மனைவி என்றால்....

மணக்கால் அய்யம்பேட்டை | 10:34 AM | Best Blogger Tips

 May be an image of 5 people and bicycle

#மனைவி என்றால்
அன்பின்இன்னொரு சொல் என்றும் கொள்ளலாம்!
 
பணிக்கு செல்லும் மனைவிகள் எல்லாம் குடும்பம் சுமக்கும்
அன்பு தேவதைகள்!
 
ஆணுக்கு ஒரு பக்க மத்தளம் என்றால் பணிக்கு செல்லும் மனைவிகளுக்கு இரண்டு பக்க மத்தளம்!
 
பெண் என்கிற கிரீடம் அழகு தான்
என்றாலும் அவளை வெளியில்
உள்ள சமூகம் கிள்ளி கொண்டேதான் இருக்கும்!
 
கணவர்கள் கொஞ்சம் கை கொடுங்கள். உங்களுக்காக வாழ்ந்துகொண்டு
இருக்கும் அந்த அன்பு பறவையை
அரவணைத்து வைத்து
கொள்ளுங்கள்!
 
அன்பாகப் பேசுங்கள்
சமையல் பணியை நேரம் கிடைக்கும் போதெல்லாம் பகிர்ந்து கொள்ளுங்கள்!!
 
மனைவிக்கு கை வலியோ, உடல் வலியோ, மனசு வலியோ புரிந்து கொள்ளுங்கள்!
 
உங்கள் மகளை கவனிப்பது போல் உங்கள் மனைவியையும்
கவனித்து கொள்ளுங்கள்!
 
உடல் மனசு இரண்டையும்
மென்மை படுத்துங்கள்!
சமையலை பாராட்டுங்கள்
அவள் சமையல் அறையில்
பட்டிருக்கும் வெப்பம் தொட்ட தழும்பைப் பாருங்கள். அவை உங்களுக்காக
அவள் பட்ட அன்பின் சின்னம்.
 
அவள் செய்வது சமையல்
அல்ல. அன்பின் அழகு.
 
தினசரி நன்றி சொல்லுங்கள்.
 
குறுந்தகவல்களை மனைவிக்கும்
அனுப்பலாமே!
 
அவள் குடும்பத்திற்காக எரியும் இன்னொரு மெழுகுவர்த்தி.
 
வாழ்க்கை முழுதும் கூட வரும்
அன்பு தேவதை!!
 
கடவுள் நம்முடன்
இருக்கமுடியாது என்பதற்காக
கடவுள் கொடுத்த வரம்
அன்னையும் மனைவியும்!
 
அவள் கண்களில் கண்ணீர்
வராமல் பார்த்து கொள்ளுங்கள்.
 
மூன்றாவது கையாக நீங்கள் இருங்கள். பெண் கண்ணீர் விட்டால் அங்கே செல்வம் தங்காது....🙏🙏

 

🌷 🌷🌷 🌷  May be an image of 1 person, beard and smiling 🌷 🌷🌷 🌷 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🙏✍🏼🌹

Ramesh

 
🙏✍🏼🌹