குண்டலினி

மணக்கால் அய்யம்பேட்டை | PM 3:09 | Best Blogger Tips

Photo: ஐயா உங்களுக்கு குண்டலினி சக்தி எழும்பி விட்டதா ? நீங்கள் எந்த நிலையில் இருக்கிறீர்கள் ? குண்டலினி எழும்பி விட்டது என்பதை உணர்ந்து கொள்வது எவ்வாறு ? அதற்கான அறிகுறிகள் என்ன ? எனக்கு குண்டலினி புருவ மத்தி வரை வந்து விட்டது. நான் அமிர்தத்தை ருஷித்து விட்டேன். நீங்கள் அமிர்தத்தை ருஷித்திருக்கிறீர்களா ? இதெல்லாம் என்ன என்று பார்க்கிறீர்களா ? இதெல்லாமே என்னிடம் கேட்கப்பட்ட கேள்விகள். இது கொஞ்சம்தான். உதாரணத்துக்காக சில கேள்விகளை சொல்லியிருக்கிறேன். நமது கடமை யோகத்தில் திளைத்திருப்பது மட்டுமே. அதை விடுத்து நம் நிலை என்ன ? நாம் எந்த ஆதாரத்தில் நிற்கிறோம் ? இப்படியெல்லாம் பல கேள்விகள் மனதில் தோன்றுமாயின் அது நம் முன்னேற்றத்திற்கு பெருந்தடையாக அமையும். மனம் முழுமையாக ஒரு நிலைப்பட்டு, ஆழ்ந்த நிலைக்குப் போகப் போக எல்லாம் தெரிய வரும். தெய்வீகக் காட்சிகள், வாசனைகள், ருஷி, ஸ்பர்சம், அனாஹத ஒலிகள், போன்ற பல அனுபவங்களைப் பெறுவீர்கள். ஆனால் அதிலே லயித்து விடாமல் மேலும் மேலும் தீவிரமாக சாதனையைத் தொடர வேண்டும். இது தான் இவ்வளவு தான் என்ற முடிவுக்கு வந்துவிடக் கூடாது.

குண்டலினி எழும்பியதற்கு அறிகுறியாக பல தியான நூல்கள் பலவிதமாகச் சொல்லியுள்ளன. அதில் எனக்குத் தெரிந்த சிலவற்றை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். மேலே குறிப்பிட்டுள்ள அனுபவங்கள் எல்லாமே குண்டலினி எழும்பியதைக் குறிப்பவையே. மூலாதாரத்தில் துடிப்பு இருக்கும் போது, மயிர் கூச்செறியும் போது, உட்டியாணா, ஜலந்தரம், மூலபந்தம் போன்றவை தானே வருகையில் குண்டலினி எழுந்து விட்டது என்று உணருங்கள். எந்த முயற்சியும் இன்றி சுவாசம் தானே நின்றாலோ, எந்த சிரமமும் இன்றி கேவல கும்பகம் தானே வந்தாலோ குண்டலினி சக்தி செயல்படுகிறது என்று உணருங்கள். மனதில் உலக எண்ணங்கள் எப்போது இல்லாமல் போகிறதோ, எப்போது நீங்கள் தானாகவே ஓம் என்ற மந்திரத்தை ஜெபிக்கிறீர்களோ, எப்போது பேரானந்தத்தை அனுபவிக்கிறீர்களோ அப்போது குண்டலினி சக்தியானது விழித்து விட்டது என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

உங்கள் தியானத்தின் போது இரு புருவங்களுக்கும் இடையில் உள்ள திரிபுடியில் கண்கள் நிலை பெற்று, சாம்பவி முத்திரை செயல்படும் போது குண்டலினி செயல்படுவதை உணருங்கள். உங்கள் சரீரத்தில் பல பாகங்களில் மின் அதிர்வுகள் ஏற்படுகையில், பிராண அலைகள் உள்ளுக்குள்ளே அதிகரிப்பதை உணர்கையில் குண்டலினி கிளம்பி விட்டதை உணருங்கள். தியானத்தின் போது உடலே இல்லாதது போன்ற உணர்வு ஏற்படும் போது, உங்கள் கண் இமைகளைத் திறக்க முயற்சித்து முடியாத போது, நரம்புகள் வழியாக மின்சார அலைகள் மேலும் கீழும் பாய்வதை உணரும் போதும் குண்டலினி மேலேழும்பி விட்டதை உணருங்கள்.

