நீரிழிவு (சர்க்கரை) நோய் எதனால் ஏற்படுகிறது? அதற்கான அறிகுறிகள் என்ன? இந் நோய் வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்? சர்க்கரை, இனிப்பு சாப்பிடுவதால் இது ஏற்படுகிறதா? இந்த நோய்க்கு ஆயுர்வேதத்தில் முறையான தீர்வு உண்டா? உணவில் வெல்லம், சர்க்கரை, புதிய அரிசி, மாவுப் பண்டங்கள், எருமைப்பால், தயிர் மீன்
முதலியவற்றைச் தொடர்ந்து அதிக அளவில் சாப்பிடுதல், உடற்பயிற்சி இல்லாமை, பகல் தூக்கம், மிருதுவான சோபா மெத்தைகளில்
எப்போதும் அமர்ந்திருத்தல், எவ்வித அலுவலும் சிந்தனையும் சிறிதும்
செய்யாமல் உண்ணல், உறங்கலுடன் சோம்பேறியாய் இருத்தல், அதிக
கலைவ, dF, துக்கம் போன்ற காரணங்களால் ரக்தம், மாம்சம், மேதஸ்
என்னும் தாதுக்களில் உணவின் சாராம்சத்தை ஜீரணிக்கச் செய்யும்
அக்னி எனும் நெருப்பின் சக்தி குன்றிவிடுவதால் இனிப்புடன்
கூடிய அன்னரசம் தாதுக்களில் ஜீர்ணமாகிச் சேராமல் இனிப்பாகவே
ஊடுருவிக் கொண்டிருக்கிறது. உடலின் திரவமான கழிவுப்
பொருள்களில் முக்கியமான சிறுநீர் வழியே இந்த இனிப்பான உணவின்
சாராம்சம் முழுமையாக வெளிப்படுகிறது.
சிறுநீர் அதிக அளவில் வெளியாதல், தீவிரமான தண்ணீர் தாகம், கை -கால்
எரிச்சல், அதிக தளர்ச்சி, சோர்வு, தோலில் வறட்சி, மலச்சிக்கல், நாக்கில்
மாவு படிதல் போன்ற அறிகுறிகள் நீரிழிவுப் நோய் வந்துள்ளதைக்
காட்டுகின்றன. இந்த நோய் வராமல் தடுக்க உணவை எப்போதும் பசி நன்கு வந்த
பிறகுதான் சாப்பிட வேண்டும். சாப்பிட்டதும் சிறிது நேரம்
அரசனைப் போல் அமர்ந்து பிறகு குறைந்தது நூறு அடிகளாவது நடக்க வேண்டும். நொறுக்குத் தீனிகளைத் தவிர்த்து சத்துள்ள உணவை மட்டுமே உட்கொள்ள
வேண்டும். உடற்பயிற்சியின் மூலம் பசியும் தாதுக்களிலுள்ள நெருப்பும் தூண்டப்படுவதால் ஜீரண உறுப்புக்களின் சீரான செயல்பாடுகளால் எவ்வித நோயும் அண்டாமல் பாதுகாத்துக் கொள்ளமுடியும். இந்த நோய்க்கான
தீர்வை ஆயுர்வேதம் மூன்று வகையில் குறிப்பிடுகின்றது.
அவை பத்தியம், நடவடிக்கை, மற்றும் மருந்துகள். பத்தியத்தில் உணவாக பழைய
புழுங்கலரிசி மற்றும் கோதுமை தனியாகவும் இரண்டும் கலந்தும் முக்கிய உணவாய்ச் சாப்பிடலாம். இவைகளுடன் கேழ்வரகு, கொத்துக் கடலை, துவரை, கொள்ளு, பாசிப்பயிறு போன்றவைகளை மிதமாய்க் கூடவே சேர்க்கவும்.
காய்கறிகள் முக்கியமாய்க் கசப்பு, துவர்ப்புச் சுவையுள்ள கீரைகளும்
தாராளமாய்ச் சேர்க்க வேண்டும். புளிப்பும் கூடாது. நெய்யும் அதிகம் சேர்க்கக்கூடாது. முடிந்தவரை அதிகமாக மஞ்சள் கிழங்கை உணவில் சேர்ப்பது உத்தமம். அது போல் முற்றிய பச்சை நெல்லிக்காய் மிகவும் சிறந்தது.
துவையல் செய்தும் சாறு எடுத்து சாதத்தில் கலந்தும் சாப்பிடுவது
நல்லது. பத்தியமும் உடற்பயிற்சியும் விடாது செய்துகொண்டிருக்க
வேண்டும். நோயின் சீற்றத்தைக்

குறைக்க 1. வில்வபத்ர ஸ்வரஸம் - சுமார் 10 கிராம் வில்வ இலையை
கெட்டியாக அரைத்து சுமார் 50 I.L. பாலில் அல்லது நீரில் குழப்பிப்
பிசைந்து வடிகட்டி காலை, மாலை வெறும் வயிற்றில் குடிக்கவும்.

