நம்மில் பலபேரது வீட்டில் கண்டிப்பாக காமாட்சியம்மன் விளக்கு இருக்கும். தினந்தோறும் காலையும், மாலையும் அந்த விளக்கில் தீபத்தை ஏற்றி வழிபடுவதை வழக்கமாக வைத்
து இருப்போம். இதன் மூலம் நம் வீட்டில் லட்சுமி கடாட்சம் நிலைத்திருக்கும் என்பது ஐதீகம்.
இப்படி நம்முடைய வீட்டின் நன்மைக்காக ஏற்றப்படும் இந்த விளக்கை எந்த ஒரு குறையும் இல்லாமல் நாம் ஏற்றுவது தானே உத்தமம். காமாட்சி அம்மன் விளக்கு ஏற்றும் போது, நம்மை அறியாமலேயே நாம் செய்யும் சில தவறுகளை திருத்திக் கொள்ளத் தான் இந்த பதிவு
இந்த உலகமானது செழிப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக தவத்தை மேற்கொண்ட அம்மன் காமாட்சி அம்மன் என்று சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது.
இந்த தவத்தை காமாட்சியம்மன் மேற்கொண்ட சமயத்தில், மற்ற தெய்வங்கள் எல்லாம் காமாட்சி அம்மனிடம் வந்து சேர்ந்து ஐக்கியமாகி தவத்தை மேற்கொண்டதாகவும் கூறப்பட்டுள்ளது. ஆகவே அனைத்து தெய்வங்களின் ஆசியைப் பெற வேண்டும் என்றால் வீட்டில் தினம்தோறும் காமாட்சியம்மன் விளக்கு ஏற்றுவதை வழக்கமாக வைத்துக்கொள்ள வேண்டும்.
குலதெய்வம் தெரியாதவர்கள் தங்களது குலத்தைக் காக்க வேண்டிய பொறுப்பை காமாட்சி அம்மனிடம் ஒப்படைத்துவிட வேண்டும். தினந்தோறும் காமாட்சி அம்மனுக்கு தீபச்சுடர் ஏற்றும்போது ‘என் குலத்தை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு உன்னுடையது’ என்று நினைத்து தீபம் ஏற்றினால் போதும் நம் குலம் தழைத்தோங்கும் இப்படிப்பட்ட பல பெருமைகளை கொண்ட காமாட்சி அம்மனது விலக்கில், கஜலட்சுமியின் படம்தான் பதிக்கப்பட்டு இருக்கின்றது.
இதன் இருபுறங்களிலும் யானை இருக்கும். இந்த விளக்கை தான் நம் எல்லா வீடுகளிலும் வைத்து இருக்கின்றோம். பொதுவாக இந்த விலக்கினை ஒரு சிறிய தாம்பூலத்தின் மேல் வைத்துதான் தீபம் ஏற்றுவார்கள். காமாட்சி அம்மன் விளக்கை வைத்திருக்கும் அந்த தாம்பூலமானது விளக்கின் அடிப்பாகத்தை விட பெரியதாக தான் இருக்கவேண்டும்.
விளக்கை எடுத்து தட்டின் மேல் அமர வைத்தால், நன்றாக படிந்து இருக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் விளக்கின் அடிப்பாகத்தை விட சிறியதான தட்டில் காமாட்சி அம்மன் விளக்கை வைத்து ஏற்றக் கூடாது. தட்டின் மேல் வைக்கப்பட்ட காமாட்சியம்மன் விளக்கானது எக்காரணத்தைக் கொண்டும் ஆட்டம் காண கூடாது. நன்றாக அமர்ந்திருக்க வேண்டும்.
விளக்கினை ஏற்றும் இடத்தில் மஞ்சள் குங்குமம் வைத்து, அந்த மஞ்சள் குங்குமம் தீயில் கருகக்கூடாது. தீபச் சுடர் ஏற்றும் இடத்திற்கு சற்று தூரத்தில்தான் மஞ்சள் குங்குமத்தை வைக்க வேண்டும். தினம்தோறும் ஒரே திரியில் காமாட்சியம்மன் தீபத்தை ஏற்றக்கூடாது. திரியை தினம்தோறும் புதியதாக மாற்றப்படுவது மிகவும் சிறப்பான ஒன்று காமாட்சியம்மன் விளக்கிற்கு முன்பக்கத்தில் குங்குமப் பொட்டு வைத்து அலங்கரிக்கும் போது, பின்பக்கமும் ஒரு பொட்டை கட்டாயம் வைக்கவேண்டும்.(குங்குமப்பொட்டின் எண்ணிக்கை ஒற்றைப்படையில் அமைந்திருக்கவேண்டும்.)
யானை முகத்திற்கு குங்குமப்பொட்டு அவசியம் தேவை. காமாட்சி அம்மன் விளக்கை வைக்கும் அந்த சிறிய தாம்பூலத் தட்டில் கட்டாயம் 5 பொட்டுகள் வைக்க வேண்டும்.
அலங்கரிக்கப்பட்ட அந்த சிறிய தாம்பூலத்தில் சிறிதளவு தண்ணீர், ஊற்றி, ஒரு ரூபாய் நாணயத்தை போட்டு(சிங்கமுகம் மேலே பார்த்தவாறு), ஒரு சிட்டிகை மஞ்சள், ஒரு சிட்டிகை குங்குமம் அந்தத் தண்ணீரிலேயே கரைத்து, சிறிதளவு உதிரிப் பூவை தூவி, அதன்பின்பு காமாட்சி அம்மன் விளக்கினை அந்தத் தட்டின் மேல் வைத்து தீபம் ஏற்றுவது மிகவும் சிறப்பானது. வெறும் தாம்பாலத்தின் மேல் தீபத்தை ஏற்றுவதை விட, மேலே குறிப்பிட்டுள்ள பொருட்களைக் கொண்டு அலங்கரிக்கப்பட்ட தாம்பூலத்தில் வைத்து விளக்கில் தீபமேற்றுவது அதிக நன்மையை தரும்.
அலங்கரிக்கப்பட்ட அந்த சிறிய தாம்பூலத்தில் சிறிதளவு தண்ணீர், ஊற்றி, ஒரு ரூபாய் நாணயத்தை போட்டு(சிங்கமுகம் மேலே பார்த்தவாறு), ஒரு சிட்டிகை மஞ்சள், ஒரு சிட்டிகை குங்குமம் அந்தத் தண்ணீரிலேயே கரைத்து, சிறிதளவு உதிரிப் பூவை தூவி, அதன்பின்பு காமாட்சி அம்மன் விளக்கினை அந்தத் தட்டின் மேல் வைத்து தீபம் ஏற்றுவது மிகவும் சிறப்பானது. வெறும் தாம்பாலத்தின் மேல் தீபத்தை ஏற்றுவதை விட, மேலே குறிப்பிட்டுள்ள பொருட்களைக் கொண்டு அலங்கரிக்கப்பட்ட தாம்பூலத்தில் வைத்து விளக்கில் தீபமேற்றுவது அதிக நன்மையை தரும்.
தீபச்சுடர் எக்காரணத்தைக் கொண்டும் பந்தம் போல் எரியக் கூடாது. எண்னையை ஊற்றி பின்புதான் விளக்கேற்ற திரி போட வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் முதலில் திரிபோட்டு பிறகு எண்ணெய் ஊற்றக் கூடாது.
நன்றி இணையம்