மதுரை மீனாக்க்ஷி அம்மன் கோவில் ஒரு சிறப்பு !!

மணக்கால் அய்யம்பேட்டை | 2:56 PM | Best Blogger Tips


மீனாக்ஷி அம்மன் கோயில்இந்தியாவில் மதுரை மாநகரில் அமைந்துள்ள வரலாற்று சிறுப்பு மிக்க புனித ஸ்தலமாகும்.இங்கு சிவ பெருமானை ”சுந்தரேஸ்வரர்” என்றும் அம்பாளை “மீனாட்சி” என்றும் அழைக்கப்படுகிறார்கள். இந்த கோயில் 2500 ஆண்டுகள் பழமை வாய்ந்த மதுரை நகரின் உயிர் நாடியாக விளங்குகின்றது. பண்டைய கட்டடக் கலையையும் சிற்பக் கலையையும் பறை சாற்றுகின்ற இக்கோவிலில் இரண்டு தங்க கோபுரம் உட்பட 14 கம்பீரமான கோபுரங்கள் உள்ளது. இது தமிழ் மக்களின் ஒரு அடையாளமாக உள்ளது, மற்றும் தற்போதைய அமைப்பு 1600 இல் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. என்றாலும், தமிழ் இலக்கியத்தில் பழங்காலத்தில் இருந்து குறிப்பிடப்பட்டுள்ளது. உயரமான கோவில் கோபுரம் உயர் 51,9 மீட்டர் (170 அடி) ஆகும்.
இந்து மதம் புராணத்தின் படி, இரண்டாவது பாண்டிய மன்னர் மலயத்துவ பாண்டியன் மற்றும் அவரது மனைவி காஞ்சனமாலை நடத்திய புத்திர காமேஷ்டி வேள்வியின் பயனாக யாகத் தீயிலிருந்து பார்வதி தோன்றியதாக கூறப்படுகிறது . மற்றொரு புராணத்தின் படி,முற்பிறவியில் காஞ்சனமாலைக்கு பார்வதி தேவியே மகளாக பிறப்பதற்கு வரம் அளிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. யாகத்தீயிலிருந்து பிறந்த பெண் குழந்தைக்கு மூன்று மார்பகங்கள் இருப்பதை கண்டு மன்னர் அதிர்ச்சியுற்றார். அப்போது அவர்க்கு ஓர் அசரிரீ கேட்டது.”மன்னனே கவலைப்பட வேண்டாம். அந்தப் பெண் தன் எதிர்காலக் கணவனை சந்திக்கும் போது அந்த மூன்றாவது மார்பு மறைந்துவிடும்“ என்று கூறியது. பின்னர் மன்னன் அந்த பெண் குழந்தைக்கு ’தடாதகை’ என்று பெயரிட்டு சந்தோசமாக வளர்த்தார்.
அந்தப்பெண் தான் ஒரு தெய்வபிறவி என்றில்லாமல் சாதாரண மானிடப் பெண் போலவே வளர்ந்தார்.மலயத்துவ மன்னனுக்கு ஆண் வாரிசு இல்லாததால் தடாதகை போர் பயிற்சி உட்பட 64 கலைகளையும் கற்று தேர்ந்தால். எட்டு திசைகளிலும் போர் புரிந்து மூவுலகையும் வென்று சிவனின் உறைவிடமான கைலாசத்தை நோக்கி முன்னேறினால்.அங்கு எளிதாக நந்தியை முறியடித்து போர் புரிய சிவனை நோக்கி சென்றால்.சிவனை கண்டவுடன் போர் புரிய முடியாமல் தலை குனிந்து நின்றால் .அந்த கணமே அவளுடைய மூன்றாவது மார்பும் மறைந்தது. அப்போது தான் தடாதகை சிவன் தான் தன்னை மணக்க வந்தவர் என்றும் தான் பார்வதியின் அம்சம் என்றும் உணர்ந்தாள்.பின்னர் சிவனும் தடாதகையும் மதுரைக்கு திரும்பினர். மலையத்துவ மன்னன் முதலில் பார்வதிக்கு முடிசூட்டு விழாவும் அடுத்தநாளில் திருமண ஏற்பாடும் செயதார் . அந்த திருமணம் பூமியில் நடக்கும் மிகப்பெரிய நிகழ்வாவதால் உலகமே மதுரையில் கூடியது. இந்த திருமணத்திற்காக பார்வதியின் சகோதரரான விஷ்ணு வைகுண்டத்திலிருந்து பிரயானப்பட்டார்.தெய்வீக விளையாட்டினால் ,இந்திரன் விஷ்ணுவின் பயணத்தில் தடை ஏற்ப்படுத்தி தாமதப்படுத்தினார்.இதற்கிடையில் மதுரையில் இருக்கும் திருப்பரங்குன்றம் பவளக்கனிவாய் பெருமாள் தலைமையில் திருமணம் இனிதே நடந்தேறியது. இதனை அடிப்படையாகக் கொண்டு நாயக்க மன்னர்கள் காலத்தில் மதுரையில் ஆண்டுதோறும் “சித்திரை திருவிழா” கொண்டாடப்பட்டது.

பின்னர் வந்த திருமலை நாயக்க மன்னர் “அழகர் திருவிழா”வையும் “மீனாக்க்ஷி திருக்கல்யானத்தையும்” இணைத்து இன்று வரை ”சித்திரை திருவிழா” வாக கொண்டாடப்படுகிறது.

நவீன வரலாறு.
அசல் கட்டமைப்பு வரலாறு சரியாக தெரியவில்லை, ஆனால் தமிழ் இலக்கியங்களின் வாயிலாக இக்கோயிலின் சில நூற்றாண்டுகளின் வரலாட்ற்றை அறிய முடிகிறது.ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த சைவ துறவி ’திருஞானசம்பந்தர்’ இக் கோயிலின் இறைவனை ’ஆலவாய் இறைவன்’ என்று விவரித்துள்ளார் . 1310 ஆம் ஆண்டில் மாலிக் கபூர் என்பவரின் கீழ் முஸ்லீம்களின் வூடுருவளால் பண்டைய கூறுகள் அழிக்கப்பட்டன.
அதன் பின் முதல் நாயக்க மன்னனான மதுரை விஸ்வநாத நாயக்கர் (கி.பி.1559-1600) இக் கோயிலை ’அரியநாத முதலியார்’ எனும் மந்திரியின் மேற்பார்வையில் புனரமைத்தார். அதன் பின் வந்த ‘திருமலை நாயக்க’ (1623-1659)மன்னர் இதில் பெரும் பங்காற்றினார். கோயிலுக்கு வுள்ளேயும் வெளியேயும் விரிவாக்கம் செய்தார். வசந்த உத்சவத்திற்கு ’வசந்த மண்டபம்’,'கிளிக்கூட்டு மண்டபம்’ மற்றும் ’தெப்பக்குளம்’ ஆகியவற்றை ’ராணி மங்கம்மாள்’ வுருவக்கினார். ‘மீனாக்ஷி நாயக்கர் மண்டபம்’ ராணி ‘மீனாக்ஷி’யால் உருவாக்கப்பட்டது.

https://fbcdn-sphotos-d-a.akamaihd.net/hphotos-ak-snc7/482377_371758806273816_783800630_n.jpg