எனர்ஜி கஞ்சி

மணக்கால் அய்யம்பேட்டை | PM 3:49 | Best Blogger Tips
என்னென்ன தேவை?

முளை கட்டிய கறுப்பு கொண்டைக் கடலை, வெள்ளை கோதுமை, ராகி - தலா 2 டேபிள்ஸ்பூன்,
பாதாம் பருப்பு - 4,
ஏலக்காய் தூள் - 1 சிட்டிகை,
சுத்தமான பனங்கற்கண்டு தூள் - 2 டீஸ்பூன்,
பால் - 1 கப்.

எப்படிச் செய்வது?

முளை கட்டிய கடலை, கோதுமை, ராகி (கேழ்வரகு), பாதாம் ஆகியவற்றை ஒரு கப் தண்ணீர் சேர்த்து நன்றாக மிக்சியில் அரைக்கவும். ஒரு பாத்திரத்தில் தண்ணீர், பால் கொதிக்கவிட்டு அரைத்த விழுதை சேர்த்து கஞ்சியாக காய்ச்சவும். இத்துடன் சுத்தமான பனங்கற்கண்டு தூள் சேர்க்கவும். அது நன்றாக கரைந்து கஞ்சி பதத்துக்கு வந்ததும் ஏலக்காய் தூள் சேர்த்து பரிமாறவும் அல்லது எனர்ஜி மில்க்காகவும் சாப்பிடலாம்.

குறிப்பு:

கஞ்சியாக சாப்பிடப் பிடிக்காதவர்கள் அரைத்த விழுதை வடித்து (ஒரு மெல்லிய துணியில்) பாலுடன் கற்கண்டு சேர்த்து எனர்ஜி மில்க்காக கொடுக்கலாம். இது, பள்ளிக்குப் போகும் குழந்தைகளுக்கு புரதச்சத்து தரும்.
Via FB ஆரோக்கியமான வாழ்வு