ஸ்ரீரங்கம் - த்தின் வரலாறு மொழியின் ஜாதியின் பெயரால் பிரித்தாள்வதை விட்டுத்தொலையுங்கள்!

மணக்கால் அய்யம்பேட்டை | AM 10:08 | Best Blogger Tips
Image may contain: outdoor
சுமார் 750 ஆண்டுகளுக்கு முன்பாக ஒருநாள் ஸ்ரீரங்கம் நோக்கி முஸ்ஸிம் படை வருவதை ஒரு அரிசி வியாபாரி ஓடிவந்து சொல்லிவிட்டு செத்துவிழுந்தார். ஐம்பது கிலோமீட்டர் தூரம் தொடர்ந்து ஒடிவந்த அவரது வைராக்கியத்தை உடல் தாங்கவில்லை.
அதிர்ந்து போன ஸ்ரீரங்க வாசிகள் கோட்டைக்கதவுகளை மூடி கையில் கிடைத்த ஆயுதங்களைக் கொண்டு துலுக்கரை எதிர்க்க தயாராகினர்.
ஸ்ரீரங்கநாதனையும் நாச்சியாரையும் (உற்சவர்கள்) ஊர் இளைஞர்களையும் ஜம்பது பிராமணர்களையும் துணையாகக்கொண்டு ஸ்ரீரங்கத்தை விட்டு வெளியே பாதுகாப்பாக ஒரு மகான் எடுத்துச்சென்றார். அவரது திருநாமம் பிள்ளைலோகாச்சாரியார். அப்போது அவரது பிராயம் (வயது) 90. ஸ்வாமிகளது திருவரசு(சமாதி) மதுரை ஆனைமலை அருகே ஒத்தக்கடையில் உள்ளது.
அதேபோல ஸ்ரீரங்கம் திருக்கோயிலில் ஸ்ரீ பிள்ளைலோகாச்சாரியார் ஸ்வாமிகளுக்கு தனி சன்னதி உள்ளது.
மூன்று நாள் தீரத்துடன் போரிட்ட ஸ்ரீரங்க மக்கள் சோர்வடைந்தனர். கடைசி ஆயுதமாக ஆயிரம் ஆயிரம் ஹிந்து வீரமங்கையர் தங்களது ஆருயிர் அரங்கனின் கோவிலை காக்க தங்கள் உடலில் துணியை சுற்றி நெருப்பு வைத்துக்கொண்டு திருமதிலின் மீதிருந்து எதிரிகள் மீது பாய்ந்தனர். அந்த வீரமங்கையர் தங்கள் பங்கிற்கு ஒருநாள் துலுக்கரை தடுத்து நிறுத்தினார்கள்.
இந்த நாலு நாட்களில் ஸ்ரீ நிகமாந்த மகாதேசிக ஸ்வாமிகளும் மற்றொரு மகானும் அரங்கன் மற்றும் அரங்கஸ்ரீ யின் மூலவர்களை மறைத்து ஒரு கற்சுவற்றை எழுப்பி பிரதி மூலவர்களை பிரதிஷ்டை செய்து வைத்துவிட்டு அரங்கனின் கருணைக்கு பிரார்த்தித்து நின்றனர்.
ஒவ்வொரு கோட்டையாக இழந்த ஹிந்துக்கள் கடைசியாக "மேல அடையவிளஞ்சான்" வீதியில் ஒன்றுகூடி எதிரிகளை எதிர்த்து போரிட்டனர். கடைசிவரை அஞ்சாத வீரத்துடன் போரிட்ட அவர்கள் துருக்கர்களால் வெட்டி சாய்க்கப்பட்டனர்.
கடைசியாக இன்றுள்ள கொடிக்கம்பத்தை சுற்றி அரங்கனை துதித்தபடி அமர்ந்திருந்த அப்பாவி வயதான ஹிந்து பெரியவர்களும் குழந்தைகளும் கொஞ்சமும் கருணையின்றி வெட்டிக்கொல்லப்பட்டனர்.
கையில் கிடைத்த பெண்கள் துருக்க காட்டுமிராண்டிகளால் நாய்களைப்போல் கற்பழித்துக்கொல்லப்பட்டனர்.
பிணங்களோடு பிணம்போல கிடந்த நிகமாந்த தேசிகஸ்வாமிகள் சமயம்பார்த்து கோட்டைக்கு வெளியேறினார்.
ஏற்கனவே அரங்கத்த விட்டுச்சென்றிருந்த மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகளை கடந்து சுற்றி சத்தியமங்கலம் வந்தடைந்தது நிகமாந்த தேசிக ஸ்வாமிகள் சத்தியமங்கலம் வந்து அரங்கனின் கோஷ்டியை சேர்ந்தார்.
