வயது, பாலின வித்தியாசமின்றி புகைப்பிடிக்கும் பழக்கம் ஆண்டுதோறும் அதிகரிக்கிறது.
இதனால் எத்தனையோ உயிர் பறி போனாலும், அதில் ஈடுபடுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கிறதே தவிர குறைந்தபாடில்லை. இதுபற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த உலகம் முழுவதும் ஆண்டுதோறும் மே, 31 ஆம் தேதி சர்வதேச புகையிலை எதிர்ப்பு தினம் ஆக(World No Tobacco Day) அனுசரிக்கப்படுகிறது.
கடந்த 1987 இ ல் உலக சுகாதார நிறுவனம் ( WHO) மே - 31 ஆம் நாளை உலக புகை எதிர்ப்பு தினமாக அறிவித்தது.
ஆண்டுதோறும் சுமார் 55 லட்சம் பேர் புகைப் பழக்கத்தால் இறந்து வருகிறார்கள். இவர்களுள் 10 லட்சம் பேர் இந்தியர்கள். 15 வயதிற்கு மேற்பட்ட ஆண்களில் 57% பேரும், பெண்களில் 10.8% பேரும் புகையிலையை ஏதோ ஒரு வடிவில் உபயோகிக்கின்றனர்.
புகையிலையினால் ஏற்படும் வாய்புற்று நோய் லட்சத்திற்கு இந்தியாவில் 10 பேரை பாதிக்கிறது.
2020 - ம் ஆண்டில் இந்தியாவில் 13% மரணங்களுக்கு புகையிலை பழக்கம் காரணமாக அமையும்.
எய்ட்ஸ் நோய் (எச்.ஐ.வி.), காசநோய், வாகன விபத்துகள், தற்கொலைகள், கொலைகள் போன்றவற்றால் ஏற்படும் மரணத்தைவிட புகையிலையினால் ஏற்படுவது அதிகமாக இருக்கிறது.
புகைபிடிப்பது மூலம் வாய், நூரையீரல், சிறுநீரகம், மார்பகம் ஆகியவற்றில் புற்றுநோய், ஆஸ்துமா, காசநோய், இதயநோய், உயர் ரத்த அழுத்தம், செவிட்டுத் தன்மை, மலட்டுதன்மை என பல நோய்கள் வருகின்றன.
தொடர் புகைப் பழக்கத்தால் நுரையீரல் புற்றுநோய் விரைவிலேயே வருகிறது. புற்று நோய், இதய நோய் ஆகியவற்றை புகைப் பழக்கம் 30 சதவீதம் அதிகரிக்கிறது என்று கண்டறியப்பட்டிருக்கிறது
அனைத்து வித புகையிலை விளம்பரங்கள், ஸ்பான்ஷர்ஷிப்பை தடைசெய்தல்´ என்பது இந்தாண்டு இத்தினத்தின் மையக் கருத்து.
"புகையிலையால் ஏற்படும் ஆபத்தையும், அவற்றிலிருந்து விடுபடும் வழிகளையும் எடுத்துரைப்பதே´ இத்தினத்தின் நோக்கம்.
புகையிலையால் கிடைக்கும் வருமானத்தை விட, புகையிலை பாதிப்பால் ஏற்படும் நோய்களை தீர்ப்பதற்கு, ஒவ்வொரு நாட்டின் அரசுக்கும் அதிகம் செலவாகிறது.
புகை பிடிப்பதை நிறுத்துவது என்பது ஒன்றும் உலக மகா கஷ்டமான காரியமல்ல. மனது வைத்தால் எல்லாம் முடியும். புகை பிடிக்க வேண்டும் என்று தோன்றும் போது நூலகம், கோவில் போகலாம்; தியானம் செய்யலாம்.
நன்றி தன்னம்பிக்கை