திருவள்ளுவர்

மணக்கால் அய்யம்பேட்டை | முற்பகல் 11:19 | Best Blogger Tips
"திருவள்ளுவர் என்னும் இந்து ஞானியும்" மத சார்பின்மை என்னும் பெயரில் இந்து மதத்தை ஓரம் கட்டுவதாக நினைத்துக் கொண்டு செயல்படும் பிறவிக் குருடர்களும் : 

திருவள்ளுவர் கூறுவது நான்மறைப் பொருளே என்று சங்கப் புலவர்களே சொல்லி இருக்கும் போது, வரும் சமுதாயம், அவர்களை நம்புமா? அல்லது இவர்களை நம்புமா? மேலும் தமிழ் படிப்பவர் இருக்கும் காலம் வரை, திருவள்ளுவர் கூறுவது வேதக் கருத்துதான் என்பதை அவரவர் படித்துப் புரிந்து கொள்ள முடியும். இவர்களுக்குத்தான் புரியவில்லை. அதன் காரணம், பிறவிக் குருடர்கள் யானையின் ஒரு அங்கத்தைத் தடவிப்பார்த்து, அதுவே யானையின் முழு உருவம் என்று சொன்ன கதையைப் போல இவர்களும், பிறவிக் குருடர்களாக, திருக்குறளை தொட்டுவிட்டு வந்துள்ளனர்.

எப்படி இவர்களைப் பிறவிக் குருடர்கள் என்று சொல்லலாம் என்று கேட்கலாம். மாபெரும் பொக்கிஷம் போன்ற திருக்குறளை அறிய ஒரு மனித அறிவும், அனுபவமும் மட்டும் போதாது. காலம் காலமாக முன்னோர் சொன்ன விளக்கங்களையும் கேட்டு நாம் அணுகினால்தான், யானை போன்ற அந்த பெரும் நூல் சொல்லும் விஷயங்களை, எந்த எண்ணத்தில் வள்ளுவர் சொன்னாரோ அந்த எண்ணத்தில் தெரிந்து கொள்ள முடியும். திருக்குறளுக்கு உரை எழுதியவர்கள் பதின்மர். இதனை, “தருமர், மணக்குடியர், தாமத்தர், நச்சர், பரிதி, பரிமேலழகர், திருமலையர், மல்லர், கவிப்பெருமாள், காளிங்கர் வள்ளுவர் நூற்கு எல்லையுரை செய்தாரிவர்” என்று சொல்லியுள்ளார்கள். அவர்தம் உரைகளை ஒட்டியே நாமும் பொருள் கொள்ள வேண்டும். அப்படிச் செய்யவில்லை என்றால், நாமும் பிறவிக்குருடர்கள் போல மூடக் கூட்டுறவு முழுதும் அபாயம் என்ற நிலையில் இருப்போம்.

**********

திருக்குறள் மத சார்பற்றது என்று இவர்கள் சொல்வதில் எனக்கு என்ன புரியவில்லை என்றால், திருக்குறள் படித்த இவர்கள் , திருவள்ளுவ மாலையைப் படித்திருக்க மாட்டார்களோ? பல பதிப்புகளிலும், திருவள்ளுவ மாலையையும் சேர்த்துதானே திருக்குறள் அச்சிட்டுள்ளார்கள்? திருவள்ளுவ மாலையில் தொகுக்கப்பட்டுள்ள பாடல்களெல்லாம் நீங்களோ, நானோ எழுதியவையா என்ன? திருவள்ளுவரையும், திருக்குறளையும் புகழும் அப்பாடல்கள் சங்கப் புலவர்கள் எழுதியவை. அவர்களில் ஒருவராவது, திருக்குறள் மத சார்பற்றது என்றோ அல்லது சமண பௌத்த மதக் கருத்துக்களை உடையது என்றெல்லாமா கூறியிருக்கிறார்கள்? எடுத்துக்காட்டாக, வெள்ளி வீதியார் எழுதின பாடலைப் பாருங்கள்.

செய்யா மொழிக்கும் திருவள் ளுவர் மொழிந்த
பொய்யா மொழிக்கும் பொருள்ஒன்றே – செய்யா
அதற்குரிய ரந்தணரே யாராயி னேனை
இதற்குரிய ரல்லாதா ரில்.