நீங்கள் தியானம் செய்கையில் உத்வேகமும், உள்ளுணர்வும் பெறுகையில், இயற்கையின் இரகசியங்கள் ஒவ்வொன்றாக உங்களுக்குத் தானாகவே புலப்படுகையில், உங்கள் ஐயங்கள் எல்லாம் நீங்கித் தெளிவடைகையில், வேத இரகசியங்கள் எல்லாம் ஒவ்வொன்றாகத் தெளிவாகப் புரிய வருகையில் குண்டலினி செயல்படுவதை உணருங்கள். உங்கள் உடல் காற்றை விட லேசாகத் தோன்றும் போது, குழப்பமான சூழலிலும் மனம் சமநிலையில் நிற்கும் போதும், அபரிதமான சக்தி உடலில் பெருகியிருப்பதை உணரும் போதும் குண்டலினி விழித்து விட்டது என்பதை அறிந்து கொள்ளுங்கள். பல்வேறு ஆசனங்கள், மற்றும் யோக நிலைகளை நீங்கள் எந்தவித சோர்வும் சிரமும் இன்றி செய்யும் போதும், உங்கள் அறிவின் சக்தி பெருகி இருப்பதை உணரும் போதும், உயர்ந்த கவிதைகளை உங்களால் இயற்ற முடிகின்ற போதும் குண்டலினி விழித்து விட்டதை உணர்ந்து கொள்ளுங்கள்.

ஒவ்வொரு ஆதாரமாகக் கடந்து, ஒவ்வொரு விதமான அனுபவங்களையும் பெற்று புருவ மத்தியில் ஆக்ஞாவில் நுழையும் போது பிரம்மானந்தத்தை அனுபவிப்பீர்கள். உங்களுக்கும் ப்ரம்மத்திற்கும் இடையே உள்ள வேற்பாட்டைப் பற்றிய லேசான அனுபவமே எஞ்சி நிற்கும். அதையும் கடந்து சகஸ்ராரத்தை அடைந்து விட்டால் யோகி நிர்விகல்ப ஸமாதியை அடைந்து விடுவார். இரண்டற்ற நிலை ஏற்படும். அனைத்து பேதங்களும் சம்ஸ்காரங்களும் மறையும். பரிசுத்த நிலை உண்டாகும். கர்ம வினைகள் அழியும். இதுவே மிகமிக உயர்வான, மேலான அஸம்ப்ரக்ஞாத ஸமாதியாகும். குண்டலினி சிவனுடன் ஐக்கியமாகிவிடுகிறது.