2. நிம்ப பத்ர ஸ்வரஸம் - வேப்பிலையை வில்வ இலை போல் செய்து
சாப்பிடவும்.
3. நிசா ஆம்லகீ சூர்ணம் 3-5 கிராம் வெந்நீருடன் காலை இரவு உணவிற்கு முன்பு சாப்பிடவும். முழுமையான தீர்வை, பத்தியம், உடற்பயிற்சி மற்றும் மருந்துகளால்
நிச்சயம் பெற முடியும். மலம் வெளியாகும்பொழுது ரத்தம் வருவதன் காரணம் என்ன?
இதற்கு ஆயுர்வேத மருந்துகள் என்னன்ன?
தாதுக்களுக்கு ஜீவனை அளிப்பதால் ஆயுர்வேதம் ரத்தத்தை ஜீவன் என்றும் பிராணன் என்றும் குறிப்பிடுகிறது. உயிர்தரும் வஸ்துவாக இருப்பதால் ரத்தத்தை
பரிசுத்தமாகவும் புஷ்டியாகவும் காப்பாற்ற வேண்டியது போல், துளி
ரத்தமும் வீணில் விரயமாகாமல் காப்பது அவசியம். பித்தத்தின் கொதிப்பினால் பெருங்குடலில் ஏற்படும் புண்ணிலிருந்து ரத்தம், மலம் கழிந்தபின் வெளியாகிறது.
அதனால் புளிப்பு, காரம், உப்புச் சுவையுள்ள உணவுகளைத்
தவிர்ப்பது நலம். சாதா உப்புக்குப் பதிலாக இந்துப்பு சிறிய அளவில் உணவில் சேர்க்கலாம். துவர்ப்பு, கசப்பு, இனிப்புச் சுவை நல்லது.
இனிப்பு மாதுளம் பழ ரசம் எந்த நிலையிலும் மிக நல்லது.
புளிக்காத சாத்துக்குடி, ஆரஞ்சு, திராட்டைப் பழங்கள் சாப்பிடலாம்.
அதிகம் புளிக்காத மோர் உணவில் சேர்ப்பது நலம். நல்ல பசியுள்ளவராக
இருந்தால் நெல்பொரி மாவு, தினைப்பொரி மாவுக் கஞ்சி
சாப்பிடவும். கருப்பு எள்ளு வாணலியில் வறுத்துத் தூள்
செய்து 3-5 கிராம் வெண்ணையுடன் குழைத்து காலை, இரவு,
உணவிற்கு அரை மணி நேரம் முன்பு நக்கிச் சாப்பிடவும்.
மோருடன் கலந்து அன்னத்தை உண்ணும் போது புளியாக்கீரை,
கருவேப்பிலை சேர்த்து துவையல் செய்து தொட்டுக் கொள்ளவும்.
மாசிக்காய், இலவம்பிசின், பூங்காவிக் கல், கொம்பரக்கு,
படிக்காரம், பூங்காவிக் கல்லைக் கொஞ்சம் நெய்தடவி வறுத்துப்
பொடித்துக் கொள்ளவும். படிகாரத்தை அப்படியே சுத்தமான
இரும்புக் கரண்டியில் உருக்கிப் பொரித்து சூர்ணம் செய்து
கொள்ளவும். மற்ற மூன்று சரக்குகளை அப்படியே தனியாக
நன்கு சூர்ணம் செய்து சம எடையாகச் சேர்த்துக் கலந்து
வைத்துக் கொள்ளவும். 5 அரிசி எடை முதல் 25 அரிசி எடை வரையில்
வயதுக்கேற்றபடி தேனில் குழைத்து ஒரு நாளில் 3,4 தடவை
சாப்பிடவும். வாய்ப்புண் வயிற்றுப் புண், மலத்துவாரப்புண்
எல்லாவற்றையும் ஆற்றும். ரத்தப்போக்கை உடனே நிறுத்தும்.
இந்தச் சூர்ணத்தை ரத்தக் கசிவை நிறுத்த மேலுக்கும் உபயோகிக்கலாம்.
குடஜத்வகாதி லேஹ்யம் ஒரு ஸ்பூன் காலை, மாலை வெறும் வயிற்றில்
நக்கிச் சாப்பிடவும்.

நன்றி இணையம்