#தளவாய்_வேலுத்தம்பி_பிள்ளை

மணக்கால் அய்யம்பேட்டை | PM 12:37 | Best Blogger Tips

 


1. வேலாயுதன் செண்பகராமன் தம்பி (வேலுத்தம்பி) கி.பி.1765-ம் ஆண்டு மே மாதம் 6-ம் நாள் அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் #இரணியல் தேசத்து #தலக்குளம் என்ற கிராமத்தில் பிறந்தார்.

யாருக்கும் அஞ்சாத வீரம், எந்த ஒரு செயலையும் துணிந்து செய்யும் தைரியம், இளம்வயதிலேயே களரி கலை திறமை கொண்டு, சுற்றுவட்டார பகுதிகளில் எவரும் வெல்ல முடியாத தலக்குளம் மண்ணின் வீரனாக காணப்பட்டார்.

மன்னரின் இராமேஸ்வர பயணத்தில் அவருடைய உடைமைகள் களவு போனது. அரசவை வீரர்கள் முயன்று கண்டுபிடிக்க முடியவில்லை. பின்னர், களவு பொருட்களை கண்டுபிடிக்கும் பொறுப்பு இருபது வயது வேலுத்தம்பியிடம் ஒப்படைக்கப்பட்டது.

தன்னுடைய நாஞ்சில் படையுடன் புறப்பட்ட வேலுத்தம்பி, மூன்று நாட்களில் களவு போன பொருட்களுடன் மன்னர் முன் வந்து நின்றார். வேலுத்தம்பியின் திறமையை கண்டு வியந்த மன்னர் தர்மராஜா இவரை மாவேலிக்கர எனும் இடத்தில் வரி வசூலிக்கும் அரசு காரியக்காராய் நியமித்தார்.

ஆனால், ஆங்கில அரசுடன் கைகோர்த்த மன்னர் பலராம வர்மா, வேலுத்தம்பியை கைது செய்ய ஆணை பிறப்பித்தார். ஆங்கில அரசு வேலுத்தம்பியை உயிருடன் பிடித்து தருபவர்களுக்கு ஐம்பதாயிரம் ரூபாய் பரிசு அறிவித்தது.

ஒருபுறம் மன்னரின் படைகளும் மறுபுறம் பிரிட்டிஷ் கம்பெனி படைகளும் வேலுத்தம்பியை கைது செய்ய நான்கு திசைகளிலும் தேடுதல் வேட்டையை தொடங்கியது.

இதனை அறிந்த வேலுத்தம்பி தனது சகோதரனுடன் புறப்பட்டு கிளிமானூர் கோட்டையில் தஞ்சம் புகுந்தார். பிரிட்டிஷ் கம்பெனிக்கு எதிரான தன்னுடைய போராட்டத்தை பின்னர் வரும் தலைமுறைகள் அறிய வேண்டும் என்பதற்காக தன்னுடைய வாளை கிளிமானூர் அரச குடும்பத்தில் ஒப்படைத்தார்.

வேலுத்தம்பி இறுதியாக மண்ணடி பகவதி ஆலயத்தில் வந்து சேர்ந்தார். வேலுத்தம்பி மறைந்திருந்த இடத்தை கயவர்கள் ஆங்கில அரசிடம் அறிவித்தனர்.

ஆங்கிலப் படைகளின் கைகளில் அகப்பட வேலுத்தம்பியின் மானம் தடுத்தது. இதற்கு மேல் போராட முடியாது ஆங்கிலேயரிடம் கைதாக நேரும் என்று உணர்ந்த வேலுத்தம்பி சகோதரனிடம் தன்னைக் கொல்ல வேண்டினார்.

அவர் மறுக்கவே தன்னுடைய குத்துவாளை எடுத்து நெஞ்சில் குத்தி இறக்கினார். ஆனால், உயிர் பிரியவில்லை. ஆலயத்தின் வெளியே நின்ற ஆங்கிலப் படைகள் ஆலய வாசலை இடித்து உள்ளே வந்தது.

சகோதரன் பத்மநாபன் தன்னுடைய வாளை எடுத்து வேலுத்தம்பியின் தலையை வெட்டி வீழ்த்தினான். மக்களின் விடுதலைக்காக ஆங்கில அரசிடம் அடங்காமல் போராடிய மாவீரன் வேலுத்தம்பியின் உடல் அம்பிகையின் பாதங்களில் பணிந்தது....

 

நன்றி இணையம்