சில ஆண்டுகள் அரங்கனும் அரங்கஸ்ரீயும் சத்தியமங்கலத்தில் ஒரு குகையில் எளுந்தருளியிருந்தார்கள்.
சத்தியமங்கலம் பகுதியிலும் துருக்க உளவாளிகள் தலைகாட்டவே நமது கோஷ்டி இன்றைய சாம்ராஜ் நகரத்திற்கும் கொள்ளேகாலத்திற்கும் இடையில் அமைந்துள்ள சத்தியாகாலத்திற்கு அரங்கனையும் தாயாரையும் எடுத்துச்சென்றார்கள். அங்கேய அரங்கனும் தாயாரும் 32 ஆண்டுகள் எழுந்தருளியிருந்தனர்.
ஆக மொத்தம் 48 ஆண்டுகள் அரங்கனும் தாயாரும் திருவரங்கத்துக்கு வெளியே இருக்கவேண்டிய கொடும் துயரம் ஏற்பட்டது.
அரங்கனுடன் வந்த கோஷ்டியில் பலரும் இறந்து போயினர். நித்ய பூஜைகளுடன் பலப்பல உற்சவங்களையும் கண்டருளிய அரங்கனும் தாயாரும் அனாதைகள் போல குடியானவர்களின் ஆதரவில் காலந்தள்ளவேண்டியதானது.
அந்த வைணவ கோஷ்டிக்கு கலங்காத நெஞ்சத்துடன் தலைமை தாங்கிய நிகமாந்த தேசிக ஸ்வாமிகள் அரங்கனுக்கும் அரங்கஸ்ரீக்கும் மேலும் கோடிக்கணக்கான ஸ்ரீவைணவர்களுக்கும் ஏற்பட்ட கொடுமை கண்டு வருந்திய ஸ்வாமிகள் அபீதிஸ்தவம் என்கிற அற்புதமான ஸ்தோத்திரத்தை அரங்கனை முன்னிட்டு அருளிச்செய்தார்.
ஸ்வாமிகளே அதை நித்தியப்படி பாராயணமும் செய்துவந்தார்கள்.அதாவது துருக்கரால் பூலோக வைகுண்டமான ஸ்ரீரங்கத்திற்கு ஏற்பட்டுள்ள பீதியை போக்கியருளும்படி பிரார்த்தித்துக்கொண்டு தினம் தினம் பாராயணம்செய்தார்கள்.
அந்த காலத்தை தமிழகத்தின் பிரளய காலமென்று பெரியோர் வர்ணித்துள்ளனர்.
அப்பொழுது ஒட்டு மொத்த தமிழினமும் தோற்கடிக்கப்பட்டு மதுரை சுல்தானிய அரசு ஸ்தாபிக்கப்பட்டு ஹிந்துக்களின் மீது சொல்லொணா கொடூரங்கள் இளைக்கப்பட்டன.
தமிழர்க்கு நேர்ந்த கொடூரங்களால் மனம் கலங்கிய மேலைச்சாளுக்கிய பேரசர் 2ம் வீரவல்லாளர் தனது எழுபதாவது வயதில் ஒரு லட்சம்படையுடன் தமிழர்களை காக்க மதுரை மீது படையெடுத்துவந்தார்.
ஆனால் யுத்த தர்மங்களை முறித்து வஞ்சகமாக வல்லாளரை கைது செய்த மதுரை சுல்தானியர் அவரை உயிருடன் தோலை உரித்து மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வாசலில் கட்டி தொங்கவிட்டான்கள்.
அவரது படை சிதறி ஒடியது.
வல்லாளர் தோற்றதால் அவரது ராஜ்ஜியம் துருக்கப்பாவிகளின் தாக்கதலுக்குள்ளானது. ஆனால் அவரது மாவீர ராணி அசாத்ய தீரத்துடன் போரிட்டு தேசத்தை காத்து வந்தார். அவருக்கு உதவியாக ராணியின் சகோதரர் ராமலிங்க ராஜா பெரும்பணியாற்றினார். ராணி அந்த பரிதாப நிலையிலும் தமிழர்களுக்கு தன்னாலான உதவிகளை செய்து வந்தார்.
தமிழர்மீதான ராணியின் பாசத்தை அறிந்த துருக்க வஞ்சகன் போரை நிறுத்திவிட்டு தூது அனுப்பினான்.
சாளுக்கிய தேசம் தனக்கு கீழ்படியாவிட்டால் தமிழகத்தின் மீது படையெடுத்து ஒட்டுமொத்த தமிழகத்தையும் சுடுகாடாக்கப்போவதாக அச்சுறுத்தினான்.
அதிர்ச்சி அடைந்த ராணி மாரடைப்பு ஏற்பட்டு இறந்து போனார். ராணிக்கு அடுத்த நிலையிலிருந்த ராமலிங்கராஜா வேறு வழியின்றி துலுக்கனுக்கு பணிந்தார்.
