1828 ஆம் ஆண்டளவில் வாரணாசியில் மௌரியபந்தர் - பகீரதிபாய் என்ற தம்பதிக்கு பிறந்தவர் ஜான்சிராணி. இவருக்கு பெற்றோர் இட்ட பெயர் மணிகர்ணிகா. தனது 4 வயதில் தாயை இழந்தார்.
ஜான்சியை ஆண்ட கங்காதரராவ் என்பவருக்கு 1842 இல் மணிகர்ணிகாவை திருமணம் செய்து கொடுத்தார் தந்தை. மணிகர்ணிகா லட்சுமிபாய், ஜான்சியின் ராணியானார். 1851 இல் அவருக்குப் பிறந்த மகன் ( தாமோதர ராவ் ) 4 மாதங்களில் இறந்து போனது.
வீரத்தின் மறு உருவமான லக்ஷ்மிபாய் பிறந்த வருடம் 1834. இவரது வீரதீரச் செயல்கள், மற்றும் ஆங்கிலேயரை எதிர்த்து இவர் புரிந்த போர் போன்றவை இந்திய நாட்டில் இன்றும் நாட்டுப்புறப் பாடல்களாகவும், நாடகங்களாகவும் பலரால் போற்றப்படுகின்றன. அமரத்துவம் பெற்ற ஒரு வீராங்கனையாக இன்றும் அவர் பெயர் அழியாப் புகழ் பெற்றுள்ளது. சிறு வயதிலேயே குதிரையேற்றமும், வாள் வீச்சும் கற்றுக் கொண்டார். இவரது கணவர் ஜான்ஸி ராஜா கங்காதர் ராவ் அவர்களும், ஒரே மகனும் 1853 இல் இறந்த பிறகு, இவரும் ஒரு மகனைத் தத்து எடுத்துக் கொண்டு அவரையே ஆட்சியில் அமர்த்தினார். அப்போதைய ஆங்கிலேய கவர்னர் டல்ஹௌஸி இந்த தத்துப் பிள்ளையை அதிகாரபூர்வமாக ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டு ஜான்ஸி நாட்டை ஆங்கிலேயர்கள் ஆட்சியில் சேர்த்துக் கொள்ள முடிவெடுத்தார். தனது நாட்டை விட்டுக் கொடுக்க மறுத்த ஜான்ஸி ராணி லக்ஷ்மிபாய், தனது படை வீரர்களை முன்னின்று வழி நடத்திச் சென்று பெரும் ஆற்றலுடனும், மிகத் துணிச்சலுடனும் போர் புரிந்தார். 1858 ஆம் வருடம், ஜூன் மாதம் 18 ஆம் தேதி, போர்முனையில் காயம் அடைந்து, வீரமரணம் அடைந்தார் இந்த வீரப் பெண்மணி.
1853 இல் கங்காதரராவ் உடல்நலமிழந்தார். நவம்பர் 21, 1853 இல் மன்னர் இறந்தார். மன்னர் கங்காதரராவ் மறைந்தபின், மன்னர் கங்காதர ராவ் இறந்து போக இளம் வயதிலேயே ஜான்சியை ஆட்சி செய்ய தொடங்கினால் லட்சுமி பாய். போர்களைகளிலும், நிர்வாகத்திலும் திறமையாக விளங்கிய ராணியை மக்கள் தெய்வமாக கருதிக் கொண்டாடினர்.
வாரிசுகள் இல்லாத ராஜ்யத்தை ஆங்கிலேயர்கள் ஆதிக்கத்தின் கீழ் வரும் என்று புதிய சட்டத்தை அமலாகினர்.ஜான்சியை கைபற்ற வெள்ளையர்களால் பெரும் படை அனுப்பி கோட்டையை முட்ட்ருகை இட்டனர். தங்கள் ராநிகாக எதையும் இழக்கும் நோக்கதில்
போர் வீரர்கள் தயாராக இருந்தனர். ஜான்சியின் சேனை வெள்ளையர்களை அழித்து வெற்றி வாகை சூடியது. மீண்டும் மிகவும் திறமை சாலி என்ற பெயரை பெற்ற சர் ஹியுக் என்ற தளபதியின் தலைமையில் ஆங்கிலேயர் ஒரு பெரிய படையை அனுப்பினர்.
அந்த படை கோட்டைக்குள் போக ஒரு துரோகி துணை நின்றான் எதிர்பாராத இந்த செயலை கண்டு அஞ்சாத ராணி வெள்ளையர்கள் கோட்டையை கைப்பற்ற போகிறார்கள் என்று தெரிந்தும் போரில் வெள்ளையர்களை வீழ்த்த மாறு வேடத்தில் ஆன் போல் வேடமனிந்து சில நாட்கள் பெரும் படையை திரட்ட செய்தால். ராணியின் இருப்பிடம் தெரிந்து பல முறை வெள்ளையர்கள் அவரை அளிக்க முயற்சித்த போதும் பல வெள்ளையர்களின் உயிரை பிரித்தார் ராணி. இறுதியாக அவர் குவாலியாரில் இருப்பதாய் ரோஸ் என்ற ஆங்கிலயேன் அறிந்து பெரும் படையுடன் வந்தான் இறுதி வரை போராடிய ராணி தன படையில் இருபது பேர் மட்டும் எஞ்சிய நிலையில் கூட ஆங்கிலேயனின் தலையை தன வாளுக்கு இறையாகினால். ஆனால் ஒரு நிலையில் தான் மேற்கொண்டு போரிட முடியாது என்பதை அறிந்தால். தீ காயங்களுடன் தரையில் வீழ்ந்தால் வீரப்பெண்மணி. பகைவருடன் உயிருடன் சிக்காமல் இருக்க ஒரு குடிசையில் கொண்டு போய் சேர்த்தனர் ராணியை. தன உடலை கூட பகைவர்கள் பார்க்க கூடாது என்று எண்ணிய ராணி தன இறுதி காலம் வந்ததை உணர்ந்தால் தான் இறந்த வுடன் தன உடலை தீயால் இட்டு எரித்து விட செய்யுமாறு கட்டளையிட்டால். அவர் உயிர் பிரியும் பொது அவள் வயது 21. போற்றுவோம் ஜான்சி ராணியை இன்றைய பெண்களும் இவள் போல் வீர மங்கையாய் தேச பற்று உள்ளவரை போல் வாழ முடிவெடுப்போம். இனி நம் வீட்டில் பிறக்கின்ற ஒவ்வொரு குழந்தையும் ஜான்சி ராணியை போலவும் அன்னை சாரதாவை போலவும் பிறக்கட்டும்.