அன்பை கொடு

மணக்கால் அய்யம்பேட்டை | 10:23 AM | Best Blogger Tips


மனதிற்கு பிடித்தது,.....நம் வாழ்வில் நமக்கு பல நெருங்கிய நண்பர்கள் இருக்கலாம் ஆனால் அவர்கள் அனைவரின் புரிதலும் நம் மீது ஒரே மாதிரி கட்டாயம் இருக்காது அப்படி அனைவருக்கும் நல்லவனாய் நாம் வாழ வேண்டும் என்று நினைத்தால் அது சாத்தியமே கிடையாது. முடிந்தவரை இறைவனுக்கும் நம் அறிவுக்கும் நாம் நேர்மையாக இருந்தாலே போதும்
கடலில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவனின் செருப்பு காணாமல் போய்விட்டது. அவன் உடனே கடற்கரையில், “இந்தக் கடல் மாபெரும் திருடன்...!” என எழுதிவிட்டான்.
கொஞ்சம் தூரத்தில் ஒருவர் அதிகமாக மீன்பிடித்துக் கொண்டிருந்தார். அவர் நினைத்ததை விடவும் அதிகமாக மீன்கள் வளையில் சிக்கின. அவர் அக்கடற் கரையில், “இக்கடல் பெரும் கொடையாளியப்பா...!” என எழுதிவிட்டார்.
அதே கடலில் ஒருவன் நீந்தச் சென்று மூழ்கிவிட்டான். மகன் மீது அதிக பிரியமுடன் இருந்த அவன் தாய் இக்கடல் மக்களை கொன்று குவிக்கின்றதே...!” என கரையில் எழுதினாள்.
ஓர் வயது முதிர்ந்த மனிதர் கடலுக்குச் சென்று முத்துக்களை வேட்டையாடிக்கொண்டு வந்தார். அவர் மிக்க மகிழ்ச்சியோடு அக்கரையில், “இந்தக் கடல் ஒன்றே போதும். நான் ஆயுள் முழுக்க மகிழ்ச்சியோடு இருக்கலாம்...!” என எழுதினார்.
பின்னர் ஓர் பெரும் அலை வந்து இவர்கள் அனைவரும் எழுதியவற்றை அழித்துவிட்டுச் சென்றது.
பிறர் கூறுவதை காதில் வாங்கிக் கொள்ளாதே.
இவ்வுலகை ஒவ்வொருவரும் ஒவ்வொரு கோணத்தில் பார்க்கின்றனர்.
உன் நட்பும், சகோதரத்துவமும் நிலைக்க வேண்டுமானால் நீ பிறரின் தவறுகளை உன் மனதிலிருந்து அழித்துவிடு. தவறுக்காக உன் நட்பையோ, சகோதரத்துவத்தையோ
அழித்துவிடாதே.
நீ ஓர் கெடுதியை சந்திக்க நேர்ந்தால் அதை விடவும் பலமாக அதற்கு பதிலடி கொடுக்க வேண்டுமென ஒரு போதும் எண்ணாதே. அப்படி கொடுக்க வேண்டும் என்று நினைத்தாலும் அன்பை கொடு
சிறிது சிந்தித்து, நலினமாக அதை கையாளு..
அன்பே சிவம்

நன்றி Bjp Anna Durai