காளான் இட்லி

மணக்கால் அய்யம்பேட்டை | 12:47 PM | Best Blogger Tips
காளான் இட்லி

தேவைப்படும் பொருட்கள்:

இட்லி மாவு - 4 கப், 
காளான் - 1 பாக்கெட், 
வெங்காயம் - 2, 
தக்காளி - 4, 
இஞ்சி, பூண்டு விழுது - 2 ஸ்பூன், 
தேங்காய் விழுது - 2 ஸ்பூன், 
மிளகாய்த் தூள் - 2 ஸ்பூன், 
கரம் மசாலா - 1 ஸ்பூன், 
எண்ணெய் - 2 ஸ்பூன், 
உப்பு, கறிவேப்பிலை சிறிதளவு.

செய்முறை: 

* வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

* காளான்களைச் சுத்தம் செய்து நறுக்கிக் கொள்ளவும். 

* வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். 

* சிவக்க வதங்கியதும், பொடியாக நறுக்கிய தக்காளி, உப்பு, இஞ்சி, பூண்டு விழுது, தேங்காய்விழுது சேர்த்து நன்கு வதக்கவும். 

* பின், காளான்களைச் சேர்த்து நன்கு கிளறி கடைசியில் கரம் மசாலா சேர்த்துக் கிளறி, கறிவேப்பிலை சேர்த்து இறக்கவும். இட்லி தட்டுகளில் அரை கரண்டி மாவு ஊற்றி இரண்டு நிமிடம் மூடி வைத்து மீண்டும் திறந்து அதன் மேல் காளான் கலவையை பரவலாக வைத்து மேலும் அரை கரண்டி மாவை அதன் மேல் ஊற்றி மூடவும். 

* பின் வேக விட்டு, எடுத்து சூடாக பரிமாற அப்படியே சாப்பிடலாம் அல்லது சாம்பார், சட்னி, இட்லி பொடியுடன் சேர்த்தும் சாப்பிடலாம்.

Via FB ஆரோக்கியமான வாழ்வு