கோடைக் கால குறிப்புகள் - 7

மணக்கால் அய்யம்பேட்டை | 2:53 PM | Best Blogger Tips

பாசிப் பயறு சாலட்டும் பட்டாணி சூப்பும்

1) பட்டாணி சூப்

தேவையான பொருட்கள்

பச்சைப் பட்டாணி - 150 கிராம்
உருளைக்கிழங்கு - 2
பெரிய வெங்காயம் - 1
இஞ்சி - சிறிதளவு
பூண்டு - 2 பல்
எலுமிச்சம்பழச் சாறு - 1 மேஜைக் கரண்டி
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
மிளகுத்தூள் - தேவையான அளவு
வெண்ணெய் - 1 மேஜைக் கரண்டி
உப்பு - தேவையான அளவு

செய்முறை

1. பூண்டு, இஞ்சி, வெங்காயம், உருளைக்கிழங்கு ஆகியவற்றை தோல் சீவி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

2. வெண்ணெயை உருக்கி, நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பூண்டு, உருளைக்கிழங்கு ஆகியவை சேர்த்து நன்கு வதக்கவும்.

3. அதனுடன் 100 கிராம் அளவு பட்டாணி, மல்லித்தழை சேர்த்து வதக்கவும்.

4. 300 மில்லி தண்ணீர் சேர்த்து, மிதமான தீயில் வேகவிடவும்.

5. பிறகு நீரை வடிகட்டி தனியே வைத்துவிட்டு, காய்களை நன்கு அரைக்கவும்.

6. அரைத்த விழுதை தனியே வைத்துள்ள தண்ணீருடன் கலக்கவும். பின்னர் மீண்டும் வடிகட்டவும்.

7. அதனுடன் மிளகுத்தூள், எலுமிச்சம்பழச் சாறு சேர்த்து அடுப்பில் வைத்து ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.

8. மீதி உள்ள 50 கிராம் பட்டாணியை தனியே உப்பு போட்டு வேகவைத்து கடைசியாக சூப்பில் மிதக்கவிட்டுப் பரிமாறவும்.

2) பாசிப்பயறு சாலட்

தேவையான பொருட்கள்

முழு பாசிப் பயறு - அரை கப்,
எலுமிச்சம் பழம் - 1,
கேரட் துருவல் - 1 கப்,
துருவிய தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்,
பொடியாக்கிய பச்சை மிளகாய் -தேவைக்கேற்ப
கொத்தமல்லித் தழை - சிறிது,
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - சிறிது,
கடுகு - தாளிக்க.

செய்முறை

பச்சைப் பயறைக் கழுவி, ஊற வைத்து, வடித்து, ஒரு துணியில் கட்டி முளை கட்ட வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு தாளித்து, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கித் தனியே எடுத்து வைக்கவும். முளை கட்டிய பயறு, தேங்காய் துருவல், கேரட் துருவல், உப்பு, கொத்தமல்லி, பச்சை மிளகாய், எலுமிச்சை சாறு எல்லாவற்றையும் அப்படியே பச்சையாகக் கலந்து, அதன் மேல் தாளித்து வைத்துள்ளதைக் கொட்டிக் கிளறி பரிமாறவும்.

இந்த சூப்பும் சாலட்டும் சத்து மட்டுமல்ல சுவையும் நிறைந்தது. வெயில் சூடு தணிய நிறைய காய்கறிகளைச் சேர்த்துக் கொள்வது நல்லது. முடிந்த வரையில் உணவில்காரத்தை குறைத்து சாப்பிடுவது நல்லது.
கோடைக் கால குறிப்புகள் - 7
------------------------------------------------