வாழ்க்கையில் காயப்படுத்தும் விஷயங்களே

மணக்கால் அய்யம்பேட்டை | 10:53 AM | Best Blogger Tips

 chinnuadhithya – Page 144 – A smile is a curve that straightens everything

தந்தை இறந்த பின் தன் தாயை கவனிக்க முடியாமல் முதியவர் இல்லத்தில் சேர்த்து விட்டார் மகன் .
 
மனைவியும் வேலைக்கு போவதால் தன் தாயை வீட்டில் கவனிக்க யாருமில்லை என்ற காரணத்திற்காக முதியவர் இல்லத்தில் சேர்த்து விட்டார். 
 Raja thatha's blogs: Old mother writes to her son
மாதத்திற்கு ஒரு முறை தன் தாயை அங்கு சென்று சந்தித்து வந்தார். 
 
வருடங்கள் கடந்தன.
 
ஒருநாள் அவருடைய தாய் ரொம்பவும் முடியாமல் இருப்பதாக தகவல் வந்தது. 
 
மகனும் உடனடியாக தன் தாயை சந்திக்கச் சென்றார். 
 
தாய் சாகும் தருவாயில் இருந்தார்கள்.
 
“உங்களுக்கு ஏதாவது வேண்டுமா?” என மகன் கேட்டார். 
 
“இந்த முதியவர் இல்லத்தில் மின் விசிறிகள் எதுவும் இல்லை. 
 
காற்று இல்லாமலும், கொசுக் கடித்தும் நிறைய நாட்கள் தூங்காமல் இருந்திருக்கிறேன். 
 
இங்கு தரும் கெட்டுப் போன சாப்பாட்டை சாப்பிட முடியாமல் பல நாட்கள் சாப்பிடாமல் தூங்கியிருக்கிறேன். 
 
எனவே இந்த இல்லத்திற்கு சில மின் விசிறிகளும் , சாப்பாட்டை கெடாமல் பாதுகாத்து வைத்திருக்க ஒரு குளிர்சாதனப் பெட்டியும் வாங்கிக்கொடுப்பாயா?” என மெல்லிய குரலில் தாய் கேட்டார்.
 
மகன் ஆச்சரியப்பட்டான். 
 
“பல வருடங்களாக நான் உங்களை பார்க்க வருகிறேன். 
 
ஒருநாள் கூட இப்படி ஒரு குறையை சொல்லவில்லை. 
 
இப்போது மட்டும் ஏன் இதை கேட்கிறீர்கள்?” என கேட்ட மகனின் முகத்தை மெல்ல ஏறெடுத்துப் பார்த்தார்.
 
“மகனே இங்கு மின் விசிறி இல்லாமல் கொசுக்கடியை தாங்கிக் கொண்டு உறங்குவதற்கு நான் பழகிக்கொண்டேன். 
 
இங்குள்ள பசியையும், துன்பங்களையும் என்னால் பொறுத்துக் கொள்ள முடியும்.
ஆனால் உனது குழந்தைகள் உன்னை இந்த இல்லத்திற்கு அனுப்பும் போது உன்னால் அவற்றை தாங்கிக்கொள்ள முடியாது என நினைத்து வருந்துகிறேன். 
 
அதனால் தான் இப்போது கேட்கிறேன்” என்றார்.
 
வாழ்க்கையில் காயப்படுத்தும் விஷயங்களே கற்றுக்கொடுக்கவும் செய்கின்றன.