வேப்பம்பூ பொடி

மணக்கால் அய்யம்பேட்டை | PM 3:49 | Best Blogger Tips


என்னென்ன தேவை?

காய்ந்த வேப்பம்பூ அல்லது சுத்தம் செய்து நெய்யில் வறுத்த வேப்பம்பூ - அரை கப்,
உளுத்தம்பருப்பு - 1 கப்,
மிளகு - 20,
உப்பு, நெய் - தேவைக்கேற்ப.

எப்படிச் செய்வது?

உளுத்தம் பருப்பை வெறும் கடாயில் சிவக்க வறுக்க வேண்டும். பின் சிறிது நெய்விட்டு வேப்பம்பூவை வறுத்துக்கொள்ளவும். இத்துடன் மிளகு, உப்பு சேர்த்து மிக்ஸியில் நைசாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். இந்த பொடியுடன் சிறிது நெய் சேர்த்து ஒரு பிடி சாதத்துடன் கலந்து பரிமாறலாம்.

குறிப்பு:

வேப்பம்பூ காதி கடைகளிலும் மருந்து கடைகளிலும் கிடைக்கும்.
 
Via FB ஆரோக்கியமான வாழ்வு