ஹிந்துக்களிடம்
யுத்த நியதிகள்
இருந்தன. யுத்தம்
திறந்த வெளி
மைதானத்தில் தான்
நடக்கவேண்டும். ஊருக்குள்,
நகரத்தில் சேனைகள்
புகுந்து அட்டூழியங்கள்
செய்யக்கூடாது. சூரிய
உதயத்தில் ஆரம்பித்து,
சூரியன் அஸ்தமிக்கும்
நேரத்திற்குள் சண்டை
முடிந்திருக்க வேண்டும்.
காலாட் படைவீரர்
எதிரி காலாட்
படை வீரருடன்
தான் சண்டை
இடவேண்டும். அதாவது
குதிரை வீரர்
காலாட் படை
வீரருடன் சண்டையிடக்
கூடாது. இப்படிப்பட்ட
விதிமுறைகளை ஹிந்துக்கள்
ஒரு போதும்
மீறியதில்லை.
மாறாக இஸ்லாமியர்கள்
மூர்க்கமாக போர்
புரிந்தார்கள். போரில்
அனைத்து தந்திரங்களையும்
பயன்படுத்தினர். அவர்களது
போரின் நோக்கமே
மதத்தை ஸ்தாபிப்பதுதான்.
இதற்காக அவர்கள்
பல கொடூர
முறைகளையும், யுக்திகளையும்
கையாண்டனர். ஹிந்து
சேனைகள் போர்
புரிந்து கொண்டிருக்கும்போது
பசு மாடுகளை
விரட்டி விடுவார்கள்.
இரவில் கூடாரத்தில்
தூங்கி கொண்டிருக்கும்
வீரர்களை எதிர்பாராமல்
தாக்குவார்கள். கிராமத்தில்
இருக்கும் மக்களை
பலவந்தமாக தூக்கிச்
செல்வார்கள். இப்படியாக
ஹிந்து - இஸ்லாமிய
போர்களில் ஹிந்து
சேனைகள் விதிமுறைகளை
கடைப்பிடிப்பதும் இஸ்லாமிய
சேனைகள் எந்த
விதிமுறைகளையும் கடை
பிடிக்காமல் செயல்பட்டதும்
தான் ஹிந்துக்களுக்கு
பெரும் நஷ்டம்,
இழப்புகள் ஏற்பட்டதற்கான
காரணம். பெரும்பான்மையான
போர்களில் ஹிந்து
மன்னர்கள் இவ்வகையில்தான்
தோற்றார்கள்.
இதைப் புரிந்துகொண்டு
போர் யுக்தியை
முதன் முதலில்
மாற்றிய ஹிந்து
மன்னர் உட்கல்
பிரதேசத்தை (இன்றைய
ஒரிசா மாநிலத்தின்
வட கிழக்குப்
பகுதி) ஆண்ட
நரசிம்ம தேவர்.
இவர் அன்று
செய்த காரியத்தினால்தான்
இன்று இந்திய
மாநிலங்களிலேயே இஸ்லாமியர்கள்
குறைந்த அளவினராக
இருக்கும் மாநிலமாக
கலிங்கா (ஒரிசா)
இருக்கிறது.
13 ஆம்
நூற்றாண்டில் நரசிம்மதேவர்
என்பவர் உட்கலை
ஆண்டு கொண்டிருந்தார்.
அப்கான் நாட்டைச்
சேர்ந்த துகான்
கான் என்ற
கொடுங்கோலன் வங்க
தேசத்தைப் பிடித்து
அங்கு இஸ்லாமிய
மதத்தை திணித்தான்.
துகான் கான்
உட்கல் ராஜ்ஜியத்தின்
மீது போர்
தொடுத்தான். இதற்கு
முன்னர் துகான்
கான் வங்க
தேசத்தின் மீது
போர் தொடுத்த
போது அத்
தேசத்தின் மன்னர்
லட்சுமண சேனா
துகான் கானை
எதிர்த்து போர்
புரியாமல் ஓடிவிட்டான்.
உட்கல் உள்ளே
நுழைந்த பெரிய
இஸ்லாமிய சேனையிடம்
நரசிம்ம தேவர்
தன் தூதுவர்
மூலம் சண்டையிடாமல்
சரணடைவதாக ஒப்புக்கொண்டார்.