16 அடி நீள,அகல, ஆள குழிவெட்டப்படு அதை பொன் வைரம் வெள்ளியால் நிரப்பச்சொல்லி ஆணையிட்டான் துலுக்கன். ராஜா அவ்வாறே செய்ய மகிழ்ந்த துருக்கன் தானடைந்த பொன்னையும் பொருளையும் வண்டிகளிலேற்றி டெல்லிக்கு அனுப்பினான்.
சமாதான அறிவிப்பாக சாளுக்கிய பேரரசினுடைய அரியணையில் துலுக்கன் மூன்று நாள் அமர்ந்து ராஜதர்பார் நடத்த நம்மவர்கள் கைகட்டி வாய் பொத்தி நின்றனர். முன்னூறு ஆண்டுகள் அசைக்க முடியாத ராஜ்யமாக விளங்கிய சாளுக்கிய சாம்ராஜ்ஜியம் தமிழர்கள் மீதுகொண்ட பாசத்தால் அழிவுக்கும் அவமானத்துக்கும் ஆளானது.
நான்காம் நாள்புறப்பட்ட துருக்கன் மேலும் ஒரு கொடூர நிபந்தனையை ராமலிங்க ராஜருக்கு விதித்தான். அதாவது நன்னடத்தை சான்றாக ராமலிங்கர் தனது ராணியையும் இரண்டு இளவரசிகளையும் ஒப்படைக்க வேண்டுமென உத்தரவிட்டான்.
ராஜா தயங்க மீண்டும் தமிழகம் நோக்கி தனது படையை திருப்பவா என துருக்கன் எகத்தாளமாக கேட்க கருணாமூர்த்தியான அந்த அரசர் நம்மை காக்க சண்டாளனின் நிபந்தனைக்கு சம்மதித்தார்.
தனது கணவனின் கட்டளையை வேதவாக்காக கொண்ட ராணி தனது இரண்டு தவப்புதல்விகளுடன் துருக்கனுடன் சென்றார். ராணியும் இளவரசிகளும் தங்களுக்கு என்ன நேர்கிறது என்பதை அறிந்தே நம்மை காக்க அன்னியனுக்கு அடிமைப்பட்டுக்கொண்டனர். கண்ணீர் வழிய ராஜாவும் மற்றவர்களும் நிலைகுலைந்து நின்றனர்.
அதன்பிறகு 25 ஆண்டுகள் தமிழினம் பட்ட துயரம் விவரிக்க இயலாது.
ஸ்ரீரங்கமன்னார் கோவில் மட்டுமல்லாமல் அந்த காலத்தில் திருவண்ணாமலையார் கோவில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆகியவை துருக்கர் குதிரை லாயங்களாக இருந்தன.
தமிழக திருக்கோவில் உற்சவ திருமேனிகள் அனைத்தும் கேரளத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டு சமோரின் மன்னர்களால் பாதுகாக்கப்பட்டன.
தமிழ் சமுதாயம் தங்களுக்கு அழிவுகாலம் ஏற்பட்டுவிட்டதாக கருதி நிலைகுலைந்து போயிருந்தது.
அன்று மானமிழக்காப் பெண்டிரில்லை. எதிர்த்த ஆண்கள் கழுவிலேற்றி கொல்லப்பட்டனர்.
பெற்றோர் கண்முன் குழந்தைகளை கொல்வது, குழந்தைகள் முன்பே தாய்மார்களை நிர்வாணப்படுத்தி கற்பழிப்பது என வித விதமான சித்ரவதை செய்தனர்.
ஆனால் ஆச்சார்ய சார்பௌமர் ஸ்ரீமத் நிகமாந்த தேசிக ஸ்வாமிகளின் பிரார்த்தனை வைகுண்ட வாசனை எட்டியது போலும்.
விஜய நகரத்தின் இளவரசர் "வீர குமா கம்பண்ண உடையார்" தமிழர்களை காக்க படையெடுத்து வந்தார். அவர் வல்லாளர்போல் தர்மயுத்தம் நடத்திக்கொண்டிருக்கவில்லை. அவரது சாகச யுத்தத்திற்கு முன் ஒரு துருக்கனும் உயிர்தப்பவில்லை.
தமிழர்களுக்கு சுதந்திர வாழ்வை மீட்டளித்தார்.
மேற்கண்ட கொடூர வரலாற்றை ஸ்ரீரங்க திருக்கோவில் சார்ந்து எழுதப்பட்ட தமிழக வரலாறான கோயிலொழுகு கூறி ரத்தக்கண்ணீர் வடிக்கிறது.
மேலும் குமார கம்பண்ணரது மனைவியும் சமஸ்கிருத மேதையும் பெரும் கவியரசியுமான ராணி கங்காவதி "மதுரா விஜயம்" அல்லது "குமார கம்பண்ண பிரபாவம்" என்கிற பெயரில் நாட்குறிப்பாக எழுதிவைத்துள்ளார்.
