வயதுக்கு வராதவர்கள் மட்டும் !

மணக்கால் அய்யம்பேட்டை | 12:48 PM | Best Blogger Tips
வயதுக்கு வராதவர்கள் மட்டும்

"பீம் பீம் பீம்",  என்று "சோட்டா பீமின்" டைட்டில் பாடலை இன்று பாடாத குழந்தைகளே இல்லை என்று சொல்லலாம்.

இன்றைய குழந்தைகளுக்கு நம் பாரம்பரியத்தையும், நம் பண்பாட்டையும் நவீன கலவையோடு சொல்லித் தருகிறான் இந்த அசகாய சூரன்.

மேற்கத்திய கார்ட்டூன்களின் வசம் ஈர்க்கப்பட்டிருந்த நம் குழந்தைகளை, இந்திய கார்ட்டூன்களை நோக்கி திருப்ப வைத்த பெருமை  சோட்ட பீம் இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் குழுவினரை சேரும்.  சில வருடங்கள் முன்பு வரை டொரா, பெண்டன் என்று சொல்லிக்கொண்டிருந்த குழந்தைகள் இப்போது சோட்டா பீமை தவிர வேறு எதையும் சீண்டுவதில்லை.  புத்தகப்பை, தொப்பி,  உடைகள் என எல்லாவற்றிலும் சோட்டா பீம் இருந்தால் விற்று தீர்கின்றன. 

குடும்பத்தில் இருப்பவரை கூட குழந்தைகளுக்கு தெரியுமோ இல்லையோ, ராஜு, சுக்கி, ஜக்கு, காலியா, என்று இவர்களை தெரியாமல் இருக்காது.  சோட்டா பீம் கதையில் நவீனத்துவமும் இருக்கிறது, நம் புராண கதாபாத்திரங்களும் வருகிறது.  அசுரர்கள் வருகிறார்கள், இடை இடையே பால கணேஷ், ஹனுமான்  பால கிருஷ்ணன் ஆகியோர் வருகின்றன‌ர்,  குழந்தைகள் பெரியோர்கள் மேல் மரியாதையோடு பழகுகிறார்கள், ஒவ்வொரு கதையிலும் நல்லவர்கள் வெல்கிறார்கள், தீயவர்கள் தோற்கிறார்கள் அல்லது அழிகிறார்கள்.  மொத்தத்தில் குழந்தைகளை தனியாக தைரியமாக பார்க்க வைக்கக் கூடிய கார்ட்டூன் கதைகள்.   எனக்கு மிகவும் பிடித்த‌, "டாம் அன்ட் ஜெரி"  அளவிற்கு இன்னும் இதன் தரத்தை மெருகேற்றினால் எத்தனை அருமையாக இருக்கும் என்று நான் நினைப்பதுண்டு. 

சில வருடங்கள் முன்பு பெங்களூர் இஸ்கானில், மிக அற்புதமான குழந்தை கிருஷ்ணனின் கார்ட்டூன் படத்தை பார்க்க நேரிட்டது,  இப்படி கூட தத்ரூபமாக அனிமேஷன் செய்ய முடியுமா என்று ஆச்சரியமாக இருந்தது.  தமிழகத்தில் மிகச்சிறந்த அனிமேஷன் செய்யக்கூடிய வல்லுனர்கள் இருக்கின்றனர்.  அத்தகையோரில் நீங்கள் ஒருவராக இருந்தால், அல்லது அவ்வாறு செய்யக்கூடிய ஆற்றல் உங்களுக்கு இருந்தால், நம் இதிகாச  கதாப்பாத்திரங்களை குழந்தைகளுக்காக (மற்றும் குழந்தை உள்ளம் கொண்ட பெரிய‌வர்களுக்கும்) உருவாக்கும் பணியை செய்யுங்கள்.  அது நம் தர்மத்திற்கு நீங்கள் செய்யும் மிகச் சிறந்த சேவை. நம் இதிகாசங்களை அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்ல இதுவே சிறந்த வழி.  

மகாபாரதத்தின் ஒப்பற்ற அறிவியல் உண்மைகளை "மோஷன் கேப்சர் டெக்னாலஜி" போன்ற நவீன தொழில்நுட்பங்களை கையாண்டு தத்ரூபமாக கொண்டுவந்தால் எத்தனை அற்புதமாக இருக்கும் ?  தொழில் நுட்பம் இல்லாத காலத்திலேயே விட்டாலாசார்யா அவர்கள் எத்தனை அற்புதமாக எடுத்துள்ளார் ?  மகாபாரதத்தின் அறிவியல் உண்மைகளை,  அதன் அதிரவைக்கும் அஸ்திரங்களை, வேறு பல ஆயுதங்களை, நாம் விஞ்ஞான பார்வையில் ஆழ்ந்து ஆராய்ந்து, அதை சிறந்த தொழில்நுட்பத்தின் உதவியோடு வெளியிட்டால், "அவதார்" போன்று பல திரைப்படங்களை அது நிச்சயம் மிஞ்சும்.  உபநிடதம் மற்றும் பகவத் கீதையின் ஆழமான தத்துவ நெறிகளை இக்கால இளைஞர்களுக்கு எடுத்த செல்லும் வகையில் "மேட்ரிக்ஸ்" போன்ற கருத்தாழமிக்க திரைப்படங்களையும் நாம் வெளியிடலாம்.   இதனால் நம் கலாச்சார தொன்மை அடுத்த தலைமுறையை சென்று அடையும்,  நம் தேசத்தின் பாரம்பரியமும் பலருக்கு தெரிய வரும்.  இன்னும் எத்தனை நாளைக்கு தான் "பன்ச் டயலாக் பேசும் ஹீரோக்களையும், வெள்ளைத் தோல் காட்டும் ஹீரோயினையும், தலையை சொறிந்துக் கொண்டே பேசும் வில்லன்களையும் காண்பது ?

via Enlightened Master