ஒவ்வொரு நிஜ இந்தியனின்

மணக்கால் அய்யம்பேட்டை | AM 11:26 | Best Blogger Tips

 


கொரானா வைரஸிற்கு எதிராக வளர்ந்த நாடுகளின் மிகப்பெரும் மருந்து நிறுவனங்கள் தடுப்பூசி தயாரிப்பில் முனைப்புடன் ஈடுபட்டு வந்தபோது, அது இந்தியாவில் சாத்தியம் என்பதை யாரும் கனவில் கூட நினைத்திருக்க மாட்டார்கள். பூனேவை சேர்ந்த பூனாவாலாவின் 'செரம் இன்ஸ்டிட்யூட்', பிரிட்டனில் உருவாக்கப்பட்ட 'ஆக்ஸ்ஃபர்டு-அஸ்ட்ராஜெனிக்கா' தடுப்பூசியை அவர்கள் அனுமதியுடன் இந்தியாவில் உற்பத்தி செய்ய இயலுமா என்று கூட பலர் யோசித்தார்கள். ஆனால் ஒரே ஒரு இந்தியன், தடுப்பூசியை முழுக்க முழுக்க சுயசார்புடன் இந்தியர்களால் தயாரிக்க இயலும் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருந்தார். அவர் தான் டாக்டர் 'கிருஷ்ணா எலா'.

73 வயதாகும் கிருஷ்ணா, நம் வேலூரை சேர்ந்த விவசாய குடும்பத்தை சேர்ந்தவர். அமெரிக்காவில் தன்னுடைய பி.எச்.டி. படிப்பை முடித்து, தெற்கு கலிஃபோர்னியாவில் துணை பேராசிரியராக பணிபுரிந்து வந்தார். அதன் பின் 1996ல் ஹைதராபாத்தில் தன் மனைவி சுசித்ராவோடு சேர்ந்து 'பாரத் பையோடெக்' நிறுவினார். அதன் பின் 'ஹெபடடிஸ்-பி' எனும் கொடிய நோய்க்கு 'ரெவாக்-பி' எனும் தடுப்பூசியை உருவாக்கியதன் விளைவாக மருத்துவ உலகில் பலருக்கு பரிச்சயமானார். அதன் பின் போலியோவுக்கான சொட்டு மருந்து, ரோடா வைரஸுக்கான உலகிலேயே குறைந்த விலையில் விற்கப்பட்ட 'ரொடாவெக்' தடுப்பூசி, குழந்தைகளுக்கு வரும் வைற்றுப் போக்குக்கான தடுப்பூசி, டைபாயிடுக்கான தடுப்பூசி என்று அடுக்கடுக்காக பல தடுப்பூசிகளை உருவாக்கியவர்.

தற்போது இந்தியாவின் 140 கோடி மக்கள் தடுப்பூசி இல்லாமல் கொரானா தொற்றால் அவதிப்பட்டு வரும் நிலையில், இவர் அரும்பாடுபட்டு உருவாக்கியதுதான் 'கோவாக்ஸின்' தடுப்பூசி. பாரத் பையொடெக் எனும் அவரது நிறுவனம் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தோடு கூட்டாகதயாரித்துள்ள கோவேக்ஸின் தடுப்பூசிகள், மிக மிக பாதுகாப்பானவை என்பதை மிக எளிதாக ங்களால் நிரூபித்து காட்ட முடியும் என்கிறார் கிருஷ்ணா.

இந்தியர்களால் எதையும் சாதிக்க இயலாது என ஒரு மனக் குறைபாடோடு, எப்போதும் எதிர்மறையாக பேசுவதை வழக்கமாக கொண்டுள்ள சில அந்நிய கைக்கூலிகள் அவரின் கோவாக்ஸினை ஏளனப் படுத்தின. போதிய பரிசோதனைகள் இல்லாமலேயே இதற்கு அரசங்கம் அங்கீகாரம் தந்தாக எல்லாம் குற்றம் சாட்டின. மோடி அரசு தங்கள் பெயரை தற்காத்துக் கொள்ள ஏதோ ஒரு தடுப்பூசியை கொடுத்து மக்களை அழிக்கப் பார்க்கிறது என்றெல்லாம் பரப்புரை செய்தன. ஆனால் இதையெல்லாம் மீறி பாரத் பயோடெக்கும்-இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகமும் சேர்ந்து உருவாக்கிய கோவேக்ஸின், மருத்துவவல்லுனர்கள் பலரின் வரவேற்பை பெற்றது. பிரதமர் மோடி அவர்களே முன் வந்து இந்த தடுப்பூசியை செலுத்தி கொண்டதுதான் ஹைலைட்.

தற்போது ஒரு நாளைக்கு பத்து லட்சம் தடுப்பூசிகளை இவரது நிறுவனம் தயாரித்து வருகிறது. அதை கூடிய விரைவில் முப்பது லட்சமாக உயர்த்தமத்திய அரசு தேவையானஅனைத்து உதவிகளையும் செய்து வருகிறது. இதுவரை இவரின் தடுப்பூசி இரண்டு கோடி இந்தியர்களுக்கு செலுத்தப் பட்டுள்ளது என்கிறார்கள்.

'ஆத்ம நிர்பார்' எனும் சுயசார்பு கொள்கைக்கு ஒரு உதாரணமாக கிருஷ்ணா திகழ்கிறார். உலக அளவில் தற்போது இவரின் புகழ் பரவத் தொடங்கியுள்ளது. பல நாடுகள் இவரின் கோவேக்ஸின் தடுப்பூசியை கோடிக்கணக்கில் பெற பெரும் வரிசையில் காத்திருக்கையில், தனக்கு பணம் முக்கியமில்லை, இந்தியர்களின் உயிர்தான் முக்கியம், என இந்தியர்களுக்கு தடுப்பூசியை தயாரித்து அனுப்புவதையே முன்னுரிமை கொண்டு செயல்படுகிறார் கிருஷ்ணா.

இந்தியர்களால் இயலாதது எதுவுமே இல்லை என்பதை கிருஷ்ணா நிரூபித்து உள்ளார். கோடிக்கணக்கான மக்களின் உயிரை காப்பாற்றும் உன்னத பணியை அவரின் தடுப்பூசி தற்போது செய்துக் கொண்டிருக்கிறது.

ஒவ்வொரு நிஜ இந்தியனின் சார்பாக அவருக்கு அடியேனின் வாழ்த்துக்கள்.

சர்வம் கிருஷ்ணார்ப்பணம்

 நன்றி இணையம்