அதன் பிறகு யோகி விரும்பினால் தொண்டை மத்தியில் உள்ள சக்கரத்திற்கு இறங்கி வந்து சீடர்ர்களுக்கு அறிவுரைகள் வழங்கி, லோக ஷேமத்தில் ஈடுபடலாம். இந்தப் பூரண யோகியானவர் எட்டு வகை சித்திகளையும் பெற்றவராவார். மேலும் இதனால் யோகியானவர் 26 வகையான சக்திகளைப் பெறுவார் என்று சொல்லப்பட்டுள்ளது.
1. பசிதாகத்தில் இருந்து விடுதலை.
2. சீத உஷ்ணத்தில் இருந்து விடுதலை.
3. ராக துவேஷத்திலிருந்து விடுதலை.
4. தூரதர்ஷன், தூரதிருஷ்டி.
5. தூர சிரவணம், தொலைவில் உள்ளதைக் கேட்டல், தூர சுருதி, தூரப்ரவசனம்.
6. மனோ ஜயம், மன அடக்கம்.
7. காமரூபம், யோகி தான் விரும்பிய வடிவத்தை எடுக்க முடியும்.
8. பரகாயப் பிரவேசம். அவர் பிறரது உடலில் புக முடியும். இறந்தவனை உயிர்ப்பிக்க முடியும்.
9. தேவர்களைத் தரிசித்து அவர்களோடு விளையாடி மகிழ முடியும்.
10. விரும்பும் போது மரணமடைய முடியும்.
11. விரும்புவதைப் பெற முடியும்.
12. இறந்த, நிகழ், எதிர் கால அறிவு.(த்ரிகால ஞானம்)
13. இரட்டை உணர்வுகளைக் கடத்தல்.
14. வாக்கு சித்தி.
15. ரஸவாதம்.
16. ஒரே பிறவியில் தன் எல்லா கர்மங்களையும் போக்க, தான் விரும்பும் பல வடிவங்களை எடுக்க முடியும்.
17. தவளை போலத் தத்திச் செல்ல முடியும்.
18. நோய்களை குணப்படுத்துதல்.
19. முந்தைய பிறவியைப் பற்றிய அறிவு.
20. நட்சத்திர மண்டலம், கிரகங்கள் பற்றிய ஞானம்.
21. சித்தர்களை தரிசிக்கும் ஆற்றல்.
22. இயற்கையை வெல்லுதல்.
23. தாம் விரும்பும் இடத்துக்கு நொடியில் செல்லுதல்.
24. அனைத்தையும் பகுத்தறியும் திறன்.
25. வாயு சித்தி.
26. புதையல்களை அறியும் ஆற்றல்.

குண்டலினி கிளம்பி ஐக்கியம் நிகழ்ந்த பிறகு இது போலப் பல அற்புத சக்திகள் யோகிக்கு கை கூடுகின்றன என்று சொல்லப்பட்டுள்ளது.
ஐயா உங்களுக்கு குண்டலினி சக்தி எழும்பி விட்டதா ? நீங்கள் எந்த நிலையில் இருக்கிறீர்கள் ? குண்டலினி எழும்பி விட்டது என்பதை உணர்ந்து கொள்வது எவ்வாறு ? அதற்கான அறிகுறிகள் என்ன ? எனக்கு குண்டலினி புருவ மத்தி வரை வந்து விட்டது. நான் அமிர்தத்தை ருஷித்து விட்டேன். நீங்கள் அமிர்தத்தை ருஷித்திருக்கிறீர்களா ? இதெல்லாம் என்ன என்று பார்க்கிறீர்களா ? இதெல்லாமே என்னிடம் கேட்கப்பட்ட கேள்விகள். இது கொஞ்சம்தான். உதாரணத்துக்காக சில கேள்விகளை சொல்லியிருக்கிறேன். நமது கடமை யோகத்தில் திளைத்திருப்பது மட்டுமே. அதை விடுத்து நம் நிலை என்ன ? நாம் எந்த ஆதாரத்தில் நிற்கிறோம் ? இப்படியெல்லாம் பல கேள்விகள் மனதில் தோன்றுமாயின் அது நம் முன்னேற்றத்திற்கு பெருந்தடையாக அமையும். மனம் முழுமையாக ஒரு நிலைப்பட்டு, ஆழ்ந்த நிலைக்குப் போகப் போக எல்லாம் தெரிய வரும். தெய்வீகக் காட்சிகள், வாசனைகள், ருஷி, ஸ்பர்சம், அனாஹத ஒலிகள், போன்ற பல அனுபவங்களைப் பெறுவீர்கள். ஆனால் அதிலே லயித்து விடாமல் மேலும் மேலும் தீவிரமாக சாதனையைத் தொடர வேண்டும். இது தான் இவ்வளவு தான் என்ற முடிவுக்கு வந்துவிடக் கூடாது.