எவர் ஒருவராலும் செய்யப்படாததால் வேதம் ‘செய்யா மொழி’ எனப்படுகிறது. செய்யா மொழியும் பொய்யா மொழியும் (திருக்குறளும்) ஒன்று. இரண்டும் ஒரே பொருளைப் பற்றி பேசுகின்றன. இவற்றுக்கிடையே ஒரே ஒரு வேறுபாடு தான் இருக்கிறது. செய்யா மொழியை அந்தணர் மட்டுமே ஓத முடியும். பொய்யா மொழியை ஓத குறிப்பிட்ட சிலரால்தான் முடியும் என்பது இல்லை. யார் வேண்டுமாலும் ஓதலாம்.

உக்கிரப் பெருவழுதியார் இன்னும் ஒரு படி மேலே போய் நான்முகக் கடவுளே திருவள்ளுவராகப் பிறந்து திருக்குறள் எழுதினார் என்கிறார்.

“நான் மறையின் மெய்ப் பொருளை முப்பொருளா நான்முகத்தோன்
தான் மறைந்து வள்ளுவனாய்த் தந்துரைத்த”

என்று சொல்கிறாரே, அப்படிப்பட்ட திருக்குறள் மத சார்ப்பின்மையைப் பறை சாற்றுகின்றது என்றால், அது இந்து மதத்தின் இயல்பு என்றல்லவா தெரிந்து கொள்ள வேண்டும்? இந்து மதமே மத சார்பின்மை தான் என்றுதானே புரிந்து கொள்ள வேண்டும்? மத சார்பின்மை என்று சொல்லிக் கொண்டு இந்து மதத்தை ஒதுக்குவது முட்டாள்தனம் அல்லவா?

இந்தப் பாடல்களைப் போல பல பாடல்களிலும் திருக்குறளும் நான்மறையும் ஒன்று என்று சங்கப் புலவர்கள் தெளிவாகக் கூறியுள்ளனர். இதில் சமணர், பௌத்தரே சொந்தம் கொண்டாட முடியாத போது, கிறிஸ்துவரும், நாத்திகரும், மத சார்பின்மைக் காவலர்களும் கிட்டேயே நெருங்க முடியாது.

**********

வள்ளுவர் எந்த ஒரு கடவுளையும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை என்பது இவர்கள் வாதம். பழைய உரையைப் படித்திருந்தால் யானையைத் தடவிப் பார்த்த பிறவிக் குருடர் போல இந்த முடிவுக்கு வந்திருக்க மாட்டார்கள்.

வள்ளுவர் இந்து மத தெய்வங்களை வெளிப்படையாகவே தமது நூலில் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் கடவுள் வாழ்த்து என்னும் அதிகாரத்தில் அவர் கூறியுள்ள இலக்கணங்கள் இந்து மதம் கூறும் பரம்பொருளுக்கே முழுமையாகப் பொருந்துகின்றன.

வாலறிவன், மலர்மிசை ஏகினான், வேண்டுதல் வேண்டாமை இலான், தனக்குவமை இல்லாதான், அறவாழி அந்தணன், எண்குணத்தான், பிறவிப் பெரும் கடல் நீந்த அடி கொடுக்கும் இறைவன் என்றெல்லாம் வருபவை இந்து மதம் காட்டும் தெய்வம்தானே என்பதை மறுப்பவர்கள் உள்ளனர்.
ஆனால் அப்படி மறுக்கும் சமணர்களோ, பிற மதத்தவரோ சொல்ல முடியாத ஒரு தெய்வத்தை மிக வெளிப்படையாக எழுதியுள்ளார் திருவள்ளுவர். அது பாற்கடலைக் கடைந்த பொழுது முதலில் தோன்றிய ஜ்யேஷ்டா தேவி என்னும் மூதேவி. குறள் 617 – இல் ‘மாமுகடி’ என்று மூதேவியின் பெயர் வருகிறது. மாமுகடி என்று மூதேவியைத் தான் அவர் சொல்கிறார் என்று மெய்ப்பிக்கும் வண்ணம், அதே குறளில், ஸ்ரீ தேவியையும் குறிப்பிடுகிறார்.

mahalakshmi_1மடியுளாண் மாமுகடி என்ப மடியிலான்
தாளுளாள் தாமரையி னாள்.

இதன் பொருள் – ஒருவன் சோம்பலில் மூதேவி வாழ்கிறாள். சோம்பல் இல்லாதவன் முயற்சியில் திருமகள் வாழ்கிறாள்.

