ஒரு கணக்கின் உண்மையான உரிமையாளர் யார்? அந்தக் கணக்கின் நாமினி யார்? இந்த கணக்கிற்கு எங்கிருந்து பணம் வருகிறது? கணக்கு உரிமையாளரின் உண்மையான தொழில் என்ன? அவர் செய்யும் வங்கி நடவடிக்கைகளுக்கான உண்மையான காரணங்கள் என்ன போன்றவற்றை அறிய இந்த கேஒய்சி வழிகாட்டுகிறது. மேலும் வாடிக்கையாளர் மூலம் பிற்காலத்தில் வங்கிக்கு ஏதாவது பிரச்சனை வந்தாலும் அதை வங்கி திறமையாக கையாள இந்த கேஒய்சி உதவுகிறது.
இந்த கேஒய்சியின் முக்கிய நோக்கம் மணி லாண்டரியை ஒழிப்பதாகும். அதாவது சட்டத்திற்கு புறம்பான பணத்தை ஒழிப்பதாகும்.
வாடிக்கையாளரின் இரண்டு தகவல்களை இந்த கேஒய்சி வைத்திருக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி கூறுகிறது. ஒன்று வாடிக்கையாளரின் அடையாளம், மற்றொன்று வாடிக்கையாளரின் முகவரி. பொதுவாக வாடிக்கையாளரின் அடையாளத்தில் பெரிய மாற்றம் இருக்காது. ஆனால் வாடிக்கையாளரின் முகவரி மாற வாய்ப்பிருக்கிறது. எனவே வங்கிகள் அவ்வப்போது வாடிக்கையாளரின் முகவரியை சரி செய்து கொண்டே இருக்க வேண்டும். அதற்காக அவர்கள் வாடிக்கையாளரின் பான் கார்டு, ஓட்டுனர் உரிமம் மற்றும் பாஸ்போர்ட் போன்றவற்றில் ஏதாவது ஒன்றை சரி பார்க்க வேண்டும்.
வாடிக்கையாளரின் அடையாளம் மற்றும் முகவரியை பரிசோதிக்க சட்டத்தில் இடம் இருக்கிறதா?
ஆம் இருக்கிறது. ரிசர்வ் வங்கியின் 1949ம் ஆண்டு வங்கி ஒழுங்குமுறை சட்டம் பிரிவு 7ல் சொல்லப்பட்டிருக்கும் மணி லாண்டரிங்கை தடை செய்தல் என்ற சட்டம் ஒரு வாடிக்கையாளரின் அடையாளம் மற்றும் முகவரியை பரிசோதிக்க வழி செய்கிறது.
வங்கிகளில் செய்யப்படும் வைப்புத் தொகைகளுக்கும் கேஒய்சி பொருந்துமா?
வைப்புத் தொகைகளுக்கான வரையைறகளை மிகத் தெளிவாக ரிசர்வ் வங்கி வழங்கி இருக்கிறது. எனினினும் வைப்புத் தொகையில் முதலீடு செய்யும் வாடிக்கையாளரின் அடையாளம் மற்றும் முகவரி ஆகியவற்றை பரிசோதிப்பது என்பது சம்பந்தப்பட்ட வங்கியைப் பொருத்ததாகும். அவ்வாறு செய்வதம் மூலம் மணி லாண்டரிங்கைத் தடுக்க முடியும்.
Thanks to Thatstamil