சென்செக்ஸ் என்றால் என்ன? அது எவ்வாறு கணக்கிடப்படுகிறது?

மணக்கால் அய்யம்பேட்டை | PM 12:07 | Best Blogger Tips



What Is Sensex How Is It Calculated

சென்செக்ஸ் என்ற வார்த்தை, நிதித்துறை வட்டாரங்களுக்கு அப்பாலும், மிகவும் புகழ்பெற்ற ஒரு சொல்லாடல் ஆகும். சென்செக்ஸ் என்றால் சென்சிடிவ் இன்டெக்ஸ், அதாவது, அடிக்கடி மாறக்கூடிய சுட்டெண் அல்லது குறியீட்டு எண் என்று அர்த்தம். இச்சொல் மும்பை பங்குச் சந்தை சென்சிடிவ் இன்டெக்ஸில் அடிக்கடி உபயொகிக்கப்படும் ஒரு சொல்லாக விளங்குகிறது. இந்தியாவின் மிகப் பழமையான இன்டெக்ஸான இது, மும்பை பங்குச் சந்தையின் மிகப் பெரியதான முப்பது பங்குகளின் போக்கைக் கண்காணிக்க உதவுகிறது.

இந்த 30 பங்குகளும், பல்வேறு பண்பளவுகளையும், குறியீட்டு முறைகளையும் பொறுத்து தேர்ந்தெடுக்கப்படுகிறன. பொதுவாக, இப்பங்குகள் அதிக மூலதன மதிப்பாக்கத்தைக் கொண்ட பங்குகளாகவே இருக்கும். தற்போது, பங்குச்சந்தையின் போக்கை கணிக்கக்கூடிய ஒரு சிறந்த அளவுகோலாக சென்செக்ஸ் விளங்குகிறது.

சென்செக்ஸ் எவ்வாறு கணக்கிடப்படுகிறது?

மும்பை பங்குச் சந்தையின் மிகப் பெரியதான முப்பது பங்குகளின் போக்கைப் பொறுத்தே சென்செக்ஸ் கணக்கிடப்படுகிறது. இவ்வாறு, கணக்கிடப்படுவதற்கு, "வரம்புகளற்ற மிதவை பங்கு மூலதன மதிப்பாக்கம்" என்ற பெயர் கொண்ட ஒரு வழிமுறை பின்பற்றப்படுகிறது. இம்முறை, உலகெங்கும் பரவலான வரவேற்பைப் பெற்ற ஒரு வழிமுறையாகும். ஒரு நிறுவனத்தில், நிறுவனரிடமோ அல்லது அரசிடமோ உள்ள பங்குகள் விற்பனைக்கு அனுப்பப்படமாட்டாது. இப்பங்குகள் தவிர்த்து, மற்ற சில பங்குகள் மட்டுமே விற்பனைக்குக் கிடைக்கும்.

சென்செக்ஸ் தற்போது உள்ளடக்கிய பங்குகளின் பட்டியல் பின்வருமாறு:

பஜாஜ் ஆட்டோ, பாரதி ஏர்டெல், பி.ஹெச்.எல், சிப்லா, கோல் இந்தியா, டி.எல்.எஃப், கெயில் இந்தியா, ஹெச்.டி.எஃப்.சி, ஹெச்.டி.எஃப்.சி வங்கி, ஹின்டால்கோ இண்ட்ஸ், ஹிந்துஸ்தான் யூனிலீவர், ஐசிஐசிஐ வங்கி, இன்ஃபோஸிஸ், ஐடிஸி, ஜிண்டால் ஸ்டீல், எல்&டி, மஹிந்திரா & மஹிந்திரா, மாருதி சுஸுகி, என்டிபிசி, ஓஎன்ஜிசி, ஆர்ஐஎல், எஸ்பிஐ, ஸ்டெர்லைட் இண்ட்ஸ், சன் ஃபார்மா, டாடா மோட்டார்ஸ், டாடா பவர், டாடா ஸ்டீல், டிசிஎஸ் மற்றும் விப்ரோ
மும்பை பங்குச் சந்தை மற்றும் தேசிய பங்குச் சந்தை ஆகியவற்றுக்கு அடுத்ததாக எம்சிஎக்ஸ்- எஸ்எக்ஸ் இந்தியாவின் மூன்றாவது பெரிய பங்குச் சந்தையாக விளங்குகிறது.

Thanks to Thatstamil