நேதாஜிக்கு நேரு செய்த மிகப்பெரிய துரோகம்
அஹமது ஹெச் ஜாஃபர் 1946 அக்டோபர் 3 அன்று உள்துறை மந்திரியாக இருந்த சர்தார் வல்லபாய் படேலிடம் நேதாஜி உயிருடன் இருக்கிறாரா? இல்லையா? என்பதற்கு ஏதாவது ஆதாரங்கள் உள்ளதா என்று கேட்டதற்கு "இல்லை" என்று பதில் கூறினாராம்.
சர்தார் மங்கள் சிங்கின் இதே கேள்விக்கும் இதேபதில் அளித்துள்ளார். மேலும் மங்கள் சிங் "நேருஜி நேதாஜி இறந்துவிட்டதாகக் கூறியுள்ளாரே, அது அரசாங்கத்தின் கருத்தா அல்லது சொந்தக் கருத்தா" என்று கேட்டதற்கு அரசாங்கத்திற்கு எந்தக் கருத்தும் இல்லை என்று கூறினாராம்.
குருஷேவ் நௌரோஜி என்ற காந்திஜியின் காரியதரிசி காந்திஜி சார்பாக புரஃபசர் லூயிஸ் பிஷருக்கு எழுதிய கடிதத்தை ஃபைரவ் சந்திர பட்டாச்சார்யா, பிரின்ஸ்டன் யுனிவர்சிடி, USA- 1993-ல் பார்த்திருக்கிறார்.
அதன் ஒளிநகலை அமியா நாத் போஸ்க்கும் சமர் குஹாவிற்கும் அனுப்பியுள்ளார்.அக்கடிதம் 1946 ஜூலை 22-ல் எழுதப்பட்டுள்ளது.
அதில் "இந்திய ராணுவத்தினருக்கு இந்திய தேசிய ராணுவத்தினரிடம் பரிவு உள்ளது. நேதாஜி ரஷ்யாவின் உதவியுடன் இந்தியா திரும்பினால் இந்தியர்களின் எழுச்சியை காந்தியாலோ காங்கிரசாலோ தடுக்க இயலாது", என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் அந்தக் கடிதத்தில் நேதாஜியின் அப்போதைய நிலைமை குறித்தும் கேள்விகள் உள்ளன. காந்திஜி 1946 ஜனவரி 6-ல் மேற்கு வங்கத்தில் காண்டை என்ற இடத்தில் நடந்த தொழிலாளர் கூட்டத்தில் நேதாஜி உயிருடன் இருப்பதாகக் கூறினார்.
நேருவுக்கு நேதாஜியிடம் இருந்து கடிதம் வந்ததாக இரகசியத் தகவல் உள்ளது. அதில் தான் ரஷ்யாவில் உள்ளதாகவும் அங்கிருந்து இந்தியா வரவிரும்புவதாகக் குறிப்பிட்டிருந்தாராம்.
மீரட்டைச் சேர்ந்த ஷியாம்லால் ஜெயின் என்பவர் கோசலா கமிஷன் முன்பு கொடுத்த விவரம் பின்வருமாறு:
1945 டிசம்பர் 26 அல்லது 27 அன்று ஸ்ரீ ஜவஹர் லால் நேரு என்னை ஸ்ரீ ஆசஃப் அலி இருப்பிடத்திற்கு தட்டச்சு இயந்திரத்துடன் வரச்சொன்னார்.
கொஞ்சம் தட்டச்சு செய்த பிறகு அவர் தனது அங்கியின் பையிலிருந்து எடுத்த ஒரு தாளை 4 நகல் தட்டச்சு செய்யும்படி கூறிவிட்டு ஸ்ரீ ஆசஃப் அலியுடன் பேசப் போய்விட்டார்.
அதில் "நேதாஜி 1945 ஆகஸ்டு 23 அன்று பைரன்(மஞ்சூரியா) பகுதிக்கு பகல் சுமார் 1.30 மணிக்கு (சைகானிலிருந்து) வந்தார். அது ஜப்பானியரின் வெடிகுண்டு வீசும் விமானம். நேதாஜி தேநீரும் வாழைப்பழமும் சாப்பிட்டார்.
நேதாஜி கைக்கு ஒன்றாக 2 பெட்டிகளை எடுத்துக்கொண்டு 4 பேருடன் ஒரு ஜீப்பில் ஏறினார்.
அதில் ஒருவர் ஜெனரல் ஷெய்தி(நேதாஜியுடன் விமான விபத்தில் மரணமடைந்தததாகக் கூறப்பட்டவர்).
ஜீப் ரஷ்ய எல்லைப்பக்கமாகச் சென்றது. 3 மணி நேரம் கழித்து ஜீப் திரும்பி வந்து விமானியிடம் தகவல் தெரிவித்தபிறகு விமானம் டோக்கியோ சென்றது."', என்று எழுதியிருந்தது.
