
1 . நந்தீசர் - இல்லத்தரசியர் 8, ஆண்வாரிசு 16, பெண்வாரிசு 1.
2 . மச்சமுனிவர் - இல்லத்தரசியர் 10, ஆண்வாரிசு 100.
3. சட்டமுனிவர் - இல்லத்தரசியர் 10, ஆண்வாரிசு 100.
4. அகப்பேய் சித்தர் - இல்லத்தரசியர் 10, ஆண்வாரிசு 120.
5. பாம்பாட்டி சித்தர் - இல்லத்தரசியர் 16, ஆண்வாரிசு
144.
6. இடைக்காடார் - இல்லத்தரசியர் 11, ஆண்வாரிசு 96.
7. அழுகண்ணிச் சித்தர் - இல்லத்தரசியர் 12, ஆண்வாரிசு 96.
8. குதம்பைச் சித்தர் - இல்லத்தரசியர் 16, ஆண்வாரிசு 160.
9. தன்வந்த்ரி முனிவர் - இல்லத்தரசியர் 16, ஆண்வாரிசு 160.
10. வான்மீக முனிவர் - இல்லத்தரசியர் 5, ஆண்வாரிசு 100.
11. இராம தேவர் - இல்லத்தரசியர் 10, ஆண்வாரிசு 200.
12. கொங்கண முனிவர் - இல்லத்தரசியர் 6, ஆண்வாரிசு 60.
13. கருவூர்சித்தர் - இல்லத்தரசியர் 12, ஆண்வாரிசு 120.
14. சுந்தரானந்தர் - இல்லத்தரசியர் 7, ஆண்வாரிசு 84.
15. திருமூலர் - இல்லத்தரசியர் 9, ஆண்வாரிசு 93.
16. அகத்தியர் - இல்லத்தரசியர் 10, ஆண்வாரிசு 160.
17. போக முனிவர் - கணக்கற்ற மனைவிகள், கணக்கற்ற பிள்ளைகள்.
18. கோரக்கர் - இல்லத்தரசியர் 5, ஆண்வாரிசு 60.
இந்தத்தகவல் இல்லறத்தை சித்தர்கள் மறுக்கிறார்கள் என்று சொல்பவர்களுக்காக மட்டுமே தரப்பட்டது.
இல்லறமல்லது நல்லறமன்று - ஔவை.
அறம் எனப்பட்டதே இல்வாழ்க்கை - திருவள்ளுவர்.
நமது புராணங்கள் அனைத்தும் தெய்வங்களும், வானவர்களும் குடும்பம், பிள்ளைகளோடு இருப்பதாகவே சொல்கிறது. சிவனோ உமையவளை தன்னில் ஒரு பாதியாகக் கொண்டார், மகாவிஷ்ணுவோ இலக்குமியை இதயத்தில் வைத்துக் கொண்டாடினார். பிரம்ம தேவனோ சரஸ்வதியை தன் நாவில் வைத்துக் கொண்டதாகச் சொல்லப்படுகிறது. அதாவது மனைவி பேச்சைத் தட்டாதவர்.
இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். இதிலிருந்து ஒரு விஷயத்தை நாம் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம். அதாவது இல்லறம் இறைவனை அடையத் தடையாக நின்றதில்லை என்பதே. சப்தரிஷிகளும் இல்லறம் கண்டவர்களே. சுகப்பிரம்ம ரிஷிக்கு உபதேசம் அருளிய ஜனகர்(சீதையின் தந்தை) இல்லற வாசியே. அவரை மிகச் சிறந்த தவசீலராகச் சொல்வார்கள்.
நமது சுந்தர மூர்த்தி நாயனாருக்கு இரு மனைவிகள். இப்படி நாயன்மார்கள் பல பேரைச் சொல்லலாம். எனவே இல்லறத்தை நல்லறமாகக் கொண்டு வாழ்ந்தாலும் இறைநிலை அடையலாம் என்பதே உண்மை.
Via FB மௌனத்தின் அலைகள்.இராம் மனோகர்.