குண்டலினி எழும்பியதற்கு அறிகுறியாக பல தியான நூல்கள் பலவிதமாகச் சொல்லியுள்ளன. அதில் எனக்குத் தெரிந்த சிலவற்றை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். மேலே குறிப்பிட்டுள்ள அனுபவங்கள் எல்லாமே குண்டலினி எழும்பியதைக் குறிப்பவையே. மூலாதாரத்தில் துடிப்பு இருக்கும் போது, மயிர் கூச்செறியும் போது, உட்டியாணா, ஜலந்தரம், மூலபந்தம் போன்றவை தானே வருகையில் குண்டலினி எழுந்து விட்டது என்று உணருங்கள். எந்த முயற்சியும் இன்றி சுவாசம் தானே நின்றாலோ, எந்த சிரமமும் இன்றி கேவல கும்பகம் தானே வந்தாலோ குண்டலினி சக்தி செயல்படுகிறது என்று உணருங்கள். மனதில் உலக எண்ணங்கள் எப்போது இல்லாமல் போகிறதோ, எப்போது நீங்கள் தானாகவே ஓம் என்ற மந்திரத்தை ஜெபிக்கிறீர்களோ, எப்போது பேரானந்தத்தை அனுபவிக்கிறீர்களோ அப்போது குண்டலினி சக்தியானது விழித்து விட்டது என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

உங்கள் தியானத்தின் போது இரு புருவங்களுக்கும் இடையில் உள்ள திரிபுடியில் கண்கள் நிலை பெற்று, சாம்பவி முத்திரை செயல்படும் போது குண்டலினி செயல்படுவதை உணருங்கள். உங்கள் சரீரத்தில் பல பாகங்களில் மின் அதிர்வுகள் ஏற்படுகையில், பிராண அலைகள் உள்ளுக்குள்ளே அதிகரிப்பதை உணர்கையில் குண்டலினி கிளம்பி விட்டதை உணருங்கள். தியானத்தின் போது உடலே இல்லாதது போன்ற உணர்வு ஏற்படும் போது, உங்கள் கண் இமைகளைத் திறக்க முயற்சித்து முடியாத போது, நரம்புகள் வழியாக மின்சார அலைகள் மேலும் கீழும் பாய்வதை உணரும் போதும் குண்டலினி மேலேழும்பி விட்டதை உணருங்கள்.

நீங்கள் தியானம் செய்கையில் உத்வேகமும், உள்ளுணர்வும் பெறுகையில், இயற்கையின் இரகசியங்கள் ஒவ்வொன்றாக உங்களுக்குத் தானாகவே புலப்படுகையில், உங்கள் ஐயங்கள் எல்லாம் நீங்கித் தெளிவடைகையில், வேத இரகசியங்கள் எல்லாம் ஒவ்வொன்றாகத் தெளிவாகப் புரிய வருகையில் குண்டலினி செயல்படுவதை உணருங்கள். உங்கள் உடல் காற்றை விட லேசாகத் தோன்றும் போது, குழப்பமான சூழலிலும் மனம் சமநிலையில் நிற்கும் போதும், அபரிதமான சக்தி உடலில் பெருகியிருப்பதை உணரும் போதும் குண்டலினி விழித்து விட்டது என்பதை அறிந்து கொள்ளுங்கள். பல்வேறு ஆசனங்கள், மற்றும் யோக நிலைகளை நீங்கள் எந்தவித சோர்வும் சிரமும் இன்றி செய்யும் போதும், உங்கள் அறிவின் சக்தி பெருகி இருப்பதை உணரும் போதும், உயர்ந்த கவிதைகளை உங்களால் இயற்ற முடிகின்ற போதும் குண்டலினி விழித்து விட்டதை உணர்ந்து கொள்ளுங்கள்.

