புத்தாண்டு

மணக்கால் அய்யம்பேட்டை | 3:09 PM | Best Blogger Tips
387 Tamil New Year Wishes Stock Vectors and Vector Art | Shutterstock
இன்றைய புத்தாண்டு எதிர்ப்பாளர்களின் பிரதான எதிர்ப்புக்களுள் முக்கியமானது, அறுபது தமிழ் வருடங்களுக்கு வடமொழிப் பெயர் இருப்பது!
Popcorn, laughter, good vibes – that's how we roll at #Mayajaal this Tamil  New Year! ♥️🎥 #HappyTamilNewYear #TamilNewYear
இவற்றின் பெயர்கள் முழுக்க முழுக்க வடமொழியே என்பதால், இவற்றைத் தமிழ் ஆண்டுகள் என்று சொல்லக்கூடாது என்று சிலர் கூறுவதுண்டு. ஆனால், இப்படிக் கூறுபவர்கள், தமிழ்நாடு தவிர்ந்த இந்தியாவின் ஏனைய பாகங்களிலோ, வேறு இந்து நாட்காட்டிகளிலோ, இந்த அறுபது ஆண்டுப் பெயர் வழக்கம் பயன்படுத்தப்படுவதே இல்லை என்பதை கவனிக்கத் தவறிவிடுகிறார்கள்.

கூத்தும் பண்ணிசையும் தமிழகத்தில் வளர்ந்த கலைகள். இன்றைக்கு வடமொழியாலும் ஏனைய தமிழிய மொழிகளாலும் அவை உள்வாங்கப்பட்டு, பரத நாட்டியமென்றும் கருநாடக சங்கீதமென்றும் முற்றாக உருமாறிவிட்டன. அதற்காக, அவை தமிழர் கலைகள் இல்லை என்று வாதாட முடியுமா?

நம்மில் பலரது பெயர், வடநாட்டுச் சாயலில் இருப்பதால் நாம் வடநாட்டார் ஆகிவிடுவோமா? ஆங்கிலம் பேசினால் நான் வெள்ளைக்காரனா? மேற்சொன்னோரது வாதமும் அப்படித்தான் இருக்கிறது. இனத்தைக் காப்பாற்றுவதாக எண்ணிக்கொண்டு, நம் இனம் மட்டுமே பயன்படுத்திவரும் ஒரு காலத்தொடரை ஏனையா எல்லோருக்கும் விட்டுக்கொடுக்கிறீர்கள்?

சித்திரையை எதிர்ப்போருக்கு வடமொழிப் பெயர் தான் பிரச்சனை என்றால் அதைத் தமிழில் மாற்றியிருக்கலாம். ஆனால் அவர்களின் நோக்கம் அதுவல்லவே! வழக்கமான ஆரியப் பல்லவி பாடி, தமிழனின் பண்பாட்டை – பழைமையை மறக்கடிக்கச்செய்து, அவனது தொன்மத்திலிருந்து அவனை வெளியேற்றிவிடுவது தானே அவர்களது நோக்கம்! பகுத்தறிவு ஞானப்பழங்களுக்கு அதுபற்றி என்ன கவலை! “இந்து” என்ற பெயர் அங்கு சம்பந்தப்படுகிறதா! எதிர்ப்பு தெரிவி! அழி! அது ஆரியத் திணிப்பு!

கிராமப்புறங்களிலும் திருமணப் பத்திரிகைகளிலும் தான் இந்த வருடப் பயன்பாடு வழக்கிலிருக்கிறது. மாடிவீட்டில் குளிரூட்டி அறையில் கணினிமுன் அமர்ந்துகொண்டு “ஆரியன்!” “இந்து”! என்று அலறும் இந்தக் கூட்டத்தினர் அறுபது பெயரை அல்ல! தமக்குப் பிடித்த திருவள்ளுவராண்டைக் கூடப் பயன்படுத்துவதில்லை!

இந்தியாவின் வேறெந்த பாகத்திலும் இந்த அறுபது பெயர்வழக்கு வழக்கத்திலில்லை! தமிழ்நாட்டில் மட்டும்தான்! ஒருவேளை இந்தப் பெயர்கள் தமிழில் பயன்பாட்டிலிருந்து பின் வடமொழிக்கு மாறியிருக்கலாமே தவிர, இது திணிக்கப்பட்ட விடயம் என்று கூறுவதற்கோ, ஆரியர்கள் அறிமுகப்படுத்தியது என்பதற்கோ எவ்வித எங்குமே சான்றுகள் இல்லை!

60 ஆண்டுப் பெயர்கள் நமது சிறப்புச் சொத்து! அபிதான சிந்தாமணிக்கும ் இறைமறுப்பர்க்கும் பரிந்துகொண்டு அவற்றை ஒழிக்கவேண்டியதில்லை!

தமிழ் அறுபதாண்டுப் பட்டியல் ஒன்று இணையத்தில் உலவுவதைக் காணக்கூடியதாக இருக்கிறது. அதை ஓரளவுக்கேனும் பயன்பாட்டில் விடுவது வரவேற்கத்தக்கது! சமயம் சார்ந்த .நடைமுறைகளில் வேண்டுமானால், வடமொழிப்பெயர்கள் வழக்கிலிருக்கட்டும். எனினும் அழைப்பிதழ்களில், அன்றாடத் தேவைகளில் தமிழ்ப் பெயர்களையே பயன்படுத்த வேண்டியது நம் கடமை!

பலராலும் மறுப்பது போலன்றி, அவற்றாலும் காலம்காட்ட இயலும்.
எப்படி?

திருவள்ளுவராண்டு 2044 சித்திரை ஒன்றில் பிறக்கிறது என எடுத்துக் கொண்டால்,
எனவே, வட்டத்திற்கு அறுபது என,
2044/60 = 34 சொச்சம் கிடைக்கும்.

இதில் 33 ஆண்டு வட்டம் முடிந்திருக்கும்.
எனவே பிறந்துள்ள விசய வருடம், தமிழில் "34ஆம் உயர்வாகை ஆண்டு!”

சமய விடயங்களில் கலியுகத்தையும், இப்படி இத்தனையாம் ஆண்டு என்று குறிப்பிட்டால் ஆண்டுவட்டங்களாலும் காலம் காட்டமுடியும்!
 

 
🙏🌹 நன்றி இணையம்            🌹🙏