தினை உப்புமா

மணக்கால் அய்யம்பேட்டை | PM 3:47 | Best Blogger Tips

தினை உப்புமா

நாலு பேருக்கான அளவு:

தினை நொய்: (Foxtail Millet, Varagu) - பம்பாய் ரவை மாதிரி கிடைக்கும் - கால் கிலோ - கப்பால் அளந்தால் இரண்டரை கப் வரவேண்டும்
பெரிய வெங்காயம் - பொடியாக நறுக்கியது 
(optional) காரட் - நடுவாந்திர அளவில் ஒன்று - தோல் சீவி க்யூப்களாக நறுக்கியது
(optional) பீன்ஸ் - எண்ணிக்கையில் 2 - பொடியாக நறுக்கிக் கொள்ளவும்

தாளிக்க:
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன் 
நீள வர மிளகாய் - 4 (பச்சை மிளகாய் பத்திய சமையலில் சேர்க்கக் கூடாது)
கடுகு - 1/2 டீஸ்பூன் 
உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன் 
கடலைப் பருப்பு - 1/2 டீஸ்பூன் 
ஒரு ஆர்க்கு கருவேப்பிலை /கொத்தமல்லி

உப்பு - 1 டேபிள்ஸ்பூன்
தண்ணீர் - நான்கு கப்

செய்முறை: 

அடிகனமான வாணலியில் வெறுமனே (எண்ணெய் விடாமல்) தினையை சிவக்க வறுத்துக்கொண்டு தனியே ஒரு தட்டில் கொட்டி ஆறவைத்துக் கொள்ளவும்.

ஒரு தனி பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க விடவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு-உளுத்தம் பருப்பு- வர மிளகாய் தாளித்து, கருவேப்பிலை சேர்த்து, வெங்காயத்தை வதக்கி கொண்டு கறிகாய்களை ஒவ்வொன்றாக சேர்த்து சிம்மில் வைத்து வதக்கவும்.
கொதித்த நீரை இதில் ஊற்றி உப்பு சேர்க்கவும்.

தளதளவென்று கொதிக்க ஆரம்பித்ததும், அடுப்பை சிம்மில் வைத்து (இல்லாவிட்டால் கையில் தெளிக்கும்), பின்பு வறுத்த தினையை சேர்த்து, கட்டி தட்டி கொள்ளாமல் கிளறி விட்டு, சரியாக ஐந்து நிமிஷம் மூடி வைக்கவும். உதிர் உதிராக வெந்திருக்கும். சாப்பிடும் முன் கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

Via FB ஆரோக்கியமான வாழ்வு