


ஒரு திருமணம்.
பெரியவர் ஒருவர் மணமக்களை வாழ்த்த ஆயிரம் ரூபாய் நோட்டோட மேடைக்கு சென்றார்.
மணமக்களை பார்த்து ஆயிரம் ரூபாய் தாளை எடுக்க..உடனே உள்ளே வச்சிட்டு பாக்கெட்டில் இருந்து ஒரு நூலை எடுத்து ஒரு முனையை அவர் பிடித்துக்கொண்டு மறுமுனையை மணமக்களை பிடித்து அதை இழுத்து அறுக்கச் சொன்னார்.
அவர்களும் இழுத்தார்கள் ஆனால் பெரியவர் இழுத்து பிடிக்காமல் அவர்கள் பக்கம் சாய்ந்து நூல் அறுந்து போகாமல் பார்த்துக்கொண்டார்
இப்படியே பலமுறை செய்தும் மணமக்களே சோர்ந்து போயினர்.
பிறகு அந்த பெரியவர் சொன்னார் இப்படித்தான்
வாழ்க்கையும் ஒரு முனை கணவரும் மறுமுனை மனைவியும் ஆளாளுக்கு இழுத்தா வாழ்க்கையெனும் அறுந்துவிடும்.
அதனால கணவனும், மனைவியும் ஈகோ பார்க்காமல் விட்டுக்கொடுத்தால் வாழ்க்கை எனும் நூல் அறுந்து போகாமல் இருக்கும் என சொல்ல அங்க அமர்ந்திருந்தவங்க எழுந்து நின்னு கைதட்டி மகிழ்ச்சிய தெரிவித்தாங்க.
ஈகோவை விடுங்க இனிமையாய் வாழுங்க...!!.

















ed;wp ,izak;