திருமணம் செய்ய தயாராக இருக்கும் பெண்களா நீங்கள் ? இதெல்லாம் மனசுல வச்சிக்கிட்டா உங்க வாழ்க்கை நல்லா இருக்கும்.
1. திருமணத்திற்கு முன் படித்து வேலைக்கு சென்று சம்பாதித்தல் என்பது தன்னம்பிக்கை மட்டுமல்ல உங்களுக்கான மரியாதையும் சுய அடையாளமும் அதுதான்
2. Two wheeler அல்லது கார் அல்லது இரண்டுமே ஓட்டக் கற்றுக்கொள்ளுங்கள்
3. நிதி மற்றும் சேமிப்பு சார்ந்த அடிப்படை தகவல்களை தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள். NetBanking, Mobile Banking, போன்ற ஆன்லைன் பரிவர்த்தனைகள் EB bill , Insurance , Tax போன்றவற்றை எப்படி கையாள்வது என்பது குறித்தும் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்
4. தனியாக பயணம் செய்யக் கற்றுக் கொள்ளுங்கள். எப்போதும் அம்மா வீடு , உறவினர் வீடு என்றால் கணவர் தான் கொண்டு வந்து விட வேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள்திருமணம் ஆனாலும் உங்கள் நட்பு வட்டத்தை கைவிடாதீர்கள். உங்களுக்கென்று hobbies வைத்துக்கொண்டால் திருமண வாழ்வின் Routine மீதான சலிப்பு வராது.
5. உனக்காக உனக்கு பிடிச்ச எல்லாமே நான் மாத்திக்கறேன் பாரு என்று சொல்லி மாட்டிக்கொள்ளாதீர்கள் ( இருவருமே) . சில அடிப்படை பழக்கவழக்கங்கள் என்றுமே மாற்ற முடியாது. இதுதான் நீங்கள் என உங்களுக்கென்று இருக்கும் சில தனித்தன்மையை என்றுமே விட்டுக் கொடுக்காதீர்கள். நீ முன்ன மாதிரி இல்லனு திருமண உறவில் பிரச்சனை வர காரணமே நான் மாத்திக்கறேன் பாரு என்ற வார்த்தைகள் தான்
6. திருமணத்திற்கு பிறகு வேலைக்கு செல்லுதல் , குழந்தை பிறப்பு , மேற்படிப்பு படிக்கும் ஆசை, குறித்து இருவருமே முன்னர் கலந்து பேசிவிடுவது நல்லது
7. திருமணம் என்பது ஒரு Responsibility அதை முடிந்த அளவிற்கு சிறப்பாக செய்யவேண்டும் என்றால் அதற்கான புரிதல் வர கண்டிப்பாக 1 வருடம் தேவை. இந்த உலகத்தில் மிகவும் கடினமான விஷயம் ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்வதுஆனால் மிகவும் சுவாரஸ்யமான விஷயமும் அதுதான்அதனால் ஊடல் வரும் போது வெட்கம் மானம் பார்க்காமல் சரண்டர் ஆகிவிட்டால் ( இருவருக்கும் இது பொருந்தும் ) உங்கள் உறவு மேலும் பலப்படும் . புரிதலும் அதிகரிக்கும்
8. உங்கள் குழந்தைகள் உங்களை பார்த்து தான் வளரும் என்பதால் இருவருக்கும் இடையிலான conversation இல் அதிகம் கவனம் எடுத்து கொள்ளுங்கள். கணவன் மனைவியின் மகிழ்ச்சியே குழந்தையின் நிம்மதி
9. திருமணம் என்பது உங்கள் வாழ்வில் ஒரு நிகழ்வு. அது Final Destination கிடையாது. அதான் திருமணம் ஆகவிட்டதே என உங்களை நீங்களே ஒரு வட்டத்திற்குள் அடைத்துக் கொள்ளாதீர்கள். உங்கள் வாய்ப்புகளை பொறுத்து திறமைகளையும் ஆளுமையையும் வளர்த்துக்கொள்ளுங்கள்.
உடல்நலனில் ்அக்கறை எடுத்துக்கொள்ளுங்கள்.உங்கள் பிள்ளைகளுக்கு பெண்கள் குறித்த நல்ல பிம்பத்தை நீங்கள் கட்டமையுங்கள்
10. பிரச்சனை இல்லாத திருமண உறவு இல்லை. ஆரம்பம் முதலே எந்த பிரச்சனை வந்தாலும் உங்களுக்குள் பேசி தீர்க்க முயற்சி செய்யுங்கள்.3 ஆம் நபர் வந்து தலையிடும் அளவிற்கு யாருக்கும் இடம் கொடுக்காதீர்கள். அது விரிசலை தான் அதிகரிக்குமே தவீர பெரும்பாலும் தீர்வு கொடுப்பதில்லை.
Last But not Least திருமணம் , குழந்தை எல்லாம் உங்களுடைய சாய்ஸ் தான்.
ஆக நீங்கள் முடிவெடுங்கள்
இன்னொன்றை எப்போதும் மறக்காதீர்கள்
“ கட்டிய கணவன் கைவிட்டாலும் கற்ற கல்வி எந்த பெண்ணையும் கைவிட்டதில்லை”
திருமண உறவில் பிரச்சனை ஏற்பட்டால் உங்களுக்கு Instant தைரியம் கொடுப்பது நீங்கள் படித்த படிப்பும் உங்கள் சம்பளமும் தான்
இன்றைய சூழலில் எப்படியாவது படித்து சொந்த காலில் நின்று பிறகு திருமணம் செய்யுங்கள் வாழ்த்துக்கள்
🙏🌹 நன்றி இணையம் 🌹🙏