இதைக் கேட்டு
மகிழந்த துகான்
கான் மூன்று
நிபந்தனைகளை விதித்தான்.
1) ஜகன் நாதர்
ஆலயம் அமைந்திருக்கும்
பூரி நகரை
தன்னிடம் ஒப்படைக்கவேண்டும்,
2) உட்கல் வீரர்கள்
ராஜா உட்பட
தங்கள் ஆயுதங்களை
ஒப்படைத்துவிட்டு இஸ்லாமியர்களாக
மதம் மாறவேண்டும்,
3) ஜகன் நாதர்
ஆலயத்தை மசூதியாக
மாற்றவேண்டும்.
இவை அனைத்திற்கும்
நரசிம்ம தேவர்
ஒப்புக்கொண்டார். ஹிந்துக்கள்
சரணடைவதற்கான பெரிய
நிகழ்ச்சிக்கு ஏற்பாடு
செய்யப்பட்டிருந்தது. ஹிந்துக்கள்
அனைவரும் தங்கள்
ஆயுதங்களுடன் சரணடையும்
இடம் பூரி
ஜகன்நாதர் ஆலயம்.
குறிப்பிட்ட
அந்நாள் வந்தது.
நரசிம்ம தேவர்
பூரியில் உள்ள
அனைத்து பொது
மக்கள் மற்றும்
யாத்ரீகர்களை ரகசிய
முன்னறிவிப்பு செய்து
வெளியேற்றிவிட்டார். பூரியில்
உள்ள அனைத்து
வீடுகளிலும், சந்து
பொந்துகளிலும் உட்கல்
வீரர்கள் பதுங்கி
இருந்தனர். ஆயுதங்களுடன்
தயார் நிலையில்
இருந்தனர். துகான்
கானின் படை
பூரி நகருக்குள்
நுழைந்தது. அவர்கள்
குறுகிய சந்துகளின்
வாயிலாக கோயிலை
அடைந்தனர். கோயிலை
அடைந்தது தான்
தாமதம், கோயில்
மணி ஓசை
கணீர்.... கணீர்....
என அடிக்கத்
தொடங்கியது. இஸ்லாமிய
படையினருக்கு ஒன்றும்
புரியவில்லை. மறைந்திருந்த
உட்கல் வீரர்கள்,
யாரும் எதிர்பார்க்காத
வேளையில் திடீர்
தாக்குதலில் ஈடுப்பட்டனர்.
வீடுகளின் மாடி
மீதிருந்து பெரும்
கற்கள் வீசப்பட்டன.
அம்பு மழை
பொழிந்தது. திக்கு
தெரியாமல் தலைதெறிக்க
ஓடிய இஸ்லாமிய
வீரர்களை நாலா
பக்கமும் சூழ்ந்திருந்த
உட்கல் வீரர்கள்
தங்கள் வாட்களுக்கு
இரையாக்கினர். இஸ்லாமியப்
படை திணறி
ஓடியது. காலையில்
ஆரம்பித்த சண்டை
இரவுவரை தொடர்ந்தது.
எலிப்பொறியில் மாட்டிக்கொண்ட
இஸ்லாமியப் படை
துவம்சம் செய்யப்பட்டு
நிர்மூலமானது. ஹிந்துக்கள்
அபார வெற்றி
அடைந்தார்கள். அதன்
பின்னர், பல
நூற்றாண்டுகளாகியும் இஸ்லாமியர்களின்
ஆக்கிரமிப்பு உட்கல்
பிரதேசத்தில் நடைபெறவில்லை.
இந்த வெற்றியை
கொண்டாடும் விதமாக
நரசிம்மதேவர் உலக
பிரசித்தி பெற்ற
சூரியனுக்கான கோனார்க்
கோவிலை நிறுவினார்.
நரசிம்ம
தேவர் பயன்படுத்திய
போர் யுக்தியை
தான், பின்னர்
விஜய நகர
பேரரசும், பின்னர்
மராத்தியத்தில் வீர
சிவாஜியும் பயன்படுத்தினர்.
இதனால் இஸ்லாமியர்கள்
பல தோல்விகளை
சந்தித்தனர். பெரும்பான்மையான
மக்கள் மதம்
மாற்றப்படாமல் தடுக்கப்பட்டனர்.
Thanks Web