டீமாட் கணக்கு என்றால் என்ன, அது எவ்வாறு செயல்படுகிறது?

மணக்கால் அய்யம்பேட்டை | 12:01 PM | Best Blogger Tips

Demat Account How It Works
சென்னை: வங்கிக் கணக்கில், எவ்வாறு உங்கள் வங்கி இருப்பு என்பது உங்கள் கையில் தொகையாக இல்லாமல், வங்கி கணக்கேட்டில் வரவாக, குறிக்க மட்டுமே படுகிறதோ, டீமாட் கணக்கும் அது போலவே செயல்படக்கூடிய ஒன்றாகவே உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், வங்கிக் கணக்கில் எவ்வாறு ஆவணங்கள் மற்றும் பற்று வரவு ஆகியன மின்னணு வடிவில் உள்ளதோ, அவ்வாறே டீமாட் கணக்கிலும் இருக்கும்.

எதனால் உங்களுக்கு டீமாட் கணக்கு அவசியமாகிறது?

எஸ்இபிஐ வழிமுறைகளின்படி, பங்குகளை பருப்பொருள் தன்மை நீக்கிய (டீமெட்டீரியலைஸ்ட்) நிலையிலேயே வாங்கவோ, விற்கவோ முடியும். அதனால், நீங்கள் பங்குச் சந்தை மூலமாக பங்குகளை வாங்கவோ, விற்கவோ விரும்பினால், உங்களுக்கு டீமாட் கணக்கு கட்டாயத் தேவையாகிறது.

இது எவ்வாறு செயல்படுகிறது?

நீங்கள் பங்குகள் வாங்கும்போது, தரகர் அப்பங்குகளை உங்கள் டீமாட் கணக்கில் வரவு வைப்பார். இது நீங்கள் கைக்கொண்டுள்ள முதலீட்டுப் பங்குகளின் விவர அறிக்கையிலும் பிரதிபலிக்கப்படுகிறது. நீங்கள் கணினிமூல (ஆன்லைன்) இணையத்தின் வழியாக பங்குகள் வாங்கினால், உங்கள் முதலீட்டுப் பங்குகளின் நிலவரத்தை, ஆன்லைனில் நேரடியாகவே பார்த்துக் கொள்ளலாம். பொதுவாக, தரகர் உங்கள் பங்குகளை வர்த்தகம் நடந்த நாளுக்கு இரண்டு நாட்களுக்குப் பின் உங்கள் கணக்கில் வரவு வைப்பார்.
நீங்கள் உங்கள் பங்குகளை விற்கும்போது, உங்கள் தரகரிடம், விற்கப்படும் பங்குகள் பற்றிய தகவல்கள் நிறைந்த ஒரு வழங்குமுறை குறிப்பை, தந்து வைக்க வேண்டும். இப்பங்குகள் உங்கள் கணக்கிலிருந்து எடுக்கப்பட்ட பின், உங்களுக்கு பங்குகள் விற்றதற்கான பணம் வழங்கப்படும். நீங்கள் இணையத்தின் வழியாக பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்தால், விற்கப்பட்ட பங்குகள் மற்றும் பணப்பட்டுவாடா செய்யப்பட்ட தகவல்களை உங்கள் டீமாட் கணக்கு தானாகவே பிரதிபலிக்கும்.
இந்தியாவில், தி நேஷனல் செக்யூரிடீஸ் டெப்போஸிட்டரீஸ் லிமிடெட் (என்எஸ்டிஎல்) மற்றும் தி சென்ட்ரல் டெப்போஸிட்டரி சர்வீசஸ் லிமிடெட் (ஸிடிஎஸ்எல்) என்ற இரண்டு சேமிப்புக் களஞ்சியங்கள் உள்ளன. இவ்விரு களஞ்சியங்கள் மூலமாகவே பல பங்குதாரர்கள் தங்கள் பங்குகளை நிலைநிறுத்துகின்றனர்.

டீமாட் கணக்கு திறப்பதினால் கிடைக்கும் நன்மைகள்:

பங்குகளை பொருள் வடிவில் வைத்திருக்க வேண்டிய தேவை இல்லாமை
புதுமையான குலுக்கல் முறை இல்லாமை
ஒரேயொரு பங்கைக் கூட வர்த்தகம் செய்யக்கூடிய வாய்ப்பு
முத்திரை வரி இல்லாமை
மாற்று ஒப்பாவணம் தேவையில்லாமை

தேவைப்பட்டால், நீங்கள் என்எஸ்டிஎல் மற்றும் ஸிடிஎஸ்எல் ஆகியவற்றின் வளைத்தளங்களுக்கு https://nsdl.co.in/
மற்றும் http://www.cdslindia.com/ முறையே சென்று பார்க்கலாம்.

Thanks to Thatstamil