மூதேவியும், ஸ்ரீ தேவியும் இந்து மதத் தெய்வங்கள். இந்தக் குறள் அவர்களைப் பற்றிச் சொல்கிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது – முன்னால் தமிழக முதல்வர் உட்பட. அவர் கொடுத்துள்ள குறளோவிய விளக்கத்தில் இவர்கள் பெயரை நீக்கி வேறு ஒரு விளக்கத்தைத் தர முடியாது. அவர் கொடுத்துள்ள விளக்கத்தைப் பாருங்கள்.

“திருமகள், மூதேவி எனப்படும் சொற்கள் முறையே முயற்சியில் ஊக்கமுடையவரையும், முயற்சியில் ஊக்கமற்ற சோம்பேறியையும் சுட்டிக் காட்டிப் பயன்படுவனவாகும்.”

சுட்டிக்காட்டப் பயன் படும் சொற்கள் என்று இந்தத் தெய்வங்களின் பெயரை சொல்லி நிறுத்தி விட்டார். எங்கிருந்து இந்தப் பெயர்கள் வந்தன? மத சார்பின்மையில் முளைத்த பெயர்களா இவை? அல்லது திருவள்ளுவரும் வசதிக்காக இந்து மதத்திலிருந்து கடன் வாங்கிக் கொண்டாரா? அல்லது சொல்ல வந்தக் கருத்தை வேறு வழியில் சொல்லத் தெரியவில்லையா?

தெரிவது என்னவென்றால் திருவள்ளுவர் பின்பற்றிய மதம் இந்து மதமாக இருந்திருக்க வேண்டும். தமிழ் மக்களிடையே நிலவிய மதமும் இந்து மதமாக இருந்திருக்க வேண்டும். அப்பொழுதுதான் மக்கள் மத்தியில் உலவும் தெய்வங்களின் பெயரை, அவற்றுக்குத் தொடர்பாக உள்ள கருத்துடன் இப்படிச் சொல்ல முடியும்.

குறள் 610 – இலும் திருவள்ளுவர் மற்றொரு இந்து தெய்வத்தைப் பற்றி எழுதியுள்ளார். அது குறளனாய் வந்து மூவுலகும் ஈரடியால் அளந்த த்ரிவிக்ரமன் என்னும் வாமனன்.

மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்
தா அய தெல்லாம் ஒருங்கு.

இங்கே அடியளந்தான் என்பது ‘எல்லா உலகையும் அளந்த இறைவன்’ என்று பரிமேலழகர் கூறுகிறார். தாயதெல்லாம் என்று வருவதால், முன்னே அடியளந்தான் என்றது, திருமாலைக் குறிக்கிறது.

அடியளந்தானுக்கும் திருக்குறளுக்கும் ஒற்றுமை இருக்கிறது.
அடியளந்த வாமனனும் குறளன்.
அவன் அளந்தது இரண்டியால் மூவுலகங்களை.
திருவள்ளுவர் ஆண்டது குறள் வகையை.
இவரும் இரண்டடியால் மூன்று புருஷார்தங்களான தர்மம், அர்த்தம், காமம் என்பவற்றை அளந்து, அறம், பொருள் இன்பம் என்று முப்பாலாகக் கொடுத்துள்ளார். இந்த மூன்றை ஒழுங்காகக் கடை பிடித்தால் நான்காவதான வீடு பேற்றைப் பெறலாம். வீடு பேறு என்பது சிந்தையும், மொழியும் செல்லா நிலையானது. அதை அடையத் தேவையான தர்மம், அர்த்தம், காமம் ஆகியவற்றில் உள்ள நிமித்தங்களை வேத மதம் கூறுகிறது. அந்த வழியைப் பின் பற்றியே திருவள்ளுவரும் கூறியுள்ளார்.

108 என்னும் எண் ஞானத்துக்கும், தியானத்துக்கும் இந்து மதம் கொடுத்த எண். திருவள்ளுவரும் 108 அதிகாரங்களை அமைத்துள்ளார். அறத்துப்பால் முடிவில் இந்து மதக் கருத்தான ஊழ் என்பதைக் கொடுத்துள்ளார். அறம் பிழைத்தோருக்கு அறமே கூற்றாக வரும் என்பதால் இப்படி வரிசைப்படுத்தப்பட்டுள்ளது. ஊழ்வினைக் கருத்தை இந்து மதம் சொல்லாமல், வேறு எந்த மதம் சொல்கிறது?

