அந்த சிவன் கண்ணாயிரம் என அழைக்கபடுவது அதனால்தான்
இன்னும் அதி தீவிர யோகத்தில் இருப்போர்க்கு காற்றிலே உயிர்வாழும் வித்தையும் கைகூடும்
அந்த திருகாரோயில் ஆலயம் மிக மிக சூட்சுமமனது பெரும் சக்தியும் ஆற்றலும் தன்னுள் கொண்டிருப்பது, அதற்கு சப்த விடங்கர் இன்னும் வலுவூட்டி அந்த ஆலயத்தை சகதிமிக்க இடமாக உருவாக்கி வைக்கின்றது
அந்த சனந்திக்குள் ஒருவன் செல்லும்போது அதற்குரிய சக்கரமான அனாதக சக்கரத்தை அது துலங்க வைக்கின்றது அந்நொடியில் உடல் நோய் மனசங்கடம் என எல்லாம் மாறி ,ஆரோக்கியமான உடலும் விழிப்பான சிந்தனையும் , தெய்வீக அன்பான எல்லையற்ற நிபந்தனையற்ற அன்புகொண்ட மனமும் வாய்க்கின்றது
அவர்கள் தெய்வீக நிலையினை அடைவார்கள் இது சத்தியம்
From Brahma Rishiyar