மேலும் இஸ்லாமிய யாத்ரிகர் இபின் படூடாவும் எழுதிவைத்துள்ளார்.
ஆனால் நமக்காக போரிட்டு அத்னையும் இழந்து சொல்லொணா துயரங்களை அனுபவித்தவர்களை தெலுங்கன் மலையாளி கன்னடன் வடவன் மறாட்டி வெளியேறு என நன்றி கெட்டுப்போய் அவமானப்படுத்தி பாவம் தேடுகிறோம்.
இந்த வரலாற்றை அறிய இன்றைய ஆந்திர மற்றும் தெலுங்கானாவின் வாரங்கல் கர்னூல் கடப்பா ஆகிய மாவட்டங்களுக்கு சென்றால் இன்றும் அங்குள்ள மக்கள் அனைத்து நிகழ்வுகளிலும் தங்கள் தியாக ராணியையும் ராஜ குமாரிகளையும் ராஜாவையும் புகழ்ந்து பாடும் நாட்டுப்புற பாடல்களை பாடுவதை கேட்கலாம்.
திருமணம் குழந்தை பிறப்பு
பெண்பிள்ளைகள் சடங்கானால்
மேலும் விதைவிதைக்க
நாற்று நட அறுவடை செய்ய என அனைத்து நிகழ்வுகளிலும் மேற்கண்ட பாடலை பாடாமல் காரியமாற்றார்.
மேற்படி நாட்டுப்புற பாடல்களில் ஸ்ரீரங்கத்தின் பெருமை, அங்கே அருளாட்சி செய்யும் திவ்ய தம்பதிகளின் புகழ், அழகு எல்லாம் வரும்.
அத்தோடு தமிழர்களின் மேன்மை புகழ் வீரம் எல்லாம்பரந்துபட்டு பாடப்படும்.
விதிவசத்தால் ஸ்ரீரங்கமும் தமிழர்களும் துருக்க பாவிகளுக்கு அடிமையாக நேர்ந்த வரலாற்றை பாடுவர்.
அடுத்ததாக வீரவல்லாளர் சரித்திரம் பாடப்படும். அவருக்கு ஏற்பட்ட கொடூர முடிவு துக்கத்துடன் பாடுவர்.
அடுத்து ராமலிங்க ராஜா மற்றும் அவரது தியாக சொரூமான ராணி மற்றும் இளவரசிகளைப்பற்றி விஸ்தாரமாக பாடுவார்கள்.
அப்போது பல வம்ச பாரம்பர்யத்தை சேர்ந்த இளைஞர்கள் பற்றி பாடல்கள் வரும்.
அந்த இளைஞர்கள் யாரென்றால் - ராமலிங்க ராஜா தனது ராணியையும் இளவரசிகளையும் துருக்கருக்கு அடிமையாக அனுப்பினாலுலேல் எங்கள் அன்னையான ராணியையும் ராஜகுமாரிகளையும் அன்னியரிடம் விட்டுவிட்டு உயிர் வாழ சகியோம் என்று வீரம் உந்த துருக்க படையணிமீது பல குழுக்களாக போர்தொடுத்து துருக்க படைகளால் வெட்டி சாய்க்கப்பட்டவர்கள்.
இன்றும் அந்த இளைஞர்கள் நினைவாக நடப்பட்ட நடுகற்களை காணலாம்.
கடைசியாக துருக்கரை ஜெயங்கொண்ட குமாரகம்பண்ண இளவரசரைப் போற்றி பாடல் பாடுவார்கள்.
ஆனால் தெலுங்கனே வெளியேறு என்று குரைக்கும் நான்றிகெட்ட நமக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் ஒரு பாடலை இன்றும் முத்தாய்ப்பாக பாடுவார்கள்.
அந்த பாடலில் முதல்பாகமாக தங்களுக்கு வீரமுள்ள ஆண்பெண் குழந்தைகளுடன் ஆன வம்ச விருத்தியை வேண்டுவார்கள். செல்வம் வேண்டுவார்கள்.
கடைசியாக தமிழர்களது நல்வாழ்வை வேண்டி மனமுருக சிலவரிகள் பாடுவார்கள்.
தாங்களும் தங்களது பேரரசர்கள் வீரவல்லாளர் போலவும் குமாரகம்பண்ணர் போலவும் தமிழர்களுக்காக உயிரையும் கொடுக்க சித்தம்கொண்டிருப்பதாக சூளுரைத்து முடிப்பார்கள்.
திருந்துவோமா? அனைத்து இந்துக்களையும் கொண்டாடுங்கள். மொழியின் ஜாதியின் பெயரால் பிரித்தாள்வதை விட்டுத்தொலையுங்கள்!

  
நன்றி இணையம்