இந்து மதத்தில் வாமனனுக்கு என்றுமே முக்கியத்துவம் உண்டு. வாமன அவதாரம் அடிக்கடி நிகழ்ந்திருக்கிறது என்பது வாமன புராணத்தின் மூலமாகத் தெரிகிறது. உலகமே வாமனனின் பிடியில் இருக்கிறது. இப்படி வாமனனைப் பார்ப்பது ஜோதிட சித்தாந்தம். சூரியப் பயணத்தில் உத்தராயணம் ஆரம்பிக்கும் இடம் வாமனின் முதல் அடி. அந்த அடியைத் தூக்கி, உயர்த்தி சமநோக்கு நாளன்று (விஷு அல்லது வருஷப் பிறப்பு) வானை அளந்து, பிறகு காலை இறக்கி, தட்சிணாயனம் ஆரம்பிக்கும் இடத்தில் வைப்பது இரண்டாவது அடி. மூன்றாவது அடி வைப்பது பூமியின் தென் பகுதியில். அது துலா புண்ய காலம். அது ஐப்பசி ஆரம்பிக்கும் நேரம். அன்று புது வருடம் கொண்டாடும் வழக்கமும் அந்தப் பகுதியில் வாழ்ந்த மக்களால் பின் பற்றப்பட்டது. வள்ளுவர் வாழ்ந்த காலத்தில் வாமன அவதாரம் பற்றிய புராணம் தமிழ் கூறும் நல்லுலகில் நன்கு அறியப்பட்டிருக்க வேண்டும்; அதனால் தான் அதனை ஒரு குறட்பாவில் உவமையாகவே அவர் சொல்லத் துணிந்தார்.

வாமனனைப் போல மற்றுமொரு தெய்வத்தைப் பற்றி வள்ளுவர் மறைமுகமாகக் கூறுகிறார். எந்த தெய்வத்தைப் பழிக்கிறார்களோ, அந்த தெய்வம் எந்தக் கல்லூரியில் படித்தவர் என்று கேட்டார்களோ அந்த தெய்வத்தைப் புகழும் குறள் அது.

குறள் 773 – இல் ராமனைப் பற்றிய செய்தியை மறைமுகமாகக் கூறுகிறார்.

“பேராண்மை என்ப தறுகண்ஒன் றுற்றக்கால்
ஊராண்மை மற்றதன் எஃகு.”

rama-defeats-ravanaபகைவனிடம் கருணை காட்டாது போரிடுவதே ஆண்மை என்றும், போர்க்களத்தில் பகைவன் தாழ்வுற்ற பொழுது அருள் செய்வதே மேன்மை என்றும் கூறுவர். இங்கு ‘என்ப’ என்றது வழக்கில் உள்ள ஒரு கருத்து என்றாகிறது. இங்கு சொல்லபப்டும் பேராண்மையும், ஊராண்மையும் ஒருங்கே இருந்த ஒரே ஆண்மகன் ராமன்.

இந்தக் குறளுக்கு உரை எழுதுகையில், “இலங்கையர் வேந்தன், போரிடைத் தன் தானை முழுதும்படத் தமியனாகப் படடானது நிலைமை நோக்கி அயோத்தி இறை மேற்செல்லாது ‘ இன்று போய் நாளை நின் தானையோடு வா’ என விட்டதைப் போலது” என்று பரிமேலழகர் வெளிப்படையாகவே இராமாயண நிகழ்ச்சியைச் சுட்டிக் காட்டிக் கூறுகிறார்.

ராமனது இந்தச் செயல் அன்றும் பேராண்மையாகப் பேசப்பட்டிருத்தலாலேயே, ‘பேராண்மை என்ப’ என்று ராமனைக் கருத்தில் கொண்டு வள்ளுவர் கூறியிருக்க வேண்டும்.

