எத்தனையோ தமிழ் பக்கங்கள் இருந்தாலும் தமிழ் வளர்த்த தமிழ்தாத்தாவை பற்றி எழுதவில்லை. ஏனோ? அதை பதிவிடும் பெருமை எனக்கே!
தமிழ் மொழியின் பழம்பெருமையைப் பலர் அறியாமல் வாழ்ந்து வந்த காலத்தில், அதாவது 19-ஆம் நூற்றாண்டின் நடுவில், தமிழுக்கு புத்துயிர் ஊட்ட, பலர்தோன்றினார்கள். அவர்களில் பெருமைக்குரியவராகத் திகழ்பவர்தான் தமிழ்த் தாத்தா என்று அழைக்கப்படும் உ.வே. சா.
அக்காலத்தில் நூல்கள் அனைத்தும்ஏட்டுச் சுவடிகளில் (பனை ஓலையில்) எழுதப்பட்டிருந்தன. இந்நிலையில் இவர், இதுபோன்ற ஏட்டுச்சுவடிகளை ஆராய்ந்து பின்பு நூல் வடிவிலே பதிப்பிக்கும் பொருட்டு திருவாவடுதுறை, திருப்பனந்தாள், தருமபுரம் போன்ற தமிழ் வளர்த்து வரும் ஆதீனங்களில் சுவடிகளைத் தேடி அலைந்தார். அங்கு அருமையான சுவடிகள் பல கரையான்கள் அரிக்கப்பட்ட நிலையில் இருக்கக்கண்டு மனம் புண்பட்டார்.
அப்போது ஆங்கிலேயர் ஆட்சி நம் நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அந்நாளில் பழந்தமிழ் சுவடிகளைக் கற்பவரும்இல்லை, அவற்றை பாதுகாக்க நினைப்பவரும் இல்லை என்ற நிலை நாட்டில் நிலவியது.
இந்நிலையிலும் இவரது தமிழ் ஆர்வத்தைக் கண்டு வியந்த தருமபுரம் ஆதீனத்தின் தலைவராக இருந்த ஸ்ரீ மாணிக்கவாசகர் தேசிகர் ஆதீனத்தில் இருந்த 50-க்கும் மேற்பட்ட சுவடிகளை உ.வே. சாமிநாதருக்கு கொடுத்து உதவினார்.
அந்த ஏட்டுச் சுவடிகளை நூலாக வெளியிட, இவருக்கு வேண்டிய உதவிகளை செய்ய கும்பகோணத்தில் முன் சீப்பாக இருந்த ராமசாமி என்பவர் முன்வந்தார். பின்னர் ராமசாமியின் உதவியால் உ.வே.சா. முதன் முதலில் பதிப்பித்த நூல்"சீவகசிந்தாமணி'. அடுத்து சங்க இலக்கியங்களுள் ஒன்றான"பத்துப்பாட்டு' என்ற நூலை உ.வே.சா. அச்சிட்டு வெளியிட்டார். அதன் பிறகு ஐம்பெருங்காப்பியங்களில்"சி லப்பதிகாரம்',
"மணிமேகலை' போன்ற நூல்களைப் பதிப்பித்து வெளியிட்டார்.
அடுத்து "குறுந்தொகை' என்ற இலக்கியத்திற்கு உரை எழுதி வெளியிட்டார். இதைத் தொடர்ந்து எண்ணற்ற நூல்களை வெளியிட்டு தமிழுக்கு அரும்பணியாற்றினார். இவர் பதிப்பித்த நூல்களை நான்கு வகையாகப் பிரிக்கலாம். "சங்க நூல்கள்', "பிற்கால நூல்கள்',"இலக்கண நூல்கள்',"திருவிளையாடற் புராணம்' போன்ற காவிய நூல்களாகும். ஆகமொத்தம் ஏட்டுச் சுவடிகளைப் பதிப்பித்துநூலாக வெளியிட உ.வே.சா. பட்ட இன்னல்கள் கணக்கில் அடங்காதவை.
* உ.வே.சா - உத்தமதானபுரம் வேங்கட சுப்பையர் மகன் சாமிநாதன்.
* உ.வே.சாவின் இயற்பெயர்- வேங்கடரத்தினம், அவரது ஆசிரியர் அவருக்கு சூட்டிய பெயர் - சாமிநாதன்.
