ஆடி மாத சிறப்பு : பூச்சட்டி / தீச்சட்டி / அக்னி சட்டி எடுப்பது ஏன் ?

மணக்கால் அய்யம்பேட்டை | 10:41 AM | Best Blogger Tips


அம்மனுக்கு செலுத்தும் காணிக்கைகளில் முக்கியமானது பூச்சட்டி அல்லது தீச்சட்டி அல்லது அக்னி சட்டி எடுப்பதாகும். புதிய அகன்ற மனச்சட்டிகளை கோயில்களில் எரித்து , விறகுக் கங்குகளை நிரப்பி , அதில் பூ வேப்பிளை சுற்றி வைப்பார்கள். சட்டி எடுப்பவர்கள் பயபக்தியுடன் மஞ்சள் ஆடை அணிந்து , மஞ்சள் நீரை தலையில் ஊற்றிக் கொண்டு , ஈர ஆடையுடன் கைகளில் வேப்பிளை ஏந்தி , அதன் மேல் தீச்சட்டி ஏந்தி கோயிலை வலம் வருவார்கள். தீச்சட்டி எடுப்பவர்கள் கம்பம் நட்ட நாளில் இருந்து பயபக்தியுடன் விரதம் இருப்பர். தீச்சட்டி ஏந்தி வருபவர்களின் பாதங்களில் மஞ்சள் நீர் ஊற்றி வணங்குவர். பூச்சட்டி ஏந்தும் பக்தர்கள் அம்மனின் அருள் பெற்றவர்களாகவே கருதப்படுவார். கோயிலை மூன்று முறை வலம் வந்த பின் சட்டியை கோயிலில் செலுத்திவிட்டு அம்மனை வணங்குவர். அக்னி சட்டி எடுப்பவர்களில் ஆண்கள் பெண்கள் என்ற பேதமில்லை.
**** அம்மன் தீச்சட்டி ஏந்தி ஊர்வலம் வந்தாள் என்றால் அக்னி குழம்பான அவள் ஊரில் உள்ள அத்தனை கெட்ட வினைகளையும் சுட்டேரித்து விடுகிறாள் என்று அர்த்தம். மனிதர்கள் ஏந்தும் போது நன்றிகடனாக அம்மனையே தீ குழம்பாய் ஏந்தி வருகிறார்கள் என்றே அர்த்தம்.
ஓம் சக்தி......ஓம் சக்தி......ஓம் சக்தி
Happy Friday Morning my Dear Guru, GOD, 
brothers,sisters and Friends!! 
Have a great and wonderful day ahead!!! God Bless!! 
இறைவன் நினைவே இனிய காலை வணக்கம்.இந்த நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன் !! நலமுடன்!! 
நன்றி!! நன்றி!! நன்றி!! ஓம் சிவ சத்தி ஓம்
-என்றும் அன்புடன் Mu DhanaLakshmi Chandaran