ஒவ்வொரு ஆதாரமாகக் கடந்து, ஒவ்வொரு விதமான அனுபவங்களையும் பெற்று புருவ மத்தியில் ஆக்ஞாவில் நுழையும் போது பிரம்மானந்தத்தை அனுபவிப்பீர்கள். உங்களுக்கும் ப்ரம்மத்திற்கும் இடையே உள்ள வேற்பாட்டைப் பற்றிய லேசான அனுபவமே எஞ்சி நிற்கும். அதையும் கடந்து சகஸ்ராரத்தை அடைந்து விட்டால் யோகி நிர்விகல்ப ஸமாதியை அடைந்து விடுவார். இரண்டற்ற நிலை ஏற்படும். அனைத்து பேதங்களும் சம்ஸ்காரங்களும் மறையும். பரிசுத்த நிலை உண்டாகும். கர்ம வினைகள் அழியும். இதுவே மிகமிக உயர்வான, மேலான அஸம்ப்ரக்ஞாத ஸமாதியாகும். குண்டலினி சிவனுடன் ஐக்கியமாகிவிடுகிறது.

அதன் பிறகு யோகி விரும்பினால் தொண்டை மத்தியில் உள்ள சக்கரத்திற்கு இறங்கி வந்து சீடர்ர்களுக்கு அறிவுரைகள் வழங்கி, லோக ஷேமத்தில் ஈடுபடலாம். இந்தப் பூரண யோகியானவர் எட்டு வகை சித்திகளையும் பெற்றவராவார். மேலும் இதனால் யோகியானவர் 26 வகையான சக்திகளைப் பெறுவார் என்று சொல்லப்பட்டுள்ளது.
1. பசிதாகத்தில் இருந்து விடுதலை.
2. சீத உஷ்ணத்தில் இருந்து விடுதலை.
3. ராக துவேஷத்திலிருந்து விடுதலை.
4. தூரதர்ஷன், தூரதிருஷ்டி.
5. தூர சிரவணம், தொலைவில் உள்ளதைக் கேட்டல், தூர சுருதி, தூரப்ரவசனம்.
6. மனோ ஜயம், மன அடக்கம்.
7. காமரூபம், யோகி தான் விரும்பிய வடிவத்தை எடுக்க முடியும்.
8. பரகாயப் பிரவேசம். அவர் பிறரது உடலில் புக முடியும். இறந்தவனை உயிர்ப்பிக்க முடியும்.
9. தேவர்களைத் தரிசித்து அவர்களோடு விளையாடி மகிழ முடியும்.
10. விரும்பும் போது மரணமடைய முடியும்.
11. விரும்புவதைப் பெற முடியும்.
12. இறந்த, நிகழ், எதிர் கால அறிவு.(த்ரிகால ஞானம்)
13. இரட்டை உணர்வுகளைக் கடத்தல்.
14. வாக்கு சித்தி.
15. ரஸவாதம்.
16. ஒரே பிறவியில் தன் எல்லா கர்மங்களையும் போக்க, தான் விரும்பும் பல வடிவங்களை எடுக்க முடியும்.
17. தவளை போலத் தத்திச் செல்ல முடியும்.
18. நோய்களை குணப்படுத்துதல்.
19. முந்தைய பிறவியைப் பற்றிய அறிவு.
20. நட்சத்திர மண்டலம், கிரகங்கள் பற்றிய ஞானம்.
21. சித்தர்களை தரிசிக்கும் ஆற்றல்.
22. இயற்கையை வெல்லுதல்.
23. தாம் விரும்பும் இடத்துக்கு நொடியில் செல்லுதல்.
24. அனைத்தையும் பகுத்தறியும் திறன்.
25. வாயு சித்தி.
26. புதையல்களை அறியும் ஆற்றல்.

குண்டலினி கிளம்பி ஐக்கியம் நிகழ்ந்த பிறகு இது போலப் பல அற்புத சக்திகள் யோகிக்கு கை கூடுகின்றன என்று சொல்லப்பட்டுள்ளது.
Via FB மௌனத்தின் அலைகள்.இராம் மனோகர்.