செக்ஸ் வாழ்வும்,கிரகங்களின் பங்கும் - (1)

மணக்கால் அய்யம்பேட்டை | 10:57 PM | Best Blogger Tips



: கிரகங்கள் படுத்தும் பாடு-( 67 )
ஸ்ரீபத்ரகாளியம்மன் துணை!
இந்த லொளகீக உலகில் வன்முறைகளும்,யுத்தங்களும் இரண்டே காரணங்களினால்தான் இருக்கும்.இதில் ஒன்று 
அதிகாரம் செய்யும் ஆசை இதனுள் பொன்,பொருள் மற்றும் சொத்து சேர்த்தல் அடங்கும்.
மற்றொன்று காமத்தால் வரும் ஆசை.(பெண்ணாசை)
"வேதம் எல்லாம் காதலை மறுப்பதில்லையே-அவை வேதம் செய்யும் முனிவரையும் விடுவதில்லையே"
சொல்லி தோன்றுமோ மன்மதக்கலை அள்ளிப்பருக வேண்டும்.எனவே ஒருவருக்கு காம எண்ணத்தை தூண்டி வேடிக்கை பார்ப்பதில் மங்களகாரகன் செவ்வாய் பகவானுக்கும்,களஸ்திரகாரகன் சுக்கிரபகவானுக்கும் அதிக பங்கு உண்டு.
இந்த சுக்கிரனும்,செவ்வாய்யும் முப்பது பாகைக்குள் ஒரு ராசி கூடியிருந்தாலும் அல்லது இருவரும் 180 பாகைக்குள் சம சப்தமாக பார்த்துக்கொண்டாலோ ஒரு ஆடவரோ /பெண்டீரோ காம எண்ணம் மிகுந்து பல மலரில் தேன் சுவைக்கும் வண்டாவர்.சுபர் பார்க்க பலன் மாறுபடலாம்.
சந்திரன் மற்றும் சுக்கிரன் சேர்க்கை ஏழாம் பாவகத்தில் இருப்பின் கிழவனுக்கு மாலையிட்டு மதனத்தால் பல பேரை கூடி தனது ஸ்தானம் குலுங்க நடந்து வருவாள்.யாருக்கோ பிள்ளையை பெற்று தொட்டில் இட்டு தாலாட்டுவாள் என புலிப்பாணி சித்தர் தனது புலிப்பாணி சோதிடத்தில் குறிப்பிட்டிருப்பார்.
இதேபோல சனியும்,செவ்வாயும் சேர்ந்திருந்து சுபர் பார்வையற்று மனதுக்காரகன் சந்திரனுடன் ராகு,கேது தொடர்போ அல்லது நீசம்,மறைவு பெற்றிருந்தாலும் காம எண்ணம் மிகுந்து காணப்படுவர்.
பொதுவாக மங்களக்காரகன் செவ்வாய்,களஸ்திரகாரகன் சுக்கிரனுடன் சனி அல்லது ராகு அல்லது சனி,ராகு சேர்க்கையோ அல்லது சமசப்தம பார்வையோ காம எண்ணத்தை உருவாக்கும்.
இதுபோன்ற பல காரணங்களை படித்திருந்தாலும் இவை எந்த அளவுக்கு உண்மையாக உள்ளன என்பதை என்னிடம் சாதக ஆய்வுக்கு வந்த சாதகத்தை பார்த்து அதை ஊர்ஜிதப்படுத்தியபோது எந்த அளவுக்கு நமது சித்தர்களின் தனது ஞானத்தால் அனைத்து ஆசையும் துறந்த அவர்களால் எவ்வாறு காம எண்ணத்தை உருவாக்கும் கிரகநிலைகளை கண்டறிய முடிந்தது என வியந்ததுண்டு.
இப்பொழுது காம மிகுதியால் தவறு செய்த ஒரு நபரின் சாதகத்தை இங்கே பகிர்கிறேன்.
மீன லக்கனம்
துலாம் ராசி
2-
ல் மாந்தி
4-
ல் குரு(வக்கிரம்)
5-
ல் கேது
10-
ல் செவ்,சனி
11-
ல் புதன்,சுக்,ராகு
12-
ல் சூரியன்
இந்த நபரின் சாதகத்தில் ஆய்வுக்குரிய விஷயங்கள்
1) மனதுக்காரகன் சந்திரன் எட்டாமிடத்தில் மறைவு.தேவையில்லாத மனகுழப்பங்கள்
