மதமாற்றங்களை தடுக்கும் ஈசா போன்ற அமைப்புகளை நாம் விமர்சிப்பது சரியா?

மணக்கால் அய்யம்பேட்டை | 10:29 AM | Best Blogger Tips


சிவராத்ரி தினம் முழுக்க ஈசா மையத்தை விமர்சித்தும், ஆதரித்தும் பதிவுகள் வந்தன! உண்மையில் இதுபோன்ற அமைப்புகள் நமது இந்து சமுகத்திற்கு நல்லதா? கெட்டதா? என்றால், கெட்டதைவிட நல்லதே அதிகம் என்பது என் கருத்து!

பொதுவாக இந்து மக்கள் ஏன் மதம் மாறுகிறார்கள் என்றால், இந்து மதத்தின் தத்துவங்களை எடுத்துச் சொல்ல சரியான ஆட்கள் இல்லை! ஆனால் பிற மதத்தை பரப்ப மூலை முடுக்கெல்லாம் ஆட்கள் உள்ளனர்!
மதம்மாற்றிகள் இந்து வீடுகளில் எப்பொழுது ஏதாவது பிரச்சனைவரும், மதம் மாற்றலாம், என்று காத்திருக்கின்றனர்.. இந்து குடும்பத்தின் டேட்டா முழுவதும் கிறித்தவ மதமாற்ற கும்பல்களின் கையில் உள்ளது! இந்துவீட்டில் சிறிய பிரச்சனை வரும்போது மூளைச்சலவை செய்து மதம்மாற்றுகின்றனர்..
Image may contain: 1 person, hat and beard
பொதுவாக மனிதர்களுக்கு மனதில் ஏற்படும் சஞ்சலங்களுக்கு ஒரு வடிகால் தேவைப்படுகிறது
ஆறுதல் சொல்வது, அல்லது நம்பிக்கையூட்டுவது முதலிய விஷயங்கள் தேவைப்படுகிறது. இது எளிதாக கிடைக்கும் மாற்றுமத அமைப்புகளின் வலையில் விழிப்புணர்வற்ற மக்கள் வீழ்ந்து சமுதாயத்திற்கும் சிலர் இந்த தேசத்துக்கும் கூட எதிரியாகின்றனர்!

ஈசா போன்ற அமைப்புகள் இந்துக்கள் மதம்மாறுவதை கணிசமாக தடுத்துவருகின்றன! மேலும் இந்துமதம் பற்றியோ அல்லது ஆசிரம தலைமை குரு பற்றியோ தீவிரமாக நம்பிக்கை பிரச்சாரங்கள் செய்கின்றன

மேலும் பெரும்பாலான கார்பரேட் மடங்களில் ஜாதிபாகுபாடும் இல்லை! இதனால் மன ஆறுதல் மற்றும் எதிர்கால நம்பிக்கையுடன் இந்த அமைப்பில் பலர் சேர்கின்றனர்.. நித்யானந்தர் போன்றவர்கள் சிவபெருமானின் மகிமைகள் பற்றி பாமரரும் உணரும்வண்ணம் எடுத்துக்கூறுகின்றனர்.. தீவிரமான இந்துமத ஆதரவாளர்களாகவும் உள்ளனர்! சில சாமியார்கள் மருத்துவம், கல்வி, வேலைவாய்ப்பு, ஆலய புணரமைப்பு என பல வேலைகளை செய்கின்றனர்!

என்னைப் பொருத்தவரை மதமாற்றங்களை தடுக்கும், இந்துமத தெய்வங்களின் மகிமையை எடுத்துரைக்கும் சாமியார்களை அவர்கள் சேவைக்காக ஆதரிக்கிறேன்! அவர்கள் வழிபாட்டு முறையையோ, பாலியல் பிரச்சனைகளையோ, நான்தான் கடவுள் என்று சொல்வதையோ ஆதரிக்கவில்லை!

மகா சிவராத்ரி அன்று பேஸ்புக்கில் பாருங்கள், இந்து அமைப்பினருக்குள் எத்தனை கருத்து வேறுபாடுகள்!
ஒருவன் சைவ-வைணவ பிரச்சனையை தூண்டிவிடுகிறான்!

இன்னொருவன் சாமியார்களை அடித்து விரட்ட வேண்டும் என்கிறான்.. சரி சாமியார்களை விரட்டி விட்டால் உன்னால் ஆகம விதிப்படி சிவ பூஜை செய்து தேவாரம் திருவாசகம் பாடி, மக்களுக்கு நம்பிக்கையை ஏற்ப்படுத்தி மதமாற்றங்களை தடுக்ம முடியுமா? என்றால், காலையில் எழுந்து இன்னும் அவன் குளிக்க கூட இல்லை என்கிறான்!

ஜக்கி வாசுதேவ் அவர்களோ, ரவிசங்கர், நித்யானந்தர், பாபா ராம்தேவ் முதலானவர்கள் இந்து மதமாற்றங்களை தடுக்கிறார்கள் என்பதால் எத்தனை முறை காங்கிரஸ், கம்யூ, திக, திமுக, போலித் தமிழர் மதமாற்ற அமைப்புகள் வசைபாட பட்டுள்ளனர் என்பது தெரியுமா? இவர்கள் மீதான வதந்திகளை மதமாற்ற கும்பல்களும்
மீடியாக்களும் தொடர்ந்து பரப்பி வருகின்றனர்.. தற்போது இந்துத்துவத்தினரும் சேர்ந்து இவர்களை தாக்குகின்றனர்!
ஐயா இந்து மத காப்பாளர்களே நீங்கள் முடிந்தால் ஆகம விதிப்படி பெரிய அமைப்புகளை ஏற்ப்படுத்தி மிகச்சரியாக விதிமுறைகளை பின்பற்றி இறைவனுக்கும் எளியவர்களுக்கும் சேவை செய்து, ஜாதிய பாகுபாடுகளை குறைத்து, மதமாற்றத்தை தடுங்கள்!

இதைவிட்டு திக, மதமாற்ற கும்பல்களின் செய்திகளை பகிர்ந்து இந்து மதம் மீது அவமரியாதையை ஏற்படுத்தாதீர்கள்!

மதமாற்றங்களை தடுப்பதால் இதுபோன்ற சாமியார்களை நான் ஆதரிக்கிறேன், ஆனால் தனிப்பட்ட முறையில் நான் இதுபோன்ற ஆசிரமங்களுக்கு செல்வது இல்லை! எனக்கு சுயமாக இந்துமதம் மீதான விழிப்புணர்வு உண்டு என்பதால் நான் கோவில்களுக்கு மட்டுமே சென்றுவருகிறேன்.. அதே நேரம் ஆசிரமங்களுக்கு செல்பவர்களை நான் விமர்சிக்கவில்லை!

ஒருவன் மதம்மாறுகிறான் என்றால், நம் தேசத்திற்கு எதிராக அவர்களில் சிலர் மாற வாய்ப்பு உண்டு என்பதை புரிந்துகொள்வோம்!


நன்றி இணையம்