
பத்ம விருதுகள் விழாவை பார்த்துக் கொண்டு இருக்கையில், ஒரு வெள்ளைக்காரர், திருநீறு தரித்து, ருத்திராட்சம் அணிந்து,
வேட்டி கட்டிக் கொண்டு, குடுமி வைத்துக் கொண்டு, வெறும் கால்களோடு பத்ம ஸ்ரீ விருதை பெற வருவதை பார்த்து திகைத்துப் போனேன்.
இன்று பத்மஸ்ரீ விருது பெற்றவர்களில் ஒருவர் வெளிநாட்டவர்... அவரைப் பற்றி
#இந்துக்கள் நாம் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்...
#பிரேசில் நாட்டின் ஜெனிரோவில் பிறந்த அவர், இயந்திரப் பொறியியலில் பட்டம் பெற்று,
பிரேசில் இராணுவத்தில் 5 ஆண்டுகள் பணியாற்றினார்....
பின்னர் பங்குச் சந்தையில் ஆலோசகராகவும் பணிபுரிந்தார்....
இருப்பினும், வாழ்க்கையில் ஏதோ குறைவது போல் உணர்ந்த ஜோனாஸ்,..
யோகா மற்றும் தியானம் மூலம் ஆன்மீக பாதையில் பயணிக்க ஆரம்பித்தார்....
2004 ஆம் ஆண்டு நம்ம கோவை ஆனைகட்டியில் உள்ள ஒரு ஆசிரமத்திற்குச் வந்து சுவாமி தயானந்த சரஸ்வதியிடம் வேதாந்தம் பயின்றார்....
என் அனுபவங்கள்
(இங்கு நான் சென்று இருந்த போது மிகவும் அமைதியான, இனிமையான, வசீகரமான, அழகிய சூழ்நிலையில் யோகா உபநிஷங்கள் ஆகியவை கற்று
ஸ்
ரீ தயானந்த சரஸ்வதி சுவாமிகளின் ஆசியும் பெற்றேன்.

இங்கு
சாத்வீக உணவு என்பது அங்கு தான் நான் சாப்பிட்டு இருக்கிறேன்.
எவ்வளவு தூரத்துக்கு
மனதையும் உடம்பை உடல் வளத்தையும் பேணி காப்பது என்பது என்பதை இங்கு கற்றுக் கொண்டேன்.)
நான்கு ஆண்டுகள் அங்கு தங்கியிருந்து வேதம், உபநிடதங்கள், பகவத் கீதை மற்றும் சமஸ்கிருதம் ஆகியவற்றைக் கற்றார்....
தனது குருவின் வழிகாட்டுதலின்படி, பிரேசில் திரும்பிய ஜோனாஸ்,..
'விஷ்வ வித்யா' என்ற அமைப்பை நிறுவி வேதாந்த போதனைகளை பரப்பத் தொடங்கினார்....
அவரது போதனைகள் பிரேசில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் பலரையும் கவர்ந்தது. அவர் பகவத் கீதையை போர்த்துகீசிய மொழியில் மொழிபெயர்த்துள்ளார்,.. மேலும் வேதாந்தம் மற்றும் யோகா குறித்து பல புத்தகங்களையும் எழுதியுள்ளார்....
ஜோனாஸ் மாசெட்டி தனது ஆன்மீக போதனைகள் மூலம் பலரது வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளார்...
அவரது சேவையைப் பாராட்டி பாரத அரசு இந்த ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்துள்ளது....
த்தனையும் சாதித்து விட்டு ஆச்சார்யா 'மசெட்டி' குறிப்பிடுகிறார்.
"என்னதான் ஆன்மீகத்தில் லயித்திருந்தாலும், பாரதம் எனும் புண்ணிய பூமியில் பிறக்கவில்லையே எனும் ஏக்கம் என்னுள் இருந்தே வந்தது. இந்த பத்ம விருது எனும் அங்கீகாரத்தை கொடுத்து, மோடிஜி அவர்கள் அந்த ஏக்கத்தை போக்கி விட்டார். நானும் ஒரு பாரதீயனாகவே
உணர்கிறேன்".
எங்கோ பிறந்து, எப்படியோ வளர்ந்தவருக்கு எல்லாம் சனாதன தர்மத்தின் மகத்துவம் புரிகிறது.
ஆனால் இந்த புண்ணிய பூமியில் பிறந்தும், அசுர குணம் மேலோங்கி, 'சனாதன தர்மத்தை அழிப்பேன்' என சில சில்வண்டுகள் பேசுவது, 'கர்மா' என்பதன் மகத்துவத்தை உணர்த்துகிறது.
சர்வம் கிருஷ்ணார்ப்பணம்
🙏🌹 நன்றி இணையம் 🌹🙏
🌷 🌷🌷 🌷
🌷 🌷🌷 🌷