பெண்களுக்கு ஏற்படும் பி.சி.ஓ.எஸ் பிரச்சனையை தடுக்கும் உணவுகள்!!!

மணக்கால் அய்யம்பேட்டை | 1:28 PM | Best Blogger Tips
சால்மன் 

இந்த வகையான ஆரோக்கியமான மீனில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் மற்றும் குறைந்த அளவு கிளைசீமிக் இன்டெக்ஸ் உள்ளது. இவை இதயத்திற்கு மட்டுமின்றி, பி.சி.ஓ.எஸ் உள்ள பெண்களின் உடலில் ஆண்ட்ரோஜன் ஹார்மோன் அளவை அதிகரித்து, பிரச்சனையை போக்குகிறது.


பார்லி

பார்லியில் குறைந்த அளவு கிளைசீமிக் இன்டெக்ஸ் மற்றும் கொழுப்புக்கள் உள்ளது. ஆகவே பெண்கள் இதை சாப்பிட்டால், இதில் உள்ள குறைந்த அளவு கிளைசீமிக் இன்டெக்ஸ், அதிகப்படியான இன்சுலின் சுரப்பை தடுத்து, பி.சி.ஓ.எஸ் பிரச்சனையிலிருந்து விடுவிக்கும்.பட்டை 

இந்த நறுமணமிக்க உணவுப் பொருள், இன்சுலின் அளவை குறைத்து, உடலில் தங்கியிருக்கும் அதிகப்படியான கொழுப்புக்களை கரைத்து, பி.சி.ஓ.எஸ் பிரச்சனையை தடுக்கும்.லெட்யூஸ் 

இந்த பச்சை நிற ஊட்டச்சத்துமிக்க காய்கறியில், இன்சுலின் எதிர்ப்பொருள் உள்ளது. பொதுவாக பி.சி.ஓ.எஸ் உள்ள பெண்கள் அதிகமான இன்சுலின் சுரப்பினால் பாதிக்கப்படுவார்கள். எனவே அவர்கள் இந்த காய்கறியை சாப்பிடுவது நல்லது.
பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளில் ஒன்று தான் பி.சி.ஓ.எஸ் எனப்படும் சினைப்பைக் கட்டிகள். இந்த பிரச்சனை பொதுவாக 25 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்குத் தான் ஏற்படும். ஆனால் தற்போது 20 வயதுள்ள பெண்களுக்கே, இந்த பிரச்சனை வருகிறது. இதற்கு பெரும் காரணம் ஹார்மோன் மாற்றங்களே. அதுமட்டுமல்லாமல், ஆரோக்கியமற்ற டயட், போதிய உடற்பயிற்சியின்மை, ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் கெட்ட பழக்கங்களாக புகைப்பிடித்தல் அல்லது மது அருந்துதல் போன்றவை ஹார்மோன்களில் மாற்றங்களை ஏற்படுத்தி, இனப்பெருக்க மண்டலத்தின் செயல்பாட்டில் இடையூறை விளைவிக்கின்றன.

இத்தகைய சினைப்பைக் கட்டிகள் பெண்களுக்கு வந்தால், அதனை உடனே தெரிந்து கொள்ள முடியாது. ஆனால் ஒருசில அறிகுறிகளை வைத்து உறுதி செய்து கொண்டு, மருத்துவரை அணுகலாம். அதில் சில அறிகுறிகளான முறையற்ற மாதவிடாய் சுழற்சி, உடல் எடை அதிகரித்தல், கருத்தரிப்பதில் பிரச்சனை போன்றவை. மேலும் சில பி.சி.ஓ.எஸ் அறிகுறிகளைப் பற்றி ஏற்கனவே தெளிவாக பார்த்திருக்கிறோம். ஆனால் அதனை குணப்படுத்துவதற்கான உணவுகளை பார்த்ததில்லை.

பி.சி.ஓ.எஸ் என்னும் சினைப்பைக் கட்டிகள் குணப்படுத்தக்கூடியவையே. அதற்கு ஹார்மோனின் அளவை சீராக வைப்பதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும். அதிலும் சரியான உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியமான சில உணவுகளை சாப்பிட வேண்டும். குறிப்பாக வைட்டமின் டி, ஒமேகா-3 ஃபோட்டி ஆசிட் மற்றும் குறைந்த அளவு கிளைசீமிக் இன்டெக்ஸ் உள்ள உணவுகளை சாப்பிட வேண்டும். இப்போது அத்தகைய உணவுகள் என்னவென்று பார்ப்போம்.

via ஆரோக்கியமான வாழ்வு