* உ.வே.சா பிறந்த ஊர் - திருவாரூர் மாவட்டத்தில் உள்ள உத்தமதானபுரம்.
* உ.வே.சாவின் காலம் - 19.02.1855 முதல் 24.04.1942 வரை
* உ.வே.சாவின் ஆசிரியர் - மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம்பிள்ளை.
* உ.வே.சாவின் பெயரால் சென்னை பெசன்ட் நகரில் 1942ல் நிறுவப்பட்ட நூல் நிலையம் இன்றும் செயல்பட்டு வருகிறது.
* உ.வே.சா ஓலைச்சுவடிகளை பதிப்பித்ததால் பதிப்புத்துறையின் வேந்தர் என அழைக்கப்படுகிறார்.
* உ.வே.சாவுக்கு திருவாரூர் மாவட்டம் உத்தமதானபுரத்தில் நினைவு இல்லம் உள்ளது.
* உ.வே.சாவுக்கு தட்சணாமூர்த்தி கலாநிதி என்று பெயர் வழங்கியவர் - சங்கராச்சாரியார்.
* உ.வே.சாவின் வாழ்க்கை வரலாற்று நூல் "என் சரிதம்" (ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்தது)
* உ.வே.சா ஈரோடு மாவட்டத்தில் உள்ள கொடுமுடி ஆற்றில் விடப்பட்ட ஒலைச்சுவடியை எடுத்துபடித்து புதுப்பித்தார்.
* குறிஞ்சிப் பாட்டின் ஆசிரியர் - கபிலர்.
* குறிஞ்சிப் பாட்டு எந்த நூல்களுள் ஒன்று - பத்துப்பாட்டு
* கபிலரின் குறிஞ்சிப்பாட்டில்99 வகையான பூக்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
* உ.வே.சாவின் தமிழ் பணிகளை பாராட்டிய வெளிநாட்டு அறிஞர்கள்: ஜி.யு.போப், சூலியல் வின்சோன்.
* 2006-ஆம் ஆண்டு உ.வே.சா. வைப் பெருமைப்படுத்தி அஞ்சல் தலை வெளியிட்டது மத்திய அரசு.
உ.வே.சா பதிப்பித்த நூல்கள்:
எட்டுத்தொகை - 8
பத்துப்பாட்டு - 10
சீவக சிந்தாமணி - 1
மணிமேகலை - 1
சிலப்பதிகாரம் - 1
புராணங்கள் - 12
உலா - - 9
கோவை - 6
தூது - 6
வெண்பா நூல்கள் - 13
அந்தாதி - 3
பரணி - 2
மும்மணிக்கோவை - 2
இரட்டைமணிமாலை - 2
பிற பிரபந்தஸ்கள் - 4
-வி.ராஜமருதவேல்.
அப்போது ஆங்கிலேயர் ஆட்சி நம் நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அந்நாளில் பழந்தமிழ் சுவடிகளைக் கற்பவரும்இல்லை, அவற்றை பாதுகாக்க நினைப்பவரும் இல்லை என்ற நிலை நாட்டில் நிலவியது.
இந்நிலையிலும் இவரது தமிழ் ஆர்வத்தைக் கண்டு வியந்த தருமபுரம் ஆதீனத்தின் தலைவராக இருந்த ஸ்ரீ மாணிக்கவாசகர் தேசிகர் ஆதீனத்தில் இருந்த 50-க்கும் மேற்பட்ட சுவடிகளை உ.வே. சாமிநாதருக்கு கொடுத்து உதவினார்.
அந்த ஏட்டுச் சுவடிகளை நூலாக வெளியிட, இவருக்கு வேண்டிய உதவிகளை செய்ய கும்பகோணத்தில் முன் சீப்பாக இருந்த ராமசாமி என்பவர் முன்வந்தார். பின்னர் ராமசாமியின் உதவியால் உ.வே.சா. முதன் முதலில் பதிப்பித்த நூல்"சீவகசிந்தாமணி'. அடுத்து சங்க இலக்கியங்களுள் ஒன்றான"பத்துப்பாட்டு' என்ற நூலை உ.வே.சா. அச்சிட்டு வெளியிட்டார். அதன் பிறகு ஐம்பெருங்காப்பியங்களில்"சி