பிறந்தான் என்பதன் உண்மை என்ன?

மணக்கால் அய்யம்பேட்டை | 4:36 PM | Best Blogger Tips

 No photo description available.

 

பிராமணன் தலையில் பிறந்தான்;
சத்திரியன் தோளில் பிறந்தான்;
வைஷியன் தொடையில் பிறந்தான்;
சூத்திரன் பாதத்தில் பிறந்தான்
என்பதன் உண்மை என்ன?
 
புருஷ சூக்த்தத்தில் வரும் ஸ்லோகம் 
 
*"பிராமணஸ்ய முகமாஸீத்,*
*பாஹூ ராஜன்ய: க்ருத:*
*ஊரு ததஸ்ய யத்வைஸ்ய:*
*பத்ப்யாகும் சூத்ரோ அஜாயத"*
*என்று புருஷ சூக்தத்திலும் உள்ளது.*
 
இந்த வரிகளுக்கு அர்த்தம்
 
பிராமனணுக்கு முகமே பலம். வேதம் ஓதும் பிராமணன் முக லட்சணத்தோடு விளங்கவேண்டும். மேலும் வாயால் நல்லாசி வழங்கவும். நல் உபதேசம் செய்யவும், நல் மந்திரம் உச்சாடனம் செய்யவும் முகமே துணை. எனவே பிராமணணுக்கு முகபலம் தேவை. 
 
(பிராமணன் முகத்தில் பிறந்தான் என்பது தவறு.)
 
சத்திரியனுக்கு தோள் பலம் தேவை.
 
சத்திரியன் வாள் கொண்டு எதிரிகளிடம் இருந்து மக்களை காப்பாற்றவும், பாதுகாக்கவும், வறியவர்களுக்கு கொடை அளித்து ஆதரிக்கவும் தோள் பலம் கொண்ட கரங்கள் தேவை. (ஷத்திரியன் தோளில் பிறந்தான் என்பது தவறு.)
வைசியன் உட்கார்ந்த நிலையில் வியாபாரம் செய்பவன். எனவே வியாபாரம் செய்யவும், கணக்கு வழக்குகளை பார்க்கவும் வைசியனுக்கு தொடை பலம் மிக்கதாக விளங்க வேண்டும்.
 
( வைசியன் இடுப்பில் பிறந்தான் என்பது தவறு.)
 
சூத்திரன் உழவு செய்பவன். உழவு செய்பவனுக்கு கால் பலம் தேவை. கால்கள் பலமாக இருந்தால் தான் பயிரிடவும் விவசாயத்தை பராமரிக்கவும் முடியும்.
 
(சூத்திரன் காலில் பிறந்தான் என்பது தவறு.)

 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏 

🌷 🌷🌷 🌷   🌷 🌷🌷 🌷