2)களஸ்திரகாரகன் சுக்கிரனுடனும் ,கற்புஸ்தானம் எனப்படும் நான்காமிட அதிபதி புதனுடனும் ராகு,கேது தொடர்பு.
3)மங்களகாரகன் செவ்வாயுடன் சனி சேர்க்கை பெற்று அந்த ஸ்தான அதிபதி கற்பு ஸ்தானத்தில் வக்கிரம் பெற்று வக்கிர பார்வை.
4)நபரின் சாதகத்தின் காம கற்பனை உருவாக்கும் இடமான ஐந்தாம் இடமும் கெட்டிருக்கிறது.ஐந்தில் கேது ஐந்துக்கு ஐந்தாமிடமான ஒன்பதாமிட அதிபதி செவ்வாய் ஜென்ம விரோதியான சனியுடன் சேர்க்கை பெற்று தவறான எண்ணத்தை தூண்டும்.மேலும் புத்திரதோஷத்தையும் உருவாக்கியுள்ளது.புத்திரகாரகன் குருவும் வக்கிரம் பெற்று உள்ளது.எனவே புத்திரபாக்கியம் அமையாது.அப்படியே பிறந்தாலும் தனது கணவனுக்கு பிறந்த பிள்ளையாக அமையாது.
5)இவரது சாதகத்தில் திருமணத்திற்கு உகந்த இரண்டு,ஏழு மற்றும் எட்டாமிடமும்களஸ்திரகாரகன் சுக்கிரனும் பாதிக்கப்பட்டுள்ளது.எனவே மணவாழ்வு சிறக்காது.
6) குடும்பாதியான செவ்வாய் உடன் விரோதியான சனி சேர்க்கை,ஏழாம் அதிபதியான புதன் மற்றும் களஸ்திரகாரகன் சுக்கிரன் இவர்களோடு ராகு,கேது தொடர்பு.இவருக்கு திருமணவாழ்வு சிறக்காது.இவரது சாதகமே தனது துணைவரையும் பாதிக்கவைக்கும்.
7)நான்காமிடம் எனப்படும் கற்புஸ்தானத்தில் வக்கிரம் பெற்ற குரு,நான்காமாதி சந்திரன் எட்டில் மறைவு.தாய் உடனான உறவும் ,கற்புநிலையும் பாதிக்கப்படும்.
8) தந்தைகாரகன் சூரியன் பணிரெண்டில் மறைவு மற்றும் தந்தை ஸ்தானதிபதி செவ்வாய் அதன் எதிரி சனியோட சேர்க்கை.இவரது தந்தையும் இறந்துவிட்டார்.
மேற்கண்ட நபரின் வாழ்வில் விதி எவ்வாறு விளையாடி உள்ளது.இவருக்கு சாதக கிரக பலனால் தாய்,தந்தை மற்றும் வாழ்க்கை துணைவர் மேற்கண்ட இம்மூவராலும் எவ்வித உதவியின்றி செய்து இவளை விபச்சார நிலைக்கு தள்ளியது.
மேற்கண்ட அமைப்பால் அந்த நபரின் வாழ்வானது மாறிப்போனது.
எல்லாம் விதிப்பயன் .
"ஆட்டுபவர் ஆட்டுவித்தால்
ஆடாதாரோ கண்ணா
ஆசை என்னும் தொட்டிலிலே
ஆடாதார் யார் கண்ணா ?"
---------தொடரும்
(தங்களது சாதகங்களில் உள்ள பலனை தெளிவாக ஆராய்ந்து போன் வழியாக எங்கு இருந்தாலும் இருந்த இடத்திலிருந்தே பலன் பெறலாம்.கட்டணம் உண்டு.மேலும் விபரத்திற்கு எனது வாட்ஸ்அப் எண் 97 151 89 647 என்ற எண்ணிற்கு மெஸேஸ் செய்யவும்)
நன்றி

சோதிடர்ரவிச்சந்திரன்
M.SC,MA,BEd.
சோதிட ஆய்வாளர்,
வாழ்வியல் ஆலோசகர்,
முதுநிலை வேதியியல் ஆலோசகர்.
ஓம் சக்தி ஆன்லைன் அஸ்ட்ரோ சென்டர்
புதுக்கோட்டை மாவட்டம்.
செல் :97 151 89 647
செல்: 740 257 89 647.
Email;
masterastroravi@gmail.com
My website address.Click hear
**********************************
Online Astro consult,conduct my cell and whatsup or Email or messenger