  திருக்குறளை வைத்து வள்ளுவரைச் சமணரென்பதற்கு யாதொரு அடிப்படையும் இல்லை. ஆய்ந்து நோக்கின் திருக்குறள் பெயரிலாப் பெருவழியான இந்துஞானமரபின் அறநூலே! இத்திறக்கில் அடியேன் கடந்த சில வருடங்களாக இணையத்தில் பல குழுமங்களில் பல சமண அறிஞர்களுடனும் வாதிட்டு இக்கருத்தை நிறுவியுள்ளேன் …

  குறள் 550 -ல் மரணதண்டனையை நியாயப்படுத்துவது எவ்வகையிலும் அஹிம்சை போற்றும் சமணத்திற்குப் பொருந்தாது. சமண அறநூல்களில் மரணதண்டனை தீர்ப்பாகச் சொல்லப்படவில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும் …

  சிறுதெய்வங்களுக்குப் படையல் வைப்பதும், மூதாதைகளுக்குப் படையல் வைப்பதும் (குறள் 43) சமணத்திற்கு ஏற்புடையது அல்ல …

  எளிதில் பொருள்விளங்கா பல அதிநுட்பமான குறட்பாக்களுக்கு வேதாந்த சைவசித்தாந்த அடிப்படையில் மட்டுமே மெய்ப்பொருள் கொள்ளமுடியும் ….

  வேதங்கள் என்றும் அந்த பரமாத்மனைப் பார்த்துக்கொண்டே, அவனைப் பற்றிப் பேசிக் கொண்டே இருக்கின்றன. அந்த பரமாத்மன் மனுஷ்ய அவதாரம் எடுத்தால், வேத புருஷனும் அவனுடன் இப்பூவுலகில் அவதாரம் எடுக்க வேண்டும், அந்த பரமாத்மன் ராமனாகப் பிறந்த போது, வேதமும் ராமாயணமாகப் பிறந்தது.

திருக்குறளும் வேதமே என்றனர் ஆன்றோர். திருக்குறளின் அறத்துப் பால் கூறும் தர்ம நெறிகளின் இலக்கணம் முழுவதும் வேதநெறிப் பட்டதே. திருக்குறளுக்கு வழங்கும் பல பெயர்களில் “உத்தரவேதம்” என்பதும் ஒரு பெயர் என்பது குறிப்பிடத் தக்கது.

ராமன் என்ற ஒருவனே கிடையாது என்று கடலையே தோண்டத் தலைப்பட்டவர்கள் திருவள்ளுவரையும், திருக்குறளையும் கொஞ்சம் தோண்டிப் பார்திருக்ககூடாதா?
அங்கே தெரிந்திருக்குமே வேத நெறியும், இந்து தர்மமும்!

வள்ளுவர் இந்து மத முனிவர்களுள் ஒருவர் என்பதற்கு, பல சான்றுகளை கொடுக்கலாம்.

ஐந்தவித்தான் ஆற்றல் அகல் விசும்புளார் கோமான்
இந்திரனே சாலுங் கரி

( நீத்தார் பெருமை 25)

பொறிகளை அடக்கி ஆளும் முனிவர்களைப் பார்த்து, அவர்கள் தன பதவியை பிடித்து விடுவார்களோ என இந்திரனே அஞ்சுகிறான் , இதில் இருந்தே பொறிகளை அடக்கி ஆள்வதால கிடைக்கும் வலிமை தெளிவு என்கிறார் வள்ளுவர்.

எனவே

இந்திரன் தேவர்களின் தலைவன்,

முனிவர்கள் ஐம்புலன்களை அடக்கி தவம் செய்வது ,

அதை கண்டு அஞ்சி இந்திரன் பல வழியிலும் அவர்களின் தவத்தை நிறுத்த முயன்றது

என எல்லாவற்றையும் இரண்டே வரியில் தெள்ளத் தெளிவாக எடுத்துக் கூறி விட்டார் வள்ளுவர்.

அதனால் தான் வள்ளுவர் என்ற பெயரைக் கேட்டாலே பெரியாருக்கு எரிச்சல் வந்து விடும்.

இப்படியாக வள்ளுவர் இந்து மத முனிவர் என்பதற்கு, பல சான்றுகளை கொடுக்கலாம்.

ஔவையார் எழுதிய ஒரு நீதி நூலில் (நல்வழி அல்லது மூதுரை) ஒரு பாடல் உண்டு..

தேவர் குறளும், திருநான்மறை முடிவும்
மூவர் தமிழும், முனிமொழியும், கோவை
திருவாசகமும், திருமூலர் சொல்லும் –
ஒருவாசகம் என்றுணர்.

திருக்குறளும், இந்து புனித நூல்களும் சொல்வது ஒரே வாசகம் என்று தமிழ் மூதாட்டியே சொல்லியிருக்கிறார். எனவே திருவள்ளுவர் இந்து ஞானி என்பதற்கு வேறு என்ன சான்றிதழ் வேண்டும்?? 

- ஜெயஸ்ரீ சாரநாதன்