கையொப்பம் புரியாததால் ஸ்ரீ நேருவுக்காக காத்திருந்த போது கடிதத்தைப் பலமுறை படித்தேன். பின்னர் நேரு 4 தாள்களைக் கொடுத்து அவர் கூறுவதைத் தட்டச்சு செய்யச் சொன்னார். அது
"திரு.கிளமண்ட் அட்லீ,
பிரிட்டிஷ் பிரதம மந்திரி,
10, டௌனிங்க் தெரு,
லண்டன்.
அன்புள்ள திரு.அட்லீ,
சுபாஷ் சந்திர போஸ், உங்கள் போர்க்குற்றவாளி, ரஷ்ய எல்லைக்குள் வர ஸ்டாலினால் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று நம்பத்தகுந்த வட்டாரத்தின் மூலம் அறிகிறேன். இது ரஷ்யாவின் ஏமாற்றுவேலையும் நம்பிக்கைத் துரோகமும் ஆகும். ரஷ்யா, பிரிட்டன், அமெரிக்காவுடன் கூட்டு இருக்கும் போது இப்படிச் செய்யக்கூடாது. அதைப் பொருட்படுத்தாமல் நீங்கள் செய்ய வேண்டியதைச் செய்யுங்கள்.
உங்கள் அன்புள்ள,
ஜவஹர் லால் நேரு.
மேற்கண்ட விஷயம் உள்ள முகவரி: hindustantimes.com/news/speacials/Netaji/pradip5.htm (மேற்கண்ட முகவரியிலிருந்து அந்த ஆதாரம் நீக்கபட்டுள்ளது)
நேதாஜி இந்திய தேசிய ராணுவம் அமைத்து நேச நாடுகளுக்கு கடுமையான நெருக்கடி கொடுத்ததால் நேசநாடுகள் அவரைப் போர்க்குற்றவாளியாகக் கருதின.
அவர்கள் குற்றம் என்று குறிப்பிடுவது இந்திய தேசிய ராணுவம் அமைத்து இந்திய சுதந்திரத்திற்காக நாடு நாடாக அலைந்து ஆதரவு திரட்டிப் பாடுபட்டது ஆகும்.
இந்திய தேசிய ராணுவத்தின் தியாகம் மிகுந்த செயல்பாடுகளால் இந்திய ராணுவத்திற்குள்ளேயே ஆங்கில எதிர்ப்பு தோன்றிவிட்டது.
அதனால்தான்- இனியொரு போராட்டம் இந்தியாவில் ஏற்பட்டால் அதை அடக்க இந்திய ராணுவத்தை நம்ப முடியாது என்பதால்தான்- பிரிட்டிஷ் அரசு இந்தியாவை விட்டு வெளியேறியது.
அதனால்தான் நேசநாடுகளுக்கு நேதாஜி மீது அப்படி ஒரு கோபம். பார்த்த இடத்தில் தண்டிக்கக் காத்திருந்தார்கள்.
ஆனால் அவர் யார் கையிலும் சிக்கவில்லை. இந்திய காங்கிரஸ்காரர்களை விட ஜப்பன் அரசுக்கு நேதாஜி மீது மிகுந்த மரியாதை இருந்ததால்தான் நேதாஜி இறந்துவிட்டதாக ஜப்பான் வானொலியும் அரசாங்கமும் அறிவித்தது.
நேச நாடுகள் கூட்டணியில் இருந்தாலும் ரஷ்ய அரசு அவரைத் தனது பாதுகாப்பில் வைத்து இருந்து ஆனால் இந்திய பிரதமர் நேருக்கு மகாத்மா காந்தி அவர்களுக்கும் நேதாஜியை இந்தியாவில் விட கூடாது என்று வஞ்சகம் செய்து நேதாஜியை வீழ்த்தினார்கள்
நேதாஜியும் INA படையும் இரத்தம் சிந்தி பெற்று தந்த சுதந்திரத்தை நேதாஜியின் தியாகத்தை மறைத்து காந்தியும் நேருவும் காங்கிரஸ் வாயிலாக கத்தியின்றி இரத்தம் இன்றி இந்திய சுதந்திரத்தை அகிம்சை வழியில் பெற்றதாக வரலாற்றில் பொய்யான தகவல் பதியப்பட்டது
பாரத தேச தந்தை நேதாஜி சுபாஸ் சந்திர போஸ் அவர்களுடைய வீர தீர துணிச்சலான விடுதலை போரை போற்றும் வகையில் துணிச்சல் தினமாக (“ பராக்ரம தினம்” )ஆக ஆண்டு தோறும் கொண்டாட மோடி அவர்களுடைய மத்திய அரசு அரசாணை பிறப்பித்து உள்ளார்கள்
இன்று 23.1.24 இந்தியா முழுவதும் நேதாஜி அவர்களின் திருஉருவ படத்தை வைத்து மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது
நேதாஜி சிலை உள்ள இடத்தில் அதிக எண்ணிக்கையில் பாஜக தொண்டர்கள் மற்றும் பொது மக்கள் மாலை அணிவித்து மாரியாதை செய்து